சூப்பர் ஸ்டார் & உலகநாயகன் சந்திப்பு..: ஆதரவு கேட்டாரா கமல்.? வாய்ஸ் கொடுப்பாரா ரஜினி.?

25 வருடங்களாக அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 29ல் தன் உடல்நிலையை காரணம் காட்டி கட்சி ஆரம்பிக்கும் வாக்கை தவறவிட்டார்.

பொது மக்கள் மற்றும் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து ஓர் அறிக்கை வெளியிட்டார்.

அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு இருந்த கமல்.. “ரஜினியின் முடிவு ரசிகர்களை போல தனக்கும் வருத்தமே. ஆனால் என் நண்பனின் உடல்நலமே முக்கியம். சென்னை சென்றதும் ரஜினியை சந்திப்பேன்” என்றார்.

சென்னை வந்தவுடன் காலில் சிகிச்சை மேற்கொண்டதால் ஓய்வில் இருந்தார் கமல்.

இந்நிலையில் இன்று ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்றார் கமல்.

இருவரும் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது ரஜினி உடல்நலம் குறித்து கேட்டுள்ளார் கமல்.

பின்னர் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கமல் & ரஜினி் ஆலோசனை கண்டிப்பாக நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்பதால் அவரது ஆதரவை பெற பல கட்சிகள் முயன்று வருகின்றன.

எனவே கமலும் ரஜினியின் ஆதரவை கேட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தன் திரையுலக ஆசான் கமலுக்கு ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா? என காத்திருந்து பார்ப்போம்..

Makkal Needhi Maiam’s Chief Kamal Haasan met his contemporary Rajinikanth in poes garden

Overall Rating : Not available

Latest Post