புதிய கல்வி கொள்கை; நாடாளுமன்றத்தில் ரஜினி-சூர்யா வாய்ஸ் எதிரொலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 வாரங்களுக்கு முன் அரம் அறக்கட்டளை விழாவில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நடிகர் சூர்யா பேசினார்.

அதன்பின்னர் சில தினங்களில் நடைபெற்ற காப்பான் இசை விழாவில் சூர்யாவின் கருத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருந்தார்.

ரஜினி பேசினால் மட்டுமல்ல சூர்யா பேசினாலும் மோடிக்கும் கேட்கும். மாணவர்களுக்கு உதவும் சூர்யாவுக்கு புதிய கல்வி கொள்கை குறித்து பேச தகுதியுள்ளது என்றார்.

இதனால், பாஜக மற்றும் அதிமுக இடையே இந்த கருத்துக்கு அதிருப்தி உருவானது.

இந்நிலையில், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அவர்கள் சூர்யா மற்றும் ரஜினியின் புதிய கல்வி கொள்கை குறித்து கருத்தை பாராளுமன்ற அவையில் பேசியுள்ளார்.

அவர்கள் வெளிப்படையாகவே அமைச்சர்களால் மிரட்டலுக்கும் உள்ளாக்கப்பட்டனர் எனவும் கூறியுள்ளார்.

அந்த வீடியோ..

மரண மாஸ் காட்டும் தலைவரின் ‘தர்பார்’ ஸ்டில்ஸ் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தர்பார் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதற்கு முக்கியமான காரணம்.. நீண்ட நாட்களுக்கு பிறகு இதில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் ரஜினி.

இப்படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் சூப்பரான ஸ்டில்ஸ்லை வெளியிட்டுள்ளனர். அதில் ரஜினி மிக சூப்பராக உள்ளார். படங்களும் மாஸாக உள்ளது.

இது ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

Super Star Rajinis Darbar stills released Goes viral

5AM ஸ்பெஷல் ஷோ என்ற பெயரில் வெத்து பந்தா காட்டும் பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் ரிலீசானால் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் திரையிடப்படும். பண்டிகை தினங்கள் என்றால் 5 காட்சிகள் இருக்கும்.

பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால் சிறப்பு காட்சியுடன் சேர்த்து 6 காட்சிகள் வரை திரையிடப்படும். இது அரசு அனுமதியுடன் அதிகாலை 6 மணிக்கு தொடங்குவது வழக்கம்.

ஆனால் அண்மைக்காலமாக இது போன்ற வழக்கம் எல்லாம் படங்களுக்கும் அதிகரித்து வருகிறது.

அதிகாலை காட்சி வைத்தால் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதாக மக்கள் நம்புவார்கள் என்ற பேரில் நிறைய தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்கிறார்கள்.

இவர்களே பெரும்பாலான சினிமா டிக்கெட்டுக்களை வாங்கி திரையிட சொல்வதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் இல்லை.

ஆனால் அவர் நடிக்காமல் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்திற்கு சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் 5 மணி காட்சி இருந்தது.

படத்தில் பணியாற்றியவர்கள் அவர்களின் குடும்பத்தார் என ஒட்டுமொத்த குழுவும் படம் பார்க்க வந்தனர். இதனால் தியேட்டர் நிரம்பி வழிந்தது.

இதற்கு அவர்கள் பீரிமியர் ஷோக்கள் போடலாம். எதற்காக அவர்கள் படம் பார்க்க சிறப்பு காட்சிகள் திரையிட வேண்டும்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால் நிறைய டிவி மற்றும் யூடிப் சேனல்கள் நபர்கள் காத்திருப்பார்கள். அவர்களிடம் தங்கள் படத்தை பற்றி அவர்களே பெருமையாக பேசிடவே இதுபோன்ற உக்திகளை கையாள்வதாக சொல்லப்படுகிறது.

இதை நம்பி மற்ற தியேட்டர்கள் உரிமையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ரசிகர்களும் இதை நம்பி போய் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

சில தியேட்டர்களின் அதிகாலை காட்சிகள் என்ற பெயரில் போனால் பாதி டிக்கெட்டுக்கள் கூட விற்பதில்லை. ஆன்லைன் டிக்கெட் புக்கிங் பதிவை பார்த்தாலே அது தெரிந்துவிடும்.

அதிகாலை 5 மணி காட்சி என்றால் ஒரு கெத்து என்று நினைத்து சிலர் இதில் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவது சரியா?

Reasons behind 5am early morning special shows of Tamil movies

BREAKING ரஜினியின் தர்பார் படத்திற்கு டிசைன் செய்ய விருப்பமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேட்ட படத்தை தொடர்ந்து தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை லைக்கா தயாரிக்க, முருகதாஸ் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படம் அடுத்த 2020 வருடம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தை இதுவரை வராத ரஜினி படம் அளவுக்கு முருகதாஸ் இயக்கி வருவதாக ரஜினி அண்மையில் தெரிவித்தார்.

இந்த நிலையில், சற்றுமுன் தர்பார் படம் குறித்து முருகதாஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது… ரஜினியின் படம் மற்றும் தர்பார் டைட்டில் லோகோ டிசைன் மாலை 7 மணிக்கு இன்று வெளியிடப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

அதுபோல் யார் வேண்டுமானாலும் தர்பார் போஸ்டர் டிசைன் செய்து படக்குழுவினருக்கு அனுப்பினார் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அதை வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

A Big update about Rajinis Darbar poster design

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த தீர்ப்புகள் விற்கப்படும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கதை தான் எப்போதுமே ஹீரோ’ என்ற கோட்பாடு காலப்போக்கில், சில சுவாரஸ்யமான கருவை கொண்ட படங்கள் மூலம் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞர்களுடன் பலமுறை வலுவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சத்யராஜ் நடித்துள்ள “தீர்ப்புகள் விற்கப்படும்” படம் பல்வேறு நல்ல காரணங்களுக்காக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முதன் முறையாக ரெட் மான்ஸ்ட்ரோ 8K கேமராவைப் பயன்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ள திரைப்படமான இதில் சத்யராஜின் மனதைக் கவரும் நடிப்பு குறித்து தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஒருபோதும் அதன் மீது கவனத்தைத் திருப்பத் தவறவேயில்லை. சத்யராஜ் சில அதிரடி காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சிறப்பாக முடித்ததில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

இது குறித்து படத்தின் இயக்குனர் தீரன் கூறும்போது, “சத்யராஜ் சார் படத்தை அலங்கரித்த விதம் பற்றி நான் தொடர்ந்து பேசி வருவதால் பார்ப்பவர்களுக்கு இது ஒரு தொடர்ச்சியான அறிக்கையாக தோன்றும் என்று நினைக்கிறேன். இது முற்றிலும் உண்மை, ஏனென்றால் அவர் தனது மாயாஜால எனர்ஜியால் எங்களை அடிக்கடி ஆச்சரியப்படுத்தியுள்ளார். தினேஷ் சுப்பராயன் தனது பாணியில் சில கடினமான சண்டைக்காட்சிகளை வடிவமைத்தார், சத்யராஜ் சாரால் அதை நிறைவேற்ற முடியுமா என்று எங்களுக்கு ஆரம்பத்தில் சந்தேகம் ஏற்பட்டது. ஆயினும் கூட, அவர் சண்டைக் காட்சிகளில் தனது அதிரடியால் எங்கள் நம்பிக்கையின்மையை அப்பட்டமாக அடித்து நொறுக்கினார். பாதகமான காலநிலை நம்மை விரைவிலேயே சோர்வுக்கு உள்ளாக்கி விடும், ஆனால் அவர் ஒரு இடைவிடாத ஆற்றலை கொடுத்து எங்களை ஆச்சர்யப்படுத்தினார். இது வெறுமனே ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் மட்டுமல்ல, நம் உடலை கட்டுக்கோப்பாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க நாமும் வழக்கமான பயிற்சிகளைப் பெற வேண்டும் என்ற முடிவுக்கு எங்களை இட்டுச் சென்றது” என்றார்.

அதிக கொந்தளிப்பான ஆக்‌ஷன் திரில்லர் என்று கூறப்படும் இப்படம், கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, நீதி காற்றில் கரைந்து போகும்போது, அதன் மூலம் தீயவர்களின் ஆதிக்கம் அதிகமாகும் போது, எழும் தனி நபர்களின் கோபத்தின் எழுச்சி பற்றி பேசுகிறது. ஹனி பீ கிரியேஷன்ஸ் சார்பில் சஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் தீரன். அஞ்சி ஒளிப்பதிவைக் கையாளுகிறார், யாமிருக்கா பயமே புகழ் பிரசாத் எஸ்.என். இசையமைக்கிறார், பியார் பிரேமா காதல் புகழ் மணி குமரன் சங்கரா படத்தொகுப்பு செய்கிறார்.

ஒரு நல்ல நடிகராக களம் காண தயாராகி விட்டார் நடிகர் முஜீப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திறமை இருக்கும் நபரைத் தேடி தான் வாய்ப்பு வந்து குவியும் என்பார்கள். திரைத்துறையிலும் அப்படித்தான். சரியான திறமையோடு பயணித்தால் முறையான வாய்ப்புகள் வரும். அப்படியான வாய்ப்புகளைப் பெற்று ஒரு நல்ல நடிகராக களம் காண தயாராகி விட்டார் நடிகர் முஜீப்.

இவர் இயக்குநர் தம்பா குட்டி பம்ப்ரோஸ்கி இயக்கத்தில் உருவாகி வரும் “மஞ்ச சட்ட பச்ச சட்ட” எனும் தமிழ் படத்தில் நடித்துள்ளார். தஞ்சை மண்ணிலிருந்து திரைக்களம் புகுந்திருக்கும் இவர் ஏற்கனவே விலாசம், மசாலாபடம், முதல் தகவல் அறிக்கை ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் புதுமுக இயக்குநர் AK திருமுருகன் இயக்கிவரும் பெயரிடப்படாத தமிழ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மலையாள மொழியை சரளமாக பேசும் முஜீப்பிற்கு மலையாள திரையுலகிலும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பாக நடிக்கவேண்டும் என்ற வேட்கையோடு உழைத்து வரும் இவருக்கு திரையுலகம் பெருவாரியான வாய்ப்புகளை வாரி வழங்க காத்திருக்கிறது என்பதை காண முடிகிறது. அதற்கான முன்னோட்டம் அவரது முயற்சிகளிலும் பயிற்சிகளிலும் தெரிகிறது.

More Articles
Follows