மீண்டும் மாதவன்-அனுஷ்கா இணையும் படத்தில் ஹாலிவுட் நடிகர்கள்

மீண்டும் மாதவன்-அனுஷ்கா இணையும் படத்தில் ஹாலிவுட் நடிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madhavan Anushka Shetty Anjali and Shalini Pandey team up in new movieபீப்பள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கோலிவுட், டாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர்.

நடிகர்கள் மாதவன், அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலிணி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ள இப்படத்தில் மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாற்றவுள்ளனர்.

ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.

திகில் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் அமேரிக்காவில் தொடங்கவுள்ளதாகவும் இவ்வருடமே (2019) வெளியாகும் எனவும் தயாரிப்பாளர்கள் T.G.விஸ்வபிரசாத் மற்றும் கோனா வெங்கட் அறிவித்துள்ளனர்.

கோனா வெங்கட், கோபி சுந்தர், ஷானியேல் டியோ, கோபி மோகன், நீராஜா கோனா ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றும் இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகார்ப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Madhavan Anushka Shetty Anjali and Shalini Pandey team up in new movie

அருள்நிதி நடிக்கும் *கே-13* படம் பற்றி பரத் நீலகண்டன்

அருள்நிதி நடிக்கும் *கே-13* படம் பற்றி பரத் நீலகண்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arulnithi Shraddha Srinath starrer K 13 movie news updatesஒரு நடிகரின் பெயர் ஏதாவது தலைப்புடன் தொடர்புபடுத்தி அழைக்கப்படுமானால், அருள்நிதி ‘கதைகளின்’ நாயகன் என்று அழைக்கப்படும் அளவுக்கு ஒரு கணிசமான பெயரை பெற்றிருக்கிறார்.

அவரது அடுத்த படமான ‘K13’ படமும் அருள்நிதியின் இன்னொரு முயற்சியை எடுத்துக் காட்டுகிறது.

படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்புகளை பார்வையாளர்களிடையே உருவாக்கியிருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இப்போது வெளியாகியுள்ள மோஷன் போஸ்டர் உடனடியாக அனைவரையும் கவர்ந்து, எதிர்பார்ப்புகளை மேலும் அதிகமாக்கியிருக்கிறது.

அருள்நிதியின் திரை பிரசன்னத்திற்கு சமமாக, ‘வீடு’ ஒன்றும் மோஷன் போஸ்டரில் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளது, இதற்கு முன்னர் வந்த போஸ்டர்களிலும் அது நிகழ்ந்தது.

இதில் மொபைல், கதாபாத்திரங்களை தாங்கிய காகிதங்கள் அல்லது பச்சை நிற சுவர்கள், புகை, துப்பாக்கி சூடு மற்றும் ஒவ்வொரு விஷயமும் ஆழமாக சில விஷயங்களை பதிவு செய்கின்றன.

இயக்குனர் பரத் நீலகண்டன் கூறும்போது…

“இந்த படத்தில் “K 13” என்பது குறிப்பது போல வீடு ஒன்று முக்கிய பின்னணியாக அமைந்துள்ளது. ரசிகர்கள் அதோடு ஒன்றிப்போக நாங்கள் தயார் செய்ய வேண்டியிருந்தது.

இந்த மோஷன் போஸ்டருக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் அதற்கு தேவையான தீவிரத்தை கொடுத்த ஒலி வடிவமைப்பாளர் உதயகுமார், இசையமைப்பாளர் தர்புகா சிவா ஆகியோருக்கு தான் போய் சேரும்.

மேலும், ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங், எடிட்டர் ரூபன் மற்றும் சண்டைப்பயிற்சியாளர் டி. சுதேஷ் ஆகியோர் படத்தில் அதிக ஊக்கத்தை தந்திருக்கிறார்கள்.

அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள K13 திரில்லர் படத்தை SP சினிமாஸ் சார்பில் SP ஷங்கர் மற்றும் சாந்தப்ரியா தயாரித்திருக்கிறார்கள்.

Arulnithi Shraddha Srinath starrer K 13 movie news updates

வருஷத்துக்கு 2 படமாவது நடிங்க..; அஜித்திடம் ரோபோ சங்கர் கோரிக்கை

வருஷத்துக்கு 2 படமாவது நடிங்க..; அஜித்திடம் ரோபோ சங்கர் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Try to give at least two movies per year Robo Sankar request to Ajithஅஜித்தின் விஸ்வாசம் படத்தில் மெரிட்டு என்ற கேரக்டரில் நடித்தவர் ரோபோ சங்கர்.

இப்படம் பற்றியும் அஜித் பற்றியும் அவர் கூறியதாவது….

“அஜித் சாரை முதல் முறையாக படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் சந்தித்தேன். என் நலன் பற்றியும் ,குடும்பத்தை பற்றியும் நிறைய பேசினார்.

ஒரு ரசிகனாக அவர் ஒரு வருடத்தில் இரண்டு படமாவது நடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டேன். புன்னகையோடு ஆமோதித்தார்.

நான் விஸ்வாசம் வெளிவரும் போது மதுரையில் இருந்தேன். பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் முன்னரே வந்ததை போல ஒரு உணர்வு. என்ன கொண்டாட்டம், என்ன உற்சாகம். இதெற்கெல்லாம் மூல காரணமான அவர் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக வீற்று இருப்பது, அவர் மேல் உள்ள மரியாதையை கூட்டுகிறது.

அந்த எளிமையை நானும் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறேன். அவருடன் இன்னமும் எத்தனை படங்கள் நடித்தாலும் எனக்கு ஒரு ரசிகனின் மன நிலை மாறாது. எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்த இயக்குனர் சிவாவுக்கு நன்றி” என்கிறார் ரோபோ ஷங்கர்.

Try to give at least two movies per year Robo Sankar request to Ajith

சிம்பு ரசிகராக மஹத் நடிக்கும் *கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா*

சிம்பு ரசிகராக மஹத் நடிக்கும் *கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mahat and Aishwarya Dutta Starrer Kettavanu Per Edutha Nallavandaபிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்த மகத் ராகவேந்திராவும் ஐஸ்வர்யா தத்தாவும் நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார்கள்.

குறிப்பிடத்தக்க வகையில், அவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் ரசிகர்களை உடனடியாக கவர்ந்திருக்கிறது.

குறிப்பாக, நகர்ப்புற பின்னணியில் உருவாகும் ரொமாண்டிக் காமெடி படமான இது அனைவரையும் வசீகரித்துள்ளது.

கடந்த மாதம் பூஜையுடன் துவங்கிய இந்த படம், தற்போது முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று மாலை ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என்ற தலைப்பை மகத் ராகவேந்திரா வெளியிட்டார்.

STRன் ஒரு வெற்றி படத்தின் புகழ்பெற்ற பாடல்களில் இருந்து ஈர்க்கப்பட்ட ஒரு வரியை இந்த படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார் மகத்.

இந்த படத்தில் STRன் தீவிரமான ரசிகராகவும் நடித்திருக்கிறார் மகத்.

இயக்குனர் பிரபு ராம் சி கூறும்போது…

“மகத் ஒரு வட சென்னை இளைஞராக, STRன் தீவிரமான ரசிகராக நடித்திருக்கிறார். உண்மையில், அவர்கள் இருவரின் நட்பு மக்களுக்கு தெரிந்தது, அது மகத் கதாபாத்திரத்திற்கு கூடுதல் மைலேஜாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.

STR ரசிகர்களை கவர்ந்திழுக்க இந்த தலைப்பு வைக்கப்பட்டதா என்பது குறித்து அவர் பதிலளிக்கும்போது, இந்தப் படத்தில் மகத் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தலைப்பாக இது இருக்கும்.

இது ஒரு ரொமாண்டிக் காமெடி படம் என்றாலும், படத்தில் எமோஷனல் காட்சிகளும் மிகவும் மென்மையாக கையாளப்பட்டுள்ளன. மகத் மற்றும் பணக்கார குடும்ப பெண்ணாக நடித்துள்ள ஐஸ்வர்யாவின் கெமிஸ்ட்ரி நிச்சயம் பேசப்படும்” என்றார்.

தரண் இசையமைத்துள்ள இந்த படத்தில் என்னியன் ஜெ ஹாரீஸ் (ஒளிப்பதிவு), பிரவின் பாஸ்கர் (எடிட்டர்), கிஷோர் (கலை), லோகன் (பாடல்கள்), ஸ்டன்னர் சாம் (ஸ்டண்ட்), சாண்டி (நடனம்) மற்றும் கண்ணன் (SFX) ஆகியோரும் பணிபுரிகிறார்கள்.

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபாவின்ஸ் பால் மற்றும் ஆர்.டி. மதன்குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

Mahat and Aishwarya Dutta Starrer Kettavanu Per Edutha Nallavanda

இக்ளூ (IGLOO) படத்தில் இணையும் அம்ஜத் கான் & அஞ்சு குரியன்

இக்ளூ (IGLOO) படத்தில் இணையும் அம்ஜத் கான் & அஞ்சு குரியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amjath Khan and Anju Kurian to play the young pair in Iglooடிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் “IGLOO” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் பாரத் மோகன்.

“IGLOO” நேர்மறையான விஷயங்களில் நம்பிக்கை கொண்ட ஒரு ஜோடியை சுற்றி நடக்கும் ஒரு வலைப்பின்னல் கதை. பாதகமான சூழ்நிலையில் தான் நாம் நம் வாழ்க்கையின் பெரும் பகுதியை வாழ்கிறோம்.

துருவ நிலையில் வாழும் இக்ளூஸைப் போல நாம் வாழ்கிறோம். தரமான வாழ்க்கையின் தேர்வு நேர்மறையான சிந்தனையில் உள்ளது. ஊடகம் என்பது ஒரு சக்திவாய்ந்த கருவி.

நான் அதிகபட்சமாக அதைப் பயன்படுத்த விரும்புகிறேன். டிஜிட்டல் தளங்கள் என்னை போன்றவர்களுக்கு ஒரு ஷோரீல் ஆக இருக்கிறது. இந்த தளங்களை சரியான முறையில், சரியான காரணத்துக்காக பயன்படுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

நடிகர் அம்ஜத் கான் மற்றும் அஞ்சு குரியன் இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில், மிக பொருத்தமாக நடித்துள்ளனர். பக்ஸ் மிக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.

குறிப்பிட்ட காலத்தில் இந்த திரைப்படத்தை ஆரம்பித்து முடிக்க திட்டமிட்டோம். அதை சாதித்தும் விட்டோம்.

இதை சாத்தியப்படுத்தும் எனது திறமையான குழுவினரின் மகத்தான முயற்சிகளுக்கு நன்றி. இசையமைப்பாளர் அரோல் கொரோலி மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார்.

குகன் எஸ் பழனி ஒளிப்பதிவு செய்ய, ஜிகே பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். தாமஸ் குரியன் ஒலி வடிவமைப்பு, விஜய ஆதிநாதன் கலை, செந்தில் குமரன் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்கள்.

Amjath Khan and Anju Kurian to play the young pair in Igloo

இளையராஜா 75 நிகழ்ச்சி டீசரை வெளியிட்ட பத்து ஹீரோக்கள்

இளையராஜா 75 நிகழ்ச்சி டீசரை வெளியிட்ட பத்து ஹீரோக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

10 Heros of Kollywood released Ilayaraja 75 event Teaser 2019-ம் ஆண்டு துவங்கியதும் இசைஞானி “இளையராஜா75” இசை விழாவுக்காக இசைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும் மாஸ்டரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க விழா சமீபத்தில் மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதை தொடர்ந்து டிக்கெட் விற்பனை புக் மை ஷோ ஆன்லைனில் பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது.

பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் YMCA மைதானத்தில் – கலை நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள், அரங்கு தோற்றம், பிரம்மாண்டமான LED அகன்ற திரை இப்படி பார்ப்போரை பரவசப்படுத்தும் அனைத்து வேலைகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

‘இளையராஜா75’ டீசர் பல உருவாக்கப்பட்டது. அதை ஒரே நேரத்தில் விஷால், கார்த்தி, விஜய்சேதுபதி, ஜெயம் ரவி, ஆர்யா, விஷ்ணு விஷால் ஜீவா, அதர்வா, சந்தானம் மற்றும் நந்தா ஆகிய 10 கதாநாயகர்கள் tweet செய்து பரவசப்படுத்தினார்கள்.

இவர்கள் தங்களது twitter பக்கத்தில் இந்நிகழ்ச்சியில் நாங்களும் பங்கு பெறுகிறோம் என்று வீடியோ பதிவேற்றம் செய்து ரசிகர்களையும் வரவேற்று பரவசப்படுத்தியுள்ளார்கள்.

இதை ரசிகர்களும் பதிவிறக்கம் செய்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்து பரவசப்படுத்தியுள்ளார்கள்.

அனைவரையும் ஈர்க்கும் விதமாக இன்னும் பல VIPக்கள் வெளியிட உள்ளனர்.

பிப்ரவரி 2-ம் தேதி இசைஞானி இளையராஜா அனைத்து மொழி ஜாம்பவான்ங்களுடன் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் விதமாக கலைஞர்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடுகிறார்கள்.

இதை அவர் விழா காண வந்துள்ள ரசிகர்களுடன் அமர்ந்து ரசிக்கிறார். அடுத்தநாள் 3-ம் தேதி இளையராஜா அவரது குழுவினருடன் சேர்ந்து நிகழ்த்தும் மாபெரும் இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக அமைக்கப்படும் மேடையில் நடை பெறுகிறது.

இந்த இரண்டு நாள் விழாவுக்கான டிக்கெட் நாளுக்கு நாள் வேகமாக விற்பனை அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
நன்றி.

– தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

10 Heros of Kollywood released Ilayaraja 75 event Teaser

More Articles
Follows