தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
உதயநிதி தயாரித்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படம் ஜூன் 29 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு தடை கோரி இருந்தார் ‘ஏஞ்சல்’ படத் தயாரிப்பாளர்.
‘மாமன்னன்’ தான் தன் கடைசி படம் என உதயநிதி தெரிவித்து இருந்தார்.
எங்களுடைய ‘ஏஞ்சல்’ படத்திற்கு ஒரு வாரம் மட்டும் தான் உதயநிதி கால்சீட் கொடுக்க வேண்டும். அந்த படத்தை முடித்துக் கொடுக்காமல் ‘மாமன்னன்’ படத்தை திரையிடக்கூடாது என அவர் மனு புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ‘மாமன்னன்’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையில் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது
ஜாதி மோதல்களை உருவாக்க நினைக்கும் ‘மாமன்னன்’ படத்தை தடை செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘போராட தூண்டாதே..!’ என அகில இந்திய பார்வர்டு பிளாக் மதுரை மாவட்டம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Madurai wall poster against Maamannan release
