விஜய்-ஜூனியர் என்.டி.ஆர்-ஸ்ருதிக்கு சவால் விட்ட சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு நல்ல விஷயத்தை பிரபலமாக்க பல பிரபலங்கள், தங்களுக்குள் மாறி மாறி ஒருவரை டேக் செய்து சவால்விடுவது வழக்கம்.

அதாவது வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது, யோகா அல்லது உடற்பயிற்சி செய்வது உள்ளிட்டவற்றை செய்து அந்த வீடியோவை எடுத்து இணையத்தில் பதிவிட்டு சக நடிகருக்கு சவால் விடுவார்கள்.

இதனையடுத்து அந்த நடிகர் அந்த சவாலை ஏற்பாரா? என ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

அதுபோல தற்போது #GreenIndiaChallenge என்ற சவால் பிரபலமாகி வருகிறது. ஒருவர் மரக்கன்றை நட்டு படம் எடுத்து வெளியிட்டு மற்ற மூவருக்கு சவால்விட வேண்டும்.

இந்த நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவரது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றை வைக்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘எனது பிறந்தநாளைக் கொண்டாட இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது. இந்த #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், விஜய், ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுக்கிறேன்.

இந்தச் சங்கிலி எல்லைகளைக் கடந்து தொடரட்டும். நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

அரசியலுக்கு வந்து பதவி கிடைச்சா தான் சேவையா..? – லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ்.

இவர் தன் அம்மாவுக்காக கோயிலும் கட்டியிருக்கிறார். மேலும் சமூக பணிகளுக்காக அறக்கட்டளை நிறுவி நடத்தி வருகிறார்.

இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் தத்தெடுத்து அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய ட்விட்டர் பதிவில்… “அரசியலுக்கு வந்து ஒரு பதவி பெற்று அதன் பிறகு ஏழைகளுக்கு நான் தொண்டு செய்வேன் என்று கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனக்கு அதில் உடன்பாடில்லை.

எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைதியாக சமூகத்திற்கு சேவை செய்வேன்.

அரசியலில் நுழையாமல் மக்களுக்கு தேவையான சேவைகளை செய்ய முடியும் என்று நம்புகிறேன். இதற்கு முன்பு நான் வெளியிட்ட வீடியோ எனது 12 வருட முயற்சி மற்றும் நம்பிக்கையின் சான்று. அந்த வீடியோவில் பல குழந்தைகளின் கனவு நனவாகியிருப்பதை நீங்கள் பார்க்கலாம்” என பதிவிட்டுள்ளார்.

ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக்கும் ஷ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். அவரது ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது. அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகவுள்ள அவரது ஆல்பத்தின் ஒரு அங்கம் இந்த பாடல்.

எட்ஜ் பாடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட உங்கள் உணர்வுகளின் ஓரம் வரை செல்லும். வாழ்க்கையையும் காதலையும் பற்றிய கனவும், கோபமும் கொள்ள பயப்படவோ, சங்கடப்படவோ கூடாது என்பதே இப்பாடல். இதற்கு முன் பார்வையாளர்கள் பார்த்திராத ஷ்ருதியின் இன்னொரு பக்கம் இது. இந்த பாடலை உருவாக்க அவருக்கு சில காலம் தேவைப்பட்டது. இப்பாடல் இசை ரீதியான கலை வெளிப்பாட்டின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது இசை மற்றும் திரைப்பட வாழ்க்கையை சிரமமின்றி கையாண்டு வரும் ஸ்ருதி இது குறித்து கூறும்போது

“இசைதான் எனது இயல்பு, இசை என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும், அதைப் பகிர்ந்து கொள்ள முடிந்ததற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். எட்ஜ் உங்களுக்கு இருக்கும் குழப்பத்தையும், சீரற்ற உங்கள் அன்பான பகுதிகளையும் வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சி. மற்றவர்களிடம் நீங்கள் சிறந்ததை எதிர்பார்ப்பதை நிறுத்தும்போது, உங்களை நீங்கள் உண்மையாக புரிந்துகொண்டு மற்றும் ஏற்றுக்கொள்வதற்கான பயணம் தொடங்குகிறது.

இவ்வாறு ஷ்ருதி கூறினார்.

கரண் பாரிக் இணைந்து தயாரித்துள்ள ‘எட்ஜ்’-ல் ஷ்ருதி பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுள்ளார். பாடலை எழுதி பாடியது மட்டுமின்றி, இப்பாடலை பதிவு செய்து, இயக்குநரும் எடிட்டருமான சித்தி படேல் உடன் இணைந்து இப்பாடலுக்கான வீடியோவை ஊரடங்கு காலத்தில் படமாக்கியுள்ளார்.

இப்பாடல் இன்று விஎஹ்1 மற்றும் ஷ்ருதியின் யூடியூப் சேனலில் வெளியானது.

The song is released today on VH1 and Shruti’s Youtube channel.

Video : https://youtu.be/H1Z-DM_qWX8

Audio : https://shrutihaasan.lnk.to/edge

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி! அமைச்சர், ஆட்சியர் பாராட்டு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார்.

தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.விஜயபாஸ்கர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் திரு. மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டு உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார். இதையடுத்தே தன் பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார் ஜோதிகா.

ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். “ஜோதிகா அவர்கள் செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி” என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு.கோவிந்த்ராவ், “ஜோதிகா அவர்களின் சமூக அக்கறைக்குத் தலை வணங்குகிறேன்” என்றார். “தாய்மார்கள், குழந்தைகள் நலனுக்காக 25 லட்ச ரூபாய் வழங்கிய ஜோதிகாவின் பெருமனதுக்கு நன்றி. அரசின் திட்டங்களுடன் மக்களின் பங்களிப்பும் கைகோக்கும்போது அது எவ்வளவு சிறப்பாக அமையும் என்பதற்கு ஜோதிகா அவர்களின் உதவி சரியான முன் உதாரணம்.” என்றார் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் திரு.மருது துரை.

இந்த நிகழ்வில் தமிழக வேளாண் அமைச்சர் மாண்புமிகு திரு.துரைக்கண்ணு, ராஜ்யசபா உறுப்பினர் திரு.வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

BREAKING கமல் விஜய் அஜித் சூர்யா பட தயாரிப்பாளர் சுவாமிநாதன் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 

கமல் நடித்த அன்பே சிவம், விஜய் நடித்த பகவதி, பிரியமுடன், அஜித் நடித்த உன்னைத் தேடி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் லட்சுமி மூவி மேக்கர்ஸ்.

மேலும் கார்த்திக் நடித்த கோகுலத்தில் சீதை, பார்த்திபன் நடித்த உன்னருகே நானிருந்தால்.. சூர்யா நடித்த உன்னை நினைத்து, தனுஷ் நடித்த புதுப்பேட்டை, சிம்பு நடித்த சிலம்பாட்டம், ஜெயம் ரவி நடித்த தாஸ், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிறுவனத்தை 3 பேர் நிர்வகித்து வந்தனர். இந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநான் பல படங்களில் நடித்துள்ளார்.

வடிவேலுடன் இவர் நடித்த இது உங்கள் சொத்து என்ற பஸ் காமெடி பிரபலம். இது பலருக்கு நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் சுவாமிநாதன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துவிட்டார்.

இவரின் மகன் அஸ்வின் ராஜா என்பவர் ‘கும்கி’ மற்றும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படங்களில் நடித்துள்ளார். அஸ்வினுக்கு 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshmi Movie makers Producer Swaminathan passed away

விஜய்-சூர்யாவை பழித்து கோட்டை கட்டாதே; மீரா & நடிகர் சங்கம் & மீடியாவுக்கு பாரதிராஜா கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

8 தோட்டாக்கள் திரைப்படம் மூலமாக நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனையடுத்து ஓரிரு படங்களில் நடித்திருந்தார். அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்.

கடந்த சில நாட்களாக நடிகர்கள் ரஜினி, விஜய், சூர்யாவை விமர்சித்து வந்தார். மேலும் விஜய் மனைவி சங்கீதா மற்றும் சூர்யா மனைவி ஜோதிகாவை படு கேவலமாக விமர்சித்தி இருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் பதிலடி கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா அவர்கள் மீரா மிதுனுக்கு தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில்…

என் இனிய தமிழ் மக்களே… வணக்கம்!

சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது.

புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப் போலவும், மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சிலை உமிழ்வதைப் போலவும் தமிழ்சினிமா வெளியில் அரங்கேறுவது ஆபத்தான கலாச்சாரம் தொடங்கியுள்ளதோ என ஐயம் கொள்கிறேன்.

ஒருவரையொருவர் மதித்து வேலை செய்த காலகட்டத்தை… ஒருவரையொருவர் மரியாதை செய்து கலைப்பணியாற்றிய காலகட்டத்தை நாம் கடந்துவிட்டோமா என்ன? என்ற கவலையும் சேர்ந்துகொள்கிறது.

இதோ,

நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர்..

கவர்ச்சிகரமான இந்தத் துறையில் தன் பெயர் கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்?

திருமணம் செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை, அழகுற கட்டமைத்துள்ளனர் என்பதை இத்தனை ஆண்டுகால அவர்களின் வாழ்க்கை நம் முன் கண்ணாடி போல் நிற்கிறதே.. !!

அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல மீராமிதுன் என்கிற பெண் தன் வார்த்தைகளை கடிவாளம் போடாமல் வரம்புமீறி சிதறியுள்ளார்.

திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினனாக நான் இதைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்.

சிறு பெண், பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கவுரமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கும் பணி செய்கிறார். சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அப்படிப்பட்டவர்களை, அவர்களின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல.

மீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. உழைத்துப் போராடி… எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரைத் தூற்றிப், பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான் இருக்கும்.

வார்த்தைகள் பிறருக்கு வலியைத் தருவதாக அமையாமல்,

இன்னொருவருக்கு வாழ்க்கையை வளம் ஏற்படுத்தும்… பசியைப் போக்கும்… அவசியமானவைகளாக அவை உதடுதாண்டி வெளிவரட்டும்.

நம் சகக் கலைஞர்களின் குடும்பத்தை அவதூறாகப் பேசியும்… நடிகர் சங்கம்
மட்டுமல்ல.. வேறெந்த சங்கமும் எந்தவிதமான எதிர்க்குரலும் எழுப்பாதது வியப்பை அளிக்கிறது. இன்றுவரை சங்கத்தின் தலையீட்டை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அசைவில்லை.

தேர்தல் நடைபெறாத சங்கம் என்றால், சொந்தத் தேவைகளுக்காகக் கூட கண்டனக்குரல் தராத அளவிற்கு குரல்வளை நெறிபட்டா கிடக்கிறது?

யாரோ ஒருவனின் அவமானம்தானே? நாம் ஏன் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால் நம் வீடு அசிங்கத்தால் அமிழ்ந்துபோகும்… அந்த சேறு நாளை உன் மீதும் வீசப்படும் இல்லையா? எல்லோரும் கூடிக் கண்டித்திருக்க வேண்டாமா??

சமூக ஊடகங்களும் இப்படிப்பட்ட அவதூறுகளைக் கண்ணியத்திற்குட்பட்டு ஒளிபரப்புவதை நிறுத்தக் கேட்டுக் கொள்கிறேன்.

முன்பெல்லாம் பத்திரிகை தர்மம் என்ற ஒன்றும்… ஊடகங்களும் கலைஞர்களும் ஒரு குடும்பம் என்ற கட்டுக்கோப்பில் இருந்தோம். ஆனால் இன்று அவை காற்றிலெறியப்பட்டு, கட்டற்று போய்க்கொண்டிருப்பதாகத் தோணுகிறது. மற்றவர்களை அவர்களின் வாழ்க்கை அமைப்பைக் கேலிசெய்யும் வார்த்தைகளை … எழுத்தைக் கூட தேடிப்பிடித்து கத்தரி போடுங்கள் நண்பர்களே..

இப்படிப்பட்டவர்களின் ஊக்குவிப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். அதனால் சமூக ஊடகங்கள் நறுக்க வேண்டியதை நறுக்க வேண்டியவர்களை… தயவுசெய்து கவனித்து நறுக்கிவிடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

உயரத்திலிருக்கும் நட்சத்திரங்களின் ரசிகர்களின் பின்னூட்ட வார்த்தைகளும் மிகக் கேவலமாகவும் ஆபாசமாகவும் இருப்பதைக் கவனித்தே வருகிறேன்.

நடிகை கஸ்தூரி போன்றோர் அதற்கு இலக்காகி உள்ளனர். ரசிகர்கள்தானே கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்… ??!நமக்கென்ன என நட்சத்திரங்களும் அமைதியாக வேடிக்கைப் பார்க்கக்கூடாது.

அவர்களை நல்வழிப்படுத்த, ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க முயற்சியெடுக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமையும் கூட…

சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் படிக்கக் கூசும் கேவலமானவைகளாக உள்ளன.

ஒரு அறிக்கைவிட்டாவது அவர்களை மட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அந்த ரசிகன் எங்கிருந்தோ கழிவின் மீது கல்லடிக்கிறான். பாருங்கள், அது நம் வீட்டு அடுப்படியில் நாறுகிறது.

உங்கள் பெயரும் புகழும் நீடித்து நிலைத்திருக்க இன்றே நல்ல கண்மணிகளை வளர்த்தெடுங்கள் உச்ச நட்சத்திரங்களே…

என் போன்றோருக்கு உங்கள் மீது தூசு விழுந்தாலும் உத்திரம் விழுந்தது போல் வலிக்கிறது.

ஒருவருக்கொருவர் மரியாதை செய்து இணக்கமாக உயரும் சூழ்நிலைகளை விரைவில் உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி!

பாசத்துடன்

உங்கள் பாரதிராஜா

Bharathiraja slams Meera Mithun Nadigar Sangam and Media

More Articles
Follows