‘மகான்’ படத்தின் மாஸ் அப்டேட் : சூறையாட்டம் ஆட வரும் விக்ரம் & துருவ்

‘மகான்’ படத்தின் மாஸ் அப்டேட் : சூறையாட்டம் ஆட வரும் விக்ரம் & துருவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘மகான்’.

இவர்களுடன் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் இதன் அடுத்த மாஸ் அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ’சூறையாட்டம்’ என்ற சிங்கிள் பாடல் வரும் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mahaan First Single Soorayaatam to be out on Sep 22

அறக்கட்டளையின் ஒவ்வொரு ரூபாயும் ஒரு மனித உயிரை காப்பாற்றும்.. – சோனு சூட்

அறக்கட்டளையின் ஒவ்வொரு ரூபாயும் ஒரு மனித உயிரை காப்பாற்றும்.. – சோனு சூட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் கள்ளழகர், சந்திரமுகி, ஒஸ்தி, கோவில்பட்டி வீரலட்சுமி என பல படங்களில் நடித்தவர் ஹிந்தி் நடிகர் சோனு சூட்.

பெரும்பாலும் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களிலேயே நடித்தவர் இவர்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் இவர் செய்த உதவிகள் ஏராளம்.

குறிப்பாக இடம்பெயர் தொழிலாளர்கள் அவதிபட்டபோது பேருந்து விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார்.

உதவி செய்வதற்காகவே தன் சொத்துக்களை 10 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்தார்.

மாணவர்கள் ஆன்லைன் கல்வி கற்பதற்காக ஸ்மார்ட்போன்களை வழங்கினார்.

மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவர் வைத்தும் கொடுத்துள்ளார்.

விவசாயிகளுக்கும் பெரும் உதவி செய்துள்ளார்.

கொரோனா காலத்தில் இவரது சேவையைப் பாராட்டி ஐநா சபை சார்பில் விருது வழங்கப்பட்டது.

தெலங்கானா மாநிலத்தில் சித்தி பேட் மாவட்டத்தில் உள்ள துப்ப தண்டா என்ற கிராமத்தில் சோனு சூட் சிலை அமைத்து கோயில் கட்டியுள்ளனர்

எனவே பொதுமக்கள் இவரை ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாகவே பார்த்தனர்.

இந்த நிலையில் இவருக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

பஞ்சாப் சட்ட சபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடிகர் சோனு சூட் களமிறக்கப்படலாம் என தகவல்களும் ஒரு பக்கம் பரவியது.

மேலும் புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு திட்டத்தின் தூதராக சோனு சூட் டை நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ 20 கோடி அதிகமாக வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்டது.

அவரது அறக்கட்டளை18 கோடி ரூபாய் வசூலித்ததில் ஒரு கோடியே 90 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டதாகவும், மீதித் தொகை பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் வருமானவரித்துறை தெரிவித்தது.

விதிகளை மீறி, வெளிநாடுகளில் இருந்து சோனு சூட் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை வாங்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிவிட்டரில் சோனு சூட் கூறியதாவது..

“தமது அறக்கட்டளையில் இருக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஒரு மனித உயிரை காப்பாற்றுவதற்காக காத்திருக்கிறது. ” என பதிவிட்டுள்ளார்.

Actor SonuSood speaks out over allegations of tax evasion after the Income Tax department conducted

இந்திய தலைநகருக்கு பறக்கும் தளபதி..; வைரலாகும் விஜய் போட்டோஸ்

இந்திய தலைநகருக்கு பறக்கும் தளபதி..; வைரலாகும் விஜய் போட்டோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் சண்டைக்காட்சிகள் டெல்லியில் படமாக்கப்பட உள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் டெல்லி சென்றனர்.

இவர்கள் விமானம் மூலம் டெல்லி சென்ற நிலையில், விமானத்திற்குள் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதன்பின்னர் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்த பீஸ்ட் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Vijay and Beast team head to New Delhi for next schedule

சிவகார்த்திகேயனை இயக்குவதற்கு முன்பே அவருடன் இணைந்து நடித்த கௌதம் மேனன்

சிவகார்த்திகேயனை இயக்குவதற்கு முன்பே அவருடன் இணைந்து நடித்த கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள ‘டாக்டர்’ படம் அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது.

இதன் பிறகு டான், அயலான் படங்கள் வெளியாகவுள்ளது.

இதன் பின் அட்லியின் உதவி இயக்குனரின் சிங்கப்பாதை படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

‘டான்’ படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க, ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்து வருகிறார்.

இதன் சமீபத்திய படப்பிடிப்பு ஆக்ராவில் நடந்தது. அங்கு தாஜ்மஹாலில் ஒரு பாடல் காட்சியும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் கௌரவ வேடத்தில் இயக்குனர் கௌதம் மேனன் நடித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளிம் எடுக்கப்பட்டுவிட்டதாம்

படங்களை இயக்குவதில் பிசியாக இருந்தாலும் நிறைய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் கௌதம் மேனன்.

இந்துடன் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை கௌதம் இயக்கவும் அந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கலாம் எனவும் தகவல்கள் வருகின்றன.

Gautham Menon plays an important role in Sivakarthikeyan’s next

சிவாவுடன் 2 ஹீரோயின்கள் இணையும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’

சிவாவுடன் 2 ஹீரோயின்கள் இணையும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லார்க் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்குகிறார்.

இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சு குரியன் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கின்றனர்.

இவர்களுடன் பாடகர் மனோ, நடிகர் மா கா பா ஆனந்த், ஷா ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா , கே பி ஒய் பாலா, ‘மைக்செட்’ அபினாஷ், நடிகை வித்யா வினுமோகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஆர்தர். ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

தயாரிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் கவனிக்க, பூபதி செல்வராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். நடன காட்சிகளை நடன இயக்குனர் சாண்டி அமைக்க, சண்டை பயிற்சி ஃபீனிக்ஸ் பிரபு மேற்கொள்கிறார்.

ஃபேண்டசி காமெடி ஜானரில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று (செப்டம்பர் 20 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது.

இதன் தொடக்க விழா சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டாக்டர். பிரபு திலக், ‘A1’ மற்றும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் டைட்டில் இளைய மற்றும் இணைய தலைமுறையினரை கவர்ந்திருப்பதால், தொடக்க விழாவின் போதே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

Mirchi Shiva’s next film announcement is here

சிறந்த இயக்குநருக்கான சைமா விருதை வென்ற ரஜினி பட கதாசிரியர்

சிறந்த இயக்குநருக்கான சைமா விருதை வென்ற ரஜினி பட கதாசிரியர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019-ஆம் ஆண்டில் வெளியான யஜமானா என்ற கன்னட திரைப்படத்திற்காக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளின் (siima) சிறந்த இயக்குநர் (கன்னடம்) விருதை பொன்குமரன் வென்றுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த பொன்குமரன் தனது வெற்றியில் தனது குருநாதர்களான இயக்குநர்கள் கே பாக்யராஜ் மற்றும் கே எஸ் ரவிக்குமாருக்கு முக்கிய பங்குண்டு என்று தெரிவித்தார்.

பாரம்பரிய எண்ணெயைப் பயன்படுத்தும் கிராமம் ஒன்று பெரிய மாஃபியா மோசடியை எவ்வாறு சமாளிக்கிறது என்பதுதான் யஜமானா படத்தின் கதை.

தர்ஷன், ரஷ்மிகா மந்தனா மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படம் கர்நாடகா முழுவதும் 100-நாட்களுக்கு மேல் ஓடியது.

2011 ஆண்டு வெளியான ‘விஷ்ணுவர்தனா’ மூலம் இயக்குநராக அறிமுகமானார் பொன்குமரன்.

இந்த படத்திற்கு அவருக்கு siima சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிடைத்தது.

பொன்குமரன், தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான சாருலதா படத்தையும் இயக்கியுள்ளார்.

கே எஸ் ரவிக்குமார் இயக்கி ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் கதையை பொன்குமரன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகர்களை வைத்து பொன்குமரன் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தை மிருகா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோஸ் பேனரில் பி வினோத் ஜெயின் தயாரிக்கிறார்.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ponkumaran wins best director award at SIIMA

More Articles
Follows