மலையாளத்தில் மக்கள் செல்வன்..; ஜெயராமுடன் இணைந்தார்

மலையாளத்தில் மக்கள் செல்வன்..; ஜெயராமுடன் இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Makkal Selvan Vijay Sethupathi joins with Jayaram in set of Marconi Mathai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

தமிழை தொடர்ந்து தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

சிரஞ்சீவியுடன் இணைந்து சைரா நரசிம்ம ரெட்டி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளவர்.

தற்போது ‘மார்க்கோனி மத்தாய்’ என்கிற படம் மூலம் மலையாள சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

இதில் நடிகர் ஜெயராமுடன் இணைந்து நடிக்கிறார்.

நாயகியாக அங்கமாலி டைரீஸ் புகழ் அன்னா ரேஷ்மா ராஜன் நடிக்க, சனில் கலத்தில் என்பவர் இயக்குகிறார்.

இந்தப்படத்தில் ரேடியோவும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறுகிறதாம்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது.

தமிழ், மலையாளம் என இருமொழி படமாக இது உருவாகவுள்ளதால் சென்னை மற்றும் கேரளாவின் முக்கிய பகுதிகளில் இதன் சூட்டிங் நடக்கிறதாம்.

Makkal Selvan Vijay Sethupathi joins with Jayaram in set of Marconi Mathai

ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நயன்தாராவின் காதலர்..?

ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நயன்தாராவின் காதலர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Vignesh Shivan likely to pen lyrics for Rajini Darbarலைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள படம் `தர்பார்’.

இப்பட போஸ்டர் அண்மையில் வெளியாகி இணையத்தை அதிரவைத்தது.

ஏப்ரல் 10ஆம் தேதி இதன் சூட்டிங் மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் ரஜினிகாந்த் போலீஸ் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

அனிருத் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் அனிருத்தின் ஒரு பாடலுக்கு விக்னேஷ் சிவன் பாடல் எழுத வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் மும்பை சென்ற விக்னேஷ் சிவன், ரஜினியை சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியானதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Director Vignesh Shivan likely to pen lyrics for Rajini Darbar

Breaking சுதா கொங்கரா இயக்கும் சூர்யா 38 டைட்டில் லுக் வெளியானது

Breaking சுதா கொங்கரா இயக்கும் சூர்யா 38 டைட்டில் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sudha Kongara and Suriyas 38 the movie titled Soorarai Pottruசுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா38’ பட பூஜை ஓரிரு தினங்களுக்கு முன் நடைப்பெற்றது.

இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா என்டர்டெயின்மெண்ட்டின் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைக்க, நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்ய கலை இயக்குனராக ஜாக்கி பணியாற்றுகிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு சூரரைப் போற்று எனத் தலைப்பு வைத்து டைட்டில் லுக் போஸ்டரை சற்றுமுன் சூர்யா வெளியிட்டுள்ளார்.

Sudha Kongara and Suriyas 38 the movie titled Soorarai Pottru

தேசிய விருது போட்டியில் தாதா 87

தேசிய விருது போட்டியில் தாதா 87

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectதாதா 87 படத்திற்கு கிடைத்த பெருமை – குவியும் வாழ்த்துக்கள்!

தாதா 87 படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ், ஆனந்த பாண்டி, ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி இருந்த திரைப்படம் தாதா 87.

இந்த படத்தில் ஸ்ரீ பல்லவி திருநங்கையாக நடித்து தன்னுடைய துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

திருநங்கைகளை பெண் என்று அழைப்பபோம் என்ற இயக்குனர் குரல் புரட்சி பேசும் படமாக இப்படம் உருவாகி இருந்ததால் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்திருந்தது.

இந்நிலையில் தற்போது திருநங்கையாக நடித்து அசத்திய ஸ்ரீ பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்திற்கு ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்திருக்க, லியாண்டர் லீ மார்டின் இசையமைத்திருந்தார்.

இதனையறிந்த ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தாதா 87 படக்குழுவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பிரேக்கிங் நியூஸ் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பானுஸ்ரீ

பிரேக்கிங் நியூஸ் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பானுஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)நடிகை பானுஸ்ரீ மொழி மற்றும் எல்லைகள் கடந்து குறுகிய காலத்தில் மிகவும் பிரபலபமானவர். தமிழிலும் அவரது புகழை பரப்பியிருக்கிறது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2. தற்போது நடிகர் ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.
“இந்த படத்தில் நான் ஜெய்யின் காதலியாக நடிக்கிறேன், அவரது அப்பாவித்தனத்தால் அவர் மீது காதல் வயப்பட்டு, பின் அவரை திருமணம் செய்து கொண்டு, பின்னர் ஈகோ மற்றும் பிடிவாதத்தால் பிரிந்து விடும் கதாபாத்திரம். நான் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால அதில் அடுக்குகள் இருக்கும். ஆரம்பத்தில், நான் துடுக்குத்தனமான மற்றும் உற்சாகமான ஒரு பெண்ணாக இருப்பேன். திருமணத்திற்கு பிறகு கலாச்சாரத்துடன் ஒன்றி வாழும் அமைதியான பெண்ணாக மாறி விடுவேன்” என்கிறார் பானுஸ்ரீ.

நாயகனை பிரிந்து விடுவேன் என அவர் கூறுவதற்கான காரணத்தை பற்றி ஆரவ்த்துடன் கேட்டால், சின்ன சிரிப்புடன் அதை பற்றி கூறுகிறார். அவர் கூறும்போது, “ஒவ்வொரு விஷயத்தையும் நானே சொல்லி விட்டால் தியேட்டருக்கு போய் ரசிகர்கள் எதை பார்ப்பார்கள். பிரேக்கிங் நியூஸ் சமூகத்தின் நலனுக்காக சூப்பர் ஹீரோவாக மாறும் ஒரு சாதாரண மனிதனை சுற்றி நிகழும் ஒரு ஃபேண்டஸி ஆக்‌ஷன் படம். இது வெறுமனே கிராஃபிக்ஸ் வைத்து உருவாகும் படம் அல்ல, நல்ல எமோஷனை உள்ளடக்கிய படம், நல்ல கருத்துக்களையும் கொண்டுள்ளது” என்றார்.

ஜெய் மற்றும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படக்குழுவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது, “இவ்வளவு புகழ் பெற்றவராக இருந்தாலும் ஜெய் மிகவும் எளிமையாக இருக்கிறார். உடன் நடிப்பவர்களுக்கு மிகவும் உதவியாகவும் ஆதரவாகவும் இருக்கிறார். இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் தெளிவான ஒரு மனிதர். கதையில் என்ன சொன்னாரோ அதை எடுக்கிறார்” என்றார்.

பானுஸ்ரீ ஏற்கனவே 15 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்டார். அடுத்து சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

நாகர்கோவில் சார்ந்த திருக்கடல் உதயம் தயாரிக்கும் இந்த படத்தில் உலக அளவில் 450CG தொழில்நுட்ப வல்லுனர்கள் வி தினேஷ்குமார் மேற்பார்வையில் Vfx பணிகளை செய்து வருகிறார்கள். படத்தில் 90 நிமிடம் அளவிலான CG காட்சிகள் இருக்கின்றன. ஜானிலால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பை கையாள்கிறார்.

தும்பா படப்பிடிப்பு நிறைவு

தும்பா படப்பிடிப்பு நிறைவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)அனிருத்தின் ஸ்டுடியோவுக்கு வந்திருந்த புலி தும்பா வேண்டுமானால் அழையா விருந்தாளியாக இருந்திருக்கலாம் (விளம்பர வீடியோவில்), ஆனால் இப்போது ஒவ்வொரு குடும்பமும், அதில் இருக்கும் குழந்தைகளும் புலி தும்பாவின் ராஜாங்கத்துக்குள் பயணிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த கோடையின் மிகவும் விரும்பப்படும் மற்றும் எதிர்பார்க்கப்படும் படமாக தும்பா இருக்கிறது. மிக குறுகிய காலத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்திருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

குறித்த நேரத்தில் படப்பிடிப்பு முடிவடைந்த மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர்கள் இது குறித்து கூறும்போது, “தயாரிப்பாளர்களான நாங்கள் இருவரும் எப்போதும் பரஸ்பர ஆர்வத்தை பகிர்ந்து கொள்வது என்பது யதேச்சையாக அமைந்தது. இருவருமே பயணக்கதை மற்றும் சாகச அடிப்படையிலான திரைப்படங்களை, குறிப்பாக காடுகளின் பின்னணியில் உருவாகும் படங்களை ரசிப்பவர்கள். இயக்குனர் ஹரிஷ்ராம் எங்களுக்கு கதையை விவரிக்கும் போது, நாங்கள் மிகவும் ரசித்தோம், ஆனால் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை பார்க்கும் போது தான், அந்த அடர்ந்த காடுகளில் படம் பிடிக்க ஒட்டுமொத்த குழுவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை உணர்ந்தோம். சில இடங்களில், படப்பிடிப்பு நடத்த மிகவும் கடினமாக இருந்தது, ஆனாலும் அதையும் தாண்டி படத்தை மிகச்சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். வாகமோன், இடுக்கி, பாலக்காடு, சென்னை மற்றும் குமிலி ஆகிய இடங்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். திரையரங்குகளில் பார்வையாளர்களால் வெறுமனே படத்தை மட்டும் ரசிக்காமல், இந்த இடங்களின் அழகிய காட்சிகளையும் நிச்சயம் ரசிப்பார்கள் என்பது உறுதி” என்றார்.

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் டைக்ரஸ் தும்பா நடித்த படத்தின் அறிமுக வீடியோ மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த ‘புதுசாட்டம்’ பாடல், YouTubeல் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. மற்ற பாடல்களுக்கு விவேக் மெர்வின் & சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.

தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே குழந்தைகளின் செல்லமாக மாறி விட்ட டைக்ரஸ் தும்பா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. நரேஷ் இளன் (ஒளிப்பதிவு), கலைவாணன் (படத்தொகுப்பு), ஆக்‌ஷன் 100 (சண்டைப்பயிற்சி), ராம் ராகவ், ஏ ஆர் பிரபாகரன் (வசனம்), வாசுகி பாஸ்கர், பல்லவி சிங் (ஆடை வடிவமைப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சார்பில் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து சுரேகா நியாபதி தயாரித்திருக்கிறார். KJR ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் உலகளாவிய வெளியீட்டு உரிமைகளை வாங்கியிருக்கிறார்.

More Articles
Follows