விவேக் மரணம் & தடுப்பூசி சர்ச்சை பேச்சு.: மனு தள்ளுபடி..; கைதாகும் மன்சூர் அலிகான்

விவேக் மரணம் & தடுப்பூசி சர்ச்சை பேச்சு.: மனு தள்ளுபடி..; கைதாகும் மன்சூர் அலிகான்

MansoorAliKhanஏப்ரல் 15ல் கொரோனா தடுப்பூசி் போட்டுக் கொண்ட நடிகர் விவேக் அடுத்த நாள் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அப்போது மருத்துவமனை வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்..

” தடுப்பூசியால் விவேக்கிக்கு உடல்நல குறைவு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கொரோனா இந்தியாவிலேயே இல்லை.

மத்திய மாநில அரசுகள் மக்களை ஏமாற்றுகிறது என கண்டமேனிக்கு சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் மன்சூர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அளித்த புகாரின் பேரில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், தூண்டிவிடுதல், தொற்றுப்பரவல் தடைச் சட்டத்தை மீறுதல், சமூக வலைதளங்கள், காட்சி ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்புதல், பொதுமக்களைத் தூண்டிவிடுதல், தொற்றுநோய் தடுப்புச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மன்சூரலிகான் கைது செய்யப்படுவார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால் முன்ஜாமீன் கேட்டு மன்சூரலிகான் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக பதிவான வழக்கில், நடிகர் மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே விரைவில் மன்சூர் அலிகான் கைதாவார் என சொல்லப்படுகிறது.

Madras high court cancels man soor ali khan bail case

கைலாசா தீவுக்கு நோ எண்ட்ரீ.; இந்திய பக்தர்களுக்கு தடை போட்ட நித்தியானந்தா..; என்னவாம்..?

கைலாசா தீவுக்கு நோ எண்ட்ரீ.; இந்திய பக்தர்களுக்கு தடை போட்ட நித்தியானந்தா..; என்னவாம்..?

kailasaசாமியார் நித்தியானந்தா… இவரைச் சுற்றி் நித்தமும் இளம் பெண்கள் கூட்டம் இருந்தும் கொண்டே இருக்கும்.

இதனால் இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.

பெண்கள் பாலியல் புகார் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அண்மையில் சிக்கியவர்.

இவரை தமிழக போலீசார் தேடிக் கொண்டிருக்கும் போதே திடீரென வெளிநாடு பறந்தார்.

இந்துக்களுக்காக கைலாசா என்ற தனித் தீவையே உருவாக்கினார்.

அந்த நாட்டுக்கென தனி ரிசர்வ் வங்கி, கரன்சி நோட்டுகளையும் வெளியிட்டார்.

எனவே பலரின் கனவும் கைலாசா நாட்டு பக்கம் திரும்பியது. கொரோனா காலத்தில் அந்த நாட்டுக்கு செல்ல பலரும் விரும்பினர்.

தற்போது இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக இருப்பதால், இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியா செல்ல அந்நாட்டு பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் நித்தியானந்தாவும், இந்திய பக்தர்களுக்கு கைலாசா நாட்டிற்கு வர தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Nithya nandha ban indian people to enter Kailasa

வருடந்தோறும் 108 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் தர சிவாஜி குடும்பம் முடிவு

வருடந்தோறும் 108 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் தர சிவாஜி குடும்பம் முடிவு

sivaji son ramkumarசிம்மக்குரலோன் நடிகர் திலகம் மறைந்த
சிவாஜி கணேசன் அவர்களின் மூத்த மகன் ராம் குமார். இவர் நடிகர் பிரபுக்கு அண்ணன் ஆவார்.

ஐ, எல்கேஜி உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்.

அண்மையில் பா.ஜ., கட்சியில் இணைந்தார்.

இந்த நிலையில் இன்று ராம்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

” கொரோனா தொற்று மீண்டும் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவ தொடங்கி உள்ளது. மக்கள் அனைவரும் முக்கவசம் அணிந்து, சமூகஇடைவெளியை பின்பற்றி பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டுகிறேன்.

இத்தருணத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வருகிற ஜூலை 21 நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி இந்தாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் துவங்கப்பட உள்ளது.

இதற்கான விதிமுறைகள், நெறிமுறைகள் விரைவில் தெரிவிக்கப்படும். அனைவரின் ஒத்துழைப்பு, ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு ராம்குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Sivaji family help to poor family

மீண்டும் ஹிந்தி படத்திற்கு அனிருத் இசை..; தனுஷின் சூப்பர் ஹிட் இயக்குனருடன் கூட்டணி

மீண்டும் ஹிந்தி படத்திற்கு அனிருத் இசை..; தனுஷின் சூப்பர் ஹிட் இயக்குனருடன் கூட்டணி

anirudh (2)தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத்.

இவர் கடந்த 2013ல் விக்ரம் நடித்த ‘டேவிட்’ என்ற ஹிந்தி படத்திற்கு ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்து இருந்தார்.

அதன் பிறகு வேறு எந்த ஹிந்தி படங்களுக்கு அனிருத் இசையமைக்கவில்லை.

தற்போது தமிழில் கமலின் இந்தியன் 2, விக்ரம் & தளபதி 65 படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.

இந்த நிலையில் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இதில் ஹீரோவாக அக்சய்குமார் நடிக்க உள்ளாராம்.

தனுஷ் நடித்த ஹிந்திப் படங்களான ராஞ்சனா & அட்ராங்கிரே (இன்னும் ரிலீஸ் ஆகவில்லை) ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த் எல்.ராய்.

இந்த இயக்குனரின் புதிய படத்தில் தான் அனிருத் இசையமைக்க கமிட்டாகியிருக்கிறார்.

Anirudh to score music for bollywood film

‘குக் வித் கோமாளி’ டைட்டில் வின்னர் வீட்டுக்கே சென்ற சிம்பு மஹத் ரக்சன்

‘குக் வித் கோமாளி’ டைட்டில் வின்னர் வீட்டுக்கே சென்ற சிம்பு மஹத் ரக்சன்

STR Mahath Rakshan (2)விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சிகளில் பிரபலமான ஒன்று குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சி இறுதிப் போட்டி ஏப்ரல் 14 அன்று நடைபெற்றது.

இந்த போட்டி டைட்டிலை டைரக்டர் அகத்தியனின் மகள் கனி வென்றார்.

அவருக்கு ரூ. 5 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேயின்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் சிம்பு.

அப்போது கனியிடம் உங்கள் கார குழம்பை சாப்பிட ஆசை என கூறினார் சிம்பு.

இந்த நிலையில், சிம்பு, மகத் மற்றும் ரக்‌ஷன் ஆகிய மூவரும் கனியின் வீட்டிற்கு சென்று அவருடைய காரக்குழம்பை ரசித்து சாப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து கனியின் கணவர் இயக்குனர் திரு அவர்கள் தன் ட்விட்டரில்…

‘சிம்பு, மகத் மற்றும் ரக்‌ஷன் ஆகிய மூவரும் தங்களுடைய வீட்டுக்கு வருகை தந்தமைக்கு நன்றி.

அவர்களது வருகை ஆச்சரியம் அளித்தது.

கனியின் காரக்குழம்பை அவர்கள் சாப்பிட்டு ரசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் திரு.

STR’s surprise visit to Cooku with comali title winner Kani

விவேக் மரணம்.: ‘மாநாடு’ ஸ்பாட்டில் சொன்னதை செய்து காட்டிய சிம்பு டீம்

விவேக் மரணம்.: ‘மாநாடு’ ஸ்பாட்டில் சொன்னதை செய்து காட்டிய சிம்பு டீம்

Maanaadu (1)கடந்த ஏப்ரல் 17ஆம் தேதியன்று . அதிகாலை நடிகர் விவேக் (மாரடைப்பால்) காலமானார்.

அன்றைய தினம் விவேக்குக்கு அஞ்சலி செலுத்த நேரில் வராவிட்டாலும் இரங்கல் தெரிவித்து இருந்தார் நடிகர் சிம்பு.

அந்த இரங்கல் அறிக்கையில்…:

“அன்பு அண்ணன், நம் சின்னக் கலைவாணர், இன் முகம் மாறாத மனிதர், எல்லோரிடமும் இயல்பாகப் பழகுபவர், கணக்கற்ற மரக்கன்றுகளை நட்டு காற்றுக்கு ஆக்சிஜனை சுவாசிக்கக் கொடுத்தவர் இன்று மூச்சற்றுவிட்டார் என்ற பெருந்துயர் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்.

சைக்கிளிங், உடற்பயிற்சி, யோகா, இசையென மிக ஆரோக்கியமான முன்னுதாரணமாக நான் ஆச்சரியப்படும் மனிதர் நடிகர் விவேக் சார்.

பண்பாளர். இவ்வளவு சீக்கிரம் இழப்போமென்று கனவிலும் நினைத்ததில்லை.

தமிழ் சினிமாவில் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் பகுத்தறிவு கருத்துகளைப் போதித்து வந்தார்.

மரங்களை நடுங்கள் என அய்யா அப்துல் கலாம் காட்டிய வழியை இளைஞர்கள் மத்தியில் விரைவாகக் கொண்டு சென்று செயல்படுத்திய செயல் வீரர். பத்மஸ்ரீ விருதுக்குப் பொருத்தமானவராக நிறைந்திருந்தார்.

அவர் மறைந்தாலும், அவர் செய்து சென்றிருக்கிற செயல்கள் அவரை என்றும் நகைச்சுவை நடிகராக, கருத்தாழம் மிக்க மனிதராக நிலைத்திருக்க வைக்கும். நம்மிடையே நிலைத்திருப்பார். என்மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.

எப்போதும் என் நல்லது, எடுக்கும் முயற்சிகள் பற்றி விசாரித்துக் கொண்டேயிருப்பார். அவருக்கு நாம் செய்ய வேண்டியது, அவர் செய்து வந்ததை நாம் தொடர்ந்து செய்வதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

நான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மரக்கன்று வைக்க இருக்கிறேன். சின்னக் கலைவாணரை நேசிக்கும் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஒரு மரக்கன்று நட்டு அவரது இதயத்துக்கு நெருக்கமான அஞ்சலியைச் செலுத்துவோம் என அன்போடு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.இதய அஞ்சலிகள் விவேக் சார்”

இவ்வாறு சிலம்பரசன் தெரிவித்து இருந்தார்.

அதன்படி இன்று ஏப்ரல் 21ஆம் தேதி ‘மாநாடு’ சூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு உள்ளிட்ட இப்பட குழுவினர் மரக்கன்றுகளை நட்டனர்.

சொன்னதை செய்தார் சிம்பு.. வாழ்த்துக்கள்

Team Maanaadu Planted trees in shooting spot in memory of Actor Vivek

More Articles
Follows