ஆபாச அரசியல் : ‘மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்’ என சொல்ல விரும்பல..: கவலையில் கமல் கடிதம்

ஆபாச அரசியல் : ‘மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்’ என சொல்ல விரும்பல..: கவலையில் கமல் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது.

அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான மட்டும் தேர்தல் கடந்த (பிப்) 19ஆம் தேதி நடந்து முடிந்தது.

இதில் பெரும்பாலான இடங்களில் திமுக கட்சியே வெற்றி பெற்றது.

தற்போதுள்ள நிலையில் நடிகர்களில் விஜய்காந்த் கமல்ஹாசன் சரத்குமார் ஆகியோரை விட விஜய் முன்னிலையில் உள்ளார்.

இவர்களில் தன் கட்சிக்கு (விஜய் மக்கள் இயக்கம்) ஓட்டு போடுங்கள் என்று ஒருபோதும் விஜய் கேட்டதில்லை..

ஆனாலும் இவரது கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றனர்.

ஆனால் கமல் கட்சியான மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மக்கள் நீதி மய்யம் சட்டமன்ற உள்ளிட்ட தேர்தலை சந்தித்து வருகிறது.

2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசனால் கூட அந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

கமலின் தேர்தல் வியூகங்கள் சரியில்லை எனக் கூறி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அப்போது வெளியேறியது கூட தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் தன் தேர்தல் தோல்வி குறித்து கமல் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம், ஊடக பலம் கொண்டவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட துணிந்த ம.நீ.ம வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான்.

நீங்கள் போட்டியிட்ட வார்டுகளில் நீங்கள் வென்றதாகவே நினைத்து மக்கள் பணியை தொடருங்கள். உங்களை வெற்றி பெற செய்யாததை நினைத்து வருந்தும் அளவிற்கு சேவையாற்றுங்கள்.

இடங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்காளர்களே தங்களது ஓட்டுகளை செலுத்தி இருக்கிறார்கள். கழகங்கள் போட்ட கள்ள ஓட்டுகளை கழித்தால், இன்னமும் கூட குறைவான சதவீத மக்களே இந்த தேர்தலில் பங்கேற்றிருப்பார்கள்.

தமிழகத்தில் நிகழும் ஆபாச அரசியலை பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. நாம் பேச வேண்டியது அவர்களிடம்தான்.

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்’ என்பது ஒரு சம்பிரதாயமான வார்த்தை. அதை நான் சொல்ல விரும்பவில்லை. மக்களும் பல சமயங்களில் கூட்டாக சேர்ந்து தவறான முடிவுகளை எடுப்பார்கள்.

வரலாறு நெடுக அதற்கு உதாரணங்கள் உண்டு. எங்களைப் போன்ற நேர்மையாளர்களை, அரசியலை பணம் குவிக்கும் தொழில்வாய்ப்பாக கருதாதவர்களை, வாக்குறுதி தந்துவிட்டு ஏமாற்றாதவர்களை, ஊழலற்ற வெளிப்படையான திறமையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தை சீரமைக்க நினைப்பவர்களை தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை.

என் எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்குத்தான் என 4 ஆண்டுகளுக்கு முன் நான் அறிவித்தது வெறும் வாய்ஜாலம் இல்லை. இடைக்கால வெற்றி தோல்விகள் எங்களின் மக்கள் பணியை என்றுமே பாதித்ததில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் அதற்கு விதிவிலக்கல்ல.

இவ்வாறு கமல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Maiam will fight against all odds and continue to serve the people forever says Kamal Haasan

அத்தனை புகழும் அமீருக்கே..; 15 வருட பயணத்தை பகிரும் நடிகர் கார்த்தி

அத்தனை புகழும் அமீருக்கே..; 15 வருட பயணத்தை பகிரும் நடிகர் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு நாயகனின் அறிமுக படமே மிகப்பெரிய வரலாற்று வெற்றி என்பது மிகவும் அபூர்வம். அதனை 2007-ம் ஆண்டு இதே நாளில் நிகழ்த்திய படம் தான் ‘பருத்தி வீரன்’.

இந்தப் படத்தின் மூலமாகவே கார்த்தி நாயகனாக அறிமுகமானார்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தினை அமீர் இயக்கியிருந்தார்.

இந்தப் படம் செய்த சாதனை, கடுமையாக உழைத்த ஒரு அறிமுக நாயகனுக்கு கிடைத்த வெற்றி.

உலகமெங்கும் மாபெரும் வரவேற்பைப் பெற்று, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகர்களின் பட்டியலில் கார்த்தியையும் இணைத்தது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ச்சியாகத் தனது அடுத்தடுத்த படங்களிலும் தக்க வைத்தார் கார்த்தி.

‘பையா’, ‘நான் மகான் அல்ல’,‘சிறுத்தை’, ‘மெட்ராஸ்’, ‘கொம்பன்’, ‘தீரன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘கைதி’ என மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்து தென்னிந்திய முன்னணி நாயகர்களின் பட்டியலில் ஒருவரானார்.

கமர்ஷியல் வெற்றி மட்டுமன்றி இவரது படங்கள் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

மேலும், 15 ஆண்டுகளில் 20 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அதில் பாதிக்கும் மேல் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற படங்கள்.

அந்தளவுக்குத் தனது திரையுலக வாழ்க்கை பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது வசூல் சாதனை படைக்கும் நடிகராக நிற்கிறார் கார்த்தி.

இன்று ‘பருத்தி வீரன்’ வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இதற்காக பலரும் கார்த்திக்கும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

கார்த்தியும், தனது 15 ஆண்டுக்கால பயணத்துக்கு நன்றி தெரிவித்தார். அவர் கூறியதாவது…

“’பருத்தி வீரன்’ திரைப்படத்தில் என்னுடைய திரை வாழ்க்கை தொடங்கியது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதமாகவே நான் உணர்கிறேன்.

(அந்தப் படத்தில்) என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் சாரால் வடிவமைக்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்பட்டது.

எனக்குக் கிடைத்த அத்தனை புகழும் அமீர் சாரையே சேரும். செய்யும் வேலையில் என்னை முழுமையாக ஆழ்த்திக் கொண்டு அதை ரசித்தும் செய்ய வேண்டும் என்று அவர் எனக்குச் சொன்ன அறிவுரையே நான் கற்ற பல பாடங்களில் பொக்கிஷமாக நினைக்கும் ஒரு பாடம்.

இந்த அழகான பாதையை வகுத்துக் கொடுத்த அமீர் சார், ஞானவேல், அண்ணா, என் அன்பார்ந்த ரசிகர்கள் மற்றும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் என அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்,” என்றார் கார்த்தி.

Karthi thanks note on completing 15 years in film industry

விஜயகாந்த் வீழ்ச்சி.. கமல் சொல்லியும் கேட்கல.. விஜய் சொல்லாமலே நடக்குதே.!

விஜயகாந்த் வீழ்ச்சி.. கமல் சொல்லியும் கேட்கல.. விஜய் சொல்லாமலே நடக்குதே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது.

அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான மட்டும் தேர்தல் கடந்த (பிப்) 19ஆம் தேதி நடந்து முடிந்தது.

இதில் பெரும்பாலான இடங்களில் திமுக கட்சியே வெற்றி பெற்றது.

தற்போதுள்ள நிலையில் நடிகர்களில் விஜய்காந்த் கமல்ஹாசன் சரத்குமார் ஆகியோரை விட விஜய் முன்னிலையில் உள்ளார்.

இவர்களில் தன் கட்சிக்கு (விஜய் மக்கள் இயக்கம்) ஓட்டு போடுங்கள் என்று ஒருபோதும் விஜய் கேட்டதில்லை..

ஆனாலும் இவரது கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

நேற்று வந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் VMI கட்சியைச் சேர்ந்த 3 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர் முகமது பர்வேஸ் வெற்றிபெற்றுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை நகராட்சியில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பூக்கடை மோகன் வெற்றி பெற்றார்.

மேலும் விருதுநகர் மாவட்டம் தென் கொடிக்குளம் பேரூராட்சி 5வது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் ராஜசேகரன் வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால் கமல் கட்சியான மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. விஜயகாந்தின் தேமுதிக கட்சியும் தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மக்கள் நீதி மய்யம் சட்டமன்ற உள்ளிட்ட தேர்தலை சந்தித்து வருகிறது.

2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட கமலால் கூட அந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

கமலின் தேர்தல் வியூகங்கள் சரியில்லை எனக் கூறி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அப்போது வெளியேறியது கூட தங்களுக்கு நினைவிருக்கலாம்.

கூடுதல் தகவல்கள்…

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022

*பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு*

✳️மொத்த பதவியிடங்கள் 7621
✅முடிவுகள் அறிவிக்கப்பட்டது 7596

▪️திமுக 4384
▪️அதிமுக 1206
▪️காங்கிரஸ் 367
▪️பிஜேபி 229
▪️சிபிஐ (எம்) 101
▪️பா ம க 73
▪️அமுமுக 66
▪️வி சி க 51
▪️மதிமுக 34
▪️சிபிஐ 26
▪️தேமுதிக 23
▪️SDPI 16
▪️மனிதநேய மக்கள் கட்சி 13
▪️முஸ்லீம் லீக் 12
▪️நாம் தமிழர் கட்சி 6
▪️புதிய தமிழகம் 3
▪️பகுஜன் சமாஜ் 1
▪️தேசியவாத காங்கிரஸ் 1
▪️கம்னியூஸ்ட் 1
▪️இந்திய ஜனநாயக கட்சி 1
▪️மறுமலர்ச்சி ஜனநாயக கட்சி 1
▪️த ம ம க 1
▪️சுயேட்சை 980

➖➖➖➖➖➖➖➖➖

*நகராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு*

✳️மொத்த பதவியிடங்கள் 3843
✅முடிவுகள் அறிவிக்கப்பட்டது 3627

▪️திமுக 2253
▪️அதிமுக 606
▪️காங்கிரஸ் 146
▪️பிஜேபி 49
▪️சிபிஐ (எம்) 39
▪️பா ம க 46
▪️அமுமுக 32
▪️வி சி க 24
▪️மதிமுக 34
▪️சிபிஐ 19
▪️தேமுதிக 11
▪️SDPI 4
▪️மனிதநேய மக்கள் கட்சி 4
▪️முஸ்லீம் லீக் 23
▪️நாம் தமிழர் கட்சி 0
▪️புதிய தமிழகம் 1
▪️பகுஜன் சமாஜ் 3
▪️தேசியவாத காங்கிரஸ் 0
▪️கம்னியூஸ்ட் 1
▪️இந்திய ஜனநாயக கட்சி 2
▪️ மனிதநேய ஜனநாயக கட்சி 1
▪️த ம ம க 0
▪️ சமத்துவ மக்கள் கட்சி 1
▪️AIMEM 1
▪️Forward Bloc 1
▪️சுயேட்சை 359

➖➖➖➖➖➖➖➖➖

*மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு*

✳️மொத்த பதவியிடங்கள் 1374
✅முடிவுகள் அறிவிக்கப்பட்டது 970

▪️திமுக 739
▪️அதிமுக 131
▪️காங்கிரஸ் 58
▪️பிஜேபி 13
▪️சிபிஐ (எம்) 19
▪️பா ம க 4
▪️அமுமுக 2
▪️வி சி க 11
▪️மதிமுக 13
▪️சிபிஐ 7
▪️முஸ்லீம் லீக் 3
▪️சுயேட்சை 46

Vijayakanth, Kamal Haasan and Vijay party’s votes percentage in local body election

அனிருத் இசைக்கு ரசிகர்கள் முன்னிலையில் தியேட்டரில் நடனமாடிய முகேன் ராவ்

அனிருத் இசைக்கு ரசிகர்கள் முன்னிலையில் தியேட்டரில் நடனமாடிய முகேன் ராவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்களின் நாடித்துடைப்பை அறிந்து அதற்கேற்ப படைப்புகளை வழங்கி வரும் சரிகமா ஒரிஜினல்ஸின் அடுத்த வெளியீடாக பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ள ‘மயக்கிறியே’ அமைந்துள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இப்பாடலின் முன்னோட்டம் சென்னை போரூரில் உள்ள ஜிகே திரையரங்கில் சமீபத்தில் திரையிடப்பட்டது.

‘ஃபிளாஷ் மாப்’ என்று அழைக்கப்படும் நடன நிகழ்ச்சியின் போது, இப்பாடலின் முதன்மை வேடத்தை ஏற்றுள்ள ‘பிக் பாஸ்’ பிரபலமான நடிகர் முகென் ராவ் ரசிகர்களிடையே திடீரெனத் தோன்றி அவர்களை ஆச்சரியப்படுத்தினார்.

ரசிகர்களின் உற்சாக ஆராவாரத்திற்கிடையே முகென் ராய் நடனமாடி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவருடன் இணைந்து பார்வையாளர்களும் ஆட, ஒட்டுமொத்த திரையரங்கிலும் திருவிழாச் சூழல் நிலவியது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஏ என் எஸ் என்டெர்டயின்மென்ட் வழங்கும் *மயக்கிறியே’-வை ஆனந்த் ஆர், ஆர் எம் நாகப்பன் மற்றும் நிக் ஸ்டெல்சன் ஜோ ஆகியோர் தயாரித்துள்ளனர்.

முகென் ராவுடன் நடிகை ஆத்மிகா இப்பாடலின் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.

முன்னணி மால் ஒன்றில் தனது மனதுக்கு பிடித்தப் பெண்ணை சந்திக்கும் இளைஞர் ஒருவருக்குள் உருவாகும் உணர்வுகளின் கலவை தான் ‘மயக்கிறியே’. அனிவீ இசையமைத்துள்ள இப்பாடலை அனிருத் உணர்சி ததும்ப பாடியுள்ளார். ஜிம்மி ரூத் இந்த இசைக் காணொலியை இயக்கியுள்ளார்.

மணிகண்டன் ஒளிப்பதிவை கையாள, அப்சர் நடனம் அமைத்துள்ளார். படத்தொகுப்புக்கு கமலும், கலைத் துறைக்கு சூர்யா ராஜீவனும் பொறுப்பேற்றுள்ளனர்.

ஷியாம் நெமிரோவின் நிர்வாகத் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மயக்கிறியே’-வின் கிரியேட்டிவ் புரொட்யூசர் டோங்க்லி ஜம்போ ஆவார்.

அனிவி இசையில் அனிருத் ரவிச்சந்தர் பாட ஜிம்மி ரூத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மயக்கிறியே-வை காதலர் தின சிறப்பு பாடலாக ஏ என் எஸ் என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில் சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கு யூடியூபில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Anirudh and Mugen rao joins for Mayakirriye

கப்பலில் பணியாற்றிய நண்பர்கள் இணைந்து தமிழர்களுக்காக கொண்டு வரும் ‘ஃபாரின் சரக்கு’

கப்பலில் பணியாற்றிய நண்பர்கள் இணைந்து தமிழர்களுக்காக கொண்டு வரும் ‘ஃபாரின் சரக்கு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல்வேறு துறையில் சாதித்த பலர் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தினால் திரைத்துறையில் நுழைந்து சாதித்து வருகிறார்கள். அந்த வகையில், கப்பலில் பணியாற்றிய மூன்று இளைஞர்கள் சினிமா மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக தங்களது சொந்த முயற்சியில் திரைப்படம் ஒன்றை இயக்கி தயாரித்திருப்பதோடு, அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறார்கள்.

ஆம், கப்பலில் ஒன்றாக பணியாற்றிய விக்னேஷ்வரன், கோபிநாத் மற்றும் சுந்தர் ஆகியோர் சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, படிக்கும் காலம் மற்றும் பணியாற்றிய காலம் என்று 20 குறும்படங்கள் எடுத்திருக்கிறார்கள்.

இவர்களுடைய குறும்படத்தை பார்த்து பலர் பாராட்டியதை தொடர்ந்து இனி திரைப்படம் எடுப்பதில் இறங்க வேண்டும், என்று முடிவு செய்தவர்கள் தங்களது பணியை விட்டுவிட்டு முழு கவனத்தையும் சினிமா பக்கம் திருப்பினார்கள்.

அதன்படி, கப்பலில் பணியாற்றி சம்பாதித்த பணத்தை வைத்து திரைப்படம் ஒன்றை தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார்கள் இந்த மூன்று நண்பர்கள்.

நெப்ட்டியூன் சய்லர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் (Neptune Sailors Production) என்ற நிறுவனம் சார்பில் கோபிநாத் தயாரித்திருக்கும் இந்த படத்தை விக்னேஷ்வரன் கருப்புசாமி இயக்க, சுந்தர் மற்றும் கோபிநாத் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

‘ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புசாமியிடம் படம் குறித்து கேட்ட போது,…

“படிக்கும் காலத்தில் இருந்து சினிமா மீது மிகப்பெரிய ஈடுபாடு உண்டு. அதனால் தான் பல குறும்படங்களை எடுத்து வந்தேன். பிறகு கப்பல் பணியில் சேர்ந்த போது, அங்கே இருந்த சுந்தர் மற்றும் கோபிநாத் ஆகியோரும் என்னை போலவே சினிமா மீது ஆர்வமாக இருந்ததால் நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து பல குறும்படங்களை எடுத்தோம்.

ஒரு கட்டத்தில் குறும்படங்கள் எடுத்தது போதும், திரைப்படம் எடுக்கலாம் என்று மூன்று பேரும் முடிவு செய்தோம்.

எங்கள் மூன்று பேருடைய முயற்சியில் உருவாகியிருக்கும் ‘ஃபாரின் சரக்கு’ படத்தின் பணிகள் நிறைவு பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

படத்தின் தலைப்பு மற்றும் டீசர் பாராட்டு பெற்று வரும் நிலையில், சரக்கு என்றாலே மதுபானம் என்ற கண்ணோட்டத்தில் பலர் பார்க்கிறார்கள்.

ஆனால், நாங்கள் இங்கு குறிப்பிட்ட சரக்கு மதுபானம் அல்ல, அது வேறு ஒன்று. அது என்ன? என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. காரணம் அது தான் கதையின் மையப்புள்ளி.

குஜராத்தில் தொடங்கும் கதை தமிழகத்தில் முடிவடையும். இது தான் ’ஃபாரின் சரக்கு’ படத்தின் கதைச் சுருக்கம்.

அந்த சரக்கு என்ன, அதற்கும் குஜராத்துக்கும் என்ன தொடர்பு என்பதை விறுவிறுப்பாக மட்டும் இன்றி ரசிகர்களிடமும், தமிழ் சினிமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. அதேபோல், காதல், பாடல் என்று வழக்கமான பாணியை தவிர்த்துவிட்டு வித்தியாசமான திரைக்கதை அமைப்போடு இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் ஜானர் திரைப்படமாக இருந்தாலும், வழக்கமான சினிமாவாக இல்லாமல் இருப்பதோடு, இதுவரை திரையில் சொல்லப்படாத ஒரு விஷயத்தை சொல்லும் திரைப்படமாகவும் ‘ஃபாரின் சரக்கு’ இருக்கும்.” என்று நம்பிக்கையோடு கூறினார்.

’ஃபாரின் சரக்கு’ மூலம் தமிழ் சினிமாவில் கால்பதிக்க உள்ள இந்த மூன்று நண்பர்கள் தங்களைப் போல் சினிமா மீது ஆர்வம் உள்ள பலருக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என இப்படத்தின் சுமார் 300 பேர் அறிமுகமாகிறார்கள்.

கோபிநாத் மற்றும் சுந்தர் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் உசேன், சுரேந்தர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், அப்ரினா, இலக்கியா, ஹரிணி ஆகிய மூன்று பெண்களும் மிக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

சிவநாத் ராஜன்.எஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எக்ஸ்.பி.ஆர் இசையமைக்க, பிரகாஷ் ராஜ்.பி படத்தொகுப்பு செய்திருக்கிறார். டி.எம்.சரத்குமார் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

முழுக்க முழுக்க புதுமுக கலைஞர்களோடு உருவாகியிருக்கும் இப்படத்தில் ஒரே ஒரு தொழில்நுட்ப கலைஞர் மட்டும் பிரபலமானவர். அவர் தான் ஒலிக்கலவை கலைஞர் சிவகுமார்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் பணியாற்றும் சிவகுமார் ‘சார்பட்டா’ போன்ற பல வெற்றி படங்களில் பணியாற்றி வருகிறார். அவர் தான் இப்படத்தின் ஒலிக்கலவை பணியை கவனித்துக்கொள்கிறார்.

குஜராத், நாமக்கல், மதுரை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ள ‘ஃபாரின் சரக்கு’ படத்தின் அனைத்து பணிகளும் நிரைவடைந்துள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு உரிமையை டிரெண்ட் மியூசிக் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Action Suspense thriller foreign sarakku is getting ready for release

மீண்டும் இணைந்த கார்த்தி – சுகன்யா ஜோடியின் புதிய பட ரிலீஸ் அப்டேட்

மீண்டும் இணைந்த கார்த்தி – சுகன்யா ஜோடியின் புதிய பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீமான், சின்ன ஜமீன் உள்ளிட்ட படங்களில் நவரச நாயகன் கார்த்திக் & சுகன்யா ஜோடி இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது 15 வருடங்களுக்கு பிறகு ‘தீ இவன்’ படத்திற்காக மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ளது.

மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நவரசநாயகன் கார்த்திக், சுகன்யா, ராதாரவி, சுமன்.J ,ஸ்ரீதர் , ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம்புலி, ஜான்விஜய், சரவனசக்தி, இளவரசு, ஆகியோர் நடித்த இப்படத்தின் டப்பிங் பணிகள் இனிதே துவங்கியது.

இப்படத்தின் பாடல்களை புஷ்பா படத்தில் சாமி பாடலை பாடிய பிரபல கிராமிய பாடகி ராஜலட்சுமி, செந்தில், தனி ஒருவன் படத்தில் கண்ணாலா கண்ணாலா… பாடலை பாடிய பத்மலதா என பல்வேறு பிரபல பாடகர்கள் பாடி உள்ளார்கள்.

ரோஜா மலரே, அடடா என்ன அழகு ஆகியபடங்களை தயாரித்து இயக்கிய T. M. ஜெயமுருகன் இப்படத்தை திரைக் கதை ,பாடல்கள், எழுதி இசை அமைத்து இயக்கி உள்ளார்.

ஒளிப்பதிவு Y. N. முரளி, படத்தொகுப்பு இத்ரிஸ், பின்னணி இசை A. J. அலிமிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை M. அப்பு கவனிக்க, பிரமாண்ட பொருட்செலவில் நிர்மலா ஜெயமுருகன் தயாரித்துள்ளார்.

இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Karthik and Suganya starrer Thee Ivan movie release updates

More Articles
Follows