சிறையில் அஜித் ரசிகர்கள்; தல எப்போ விடுதலை செய்வார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்தாண்டு (2015) அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் மற்றும் வேதாளம் ஆகிய இரண்டு படங்கள் வெளியானது.

ஆனால், இந்தாண்டு முடியும் தருவாயை எட்டியுள்ள நிலையில், அஜித் படம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

தற்போது நடித்து வரும் தல 57 படத்தின் பர்ஸ்ட் லுக்கோ டீசரோ எதுவும் வெளியாகவில்லை.

இதனால் வருத்தம் அடைந்த மதுரை மாவட்ட அஜித் ரசிகர்கள் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா..?

தல படம் வராத தீபாவளி எங்களுக்கு துக்க தீபாவளி.

அஜித் படம் வராத திரையரங்கு எங்களுக்கு சிறை அரங்கு. தல படம் வரும் நாளே எங்களுக்கு விடுதலை தீபாவளி.. இதுபோன்ற போஸ்டர்கள் எல்லாம் அடித்து ஒட்டியுள்ளனர்.

ஹ்ம்…. சிறையில் இருக்கும் இவர்களை எப்போது அஜித் விடுதலை செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

 

 

தனுஷுடன் இணையும் ‘பிரேமம்’ படத்தின் அடுத்த நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்துள்ள கொடி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

இதில் த்ரிஷாவுடன் பிரேமம் படப்புகழ் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் பிரேமம் படத்தின் மற்றொரு நாயகியான மடோனா செபாஸ்டியன் தனுஷ் இயக்கி, தயாரித்து நடிக்கும் பவர் பாண்டி நடிக்கவிருக்கிறாராம்.

இதில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

தனுஷின் இயக்கத்தை பார்த்து செல்வராகவன் பாராட்டியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விஜய் சொன்னப்படியே விக்ரமுக்கு நடந்தது; கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது முதல் படமான ‘சேது’வில் தேசிய விருதை பெற்றவர் இயக்குனர் பாலா.

இதில் நடித்த விக்ரமுக்கு கிடைக்கவில்லை.

எனவே அடுத்து விக்ரம், சூர்யாவை வைத்து இயக்கிய பிதாமகனில் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தார்.

இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 13 வருடங்கள் ஆனதால் விக்ரமுடைய ரசிகர்கள் #13YearsOfPITHAMAGAN என்ற ஹேஷ்டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

இப்படத்தை அப்போது பார்த்த நடிகர் விஜய், நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று முதலில் விக்ரமிடம் சொன்னாராம்.

அவர் சொன்னப்படியே நடந்ததால், இருவரது ரசிகர்களும் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

‘சிவகார்த்திகேயனை பார்த்து கண் சிமிட்டும் தேவதை..’ – விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் தமிழகம் தாண்டியும் வசூலை வாரி குவித்து வருகிறது.

கேரளாவிலும் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் வெற்றிக் குறித்து நடிகர் விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

திறமை, உழைப்பு, சரியான வழிகாட்டிகள் மற்றும் அதிர்ஷ்ட தேவதையின் கண்சிமிட்டல்! இவைகளின் காம்போ சிவகார்த்திகேயன்! என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரெமோவின் அக்கா நான்தான் சுமோ என்று விவேக் பதிவிட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விஜய்சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகையின் கணவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜாக்கி ஷெரஃப், ரவிகிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ‘ஆரண்ய காண்டம்’.

இப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா சிறந்த புதுமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார்.

மேலும் சிறந்த எடிட்டிங்கான விருதை இப்படம் வென்றது.

இந்நிலையில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தனது அடுத்த படத்தை தானே தயாரித்து இயக்க தயாராகிவிட்டாராம்.

இதில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்க, பிரபல மலையாள நடிகரும் நஸ்ரியாவின் கணவருமான ஃபஹத் பாசில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

மோகன்ராஜா இயக்கும் சிவகார்த்திகேயனின் படத்தின் மூலம் பஹத்பாசில் தமிழில் அறிமுகமாகிறார்.

இதனை தொடர்ந்து விஜய்சேதுபதியுடன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவின் சக்தியை உலகுக்கு காட்ட போகும் ’2.O’ டீம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் ‘2.0’.

ஷங்கர் இயக்கிவரும் இப்படத்தில் ரஜினியுடன் அக்‌ஷய் குமார், எமிஜாக்சன், ரியாஸ்கான் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்த நவம்பர் மாதம் 20-ந்தேதி வெளியிட உள்ளனர்.

இத்துடன் இப்படத்தின் டீசரும் வெளியாக உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

இதுகுறித்து லைக்கா நிறுவனத்தின் நிர்வாகி ராஜு மகாலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில்…

‘‘இந்திய சினிமா எப்படி பட்டது என்பதை உலகுக்கு காட்டும் நேரம் நெருங்கி விட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினியும், கில்லாடியும் இந்திய சினிமா என்ன என்று உலகுக்கு தெரிவிப்பார்கள். அதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது’ என்று கூறியுள்ளார்.

More Articles
Follows