மாடலிங் ஷோ நடத்தி மாற்றுத் திறனாளிகளின் கல்விக்கு உதவிய நிறுவனங்கள்

மாடலிங் ஷோ நடத்தி மாற்றுத் திறனாளிகளின் கல்விக்கு உதவிய நிறுவனங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madarase Mr and Mrs India 2020 Season 3 Modelling ShowMadarase Entertainment மற்றும் Greenmedows Resorts நிறுவனம் இணைந்து Madarase Mr & Mrs India 2020 season 3 ஐ நடத்துகிறார்கள்.

மூன்றாவது சீசனாக தென்னிந்தியாவின் மிகப்பெரிய திறமையின் தேடலாக, புது திறமைகளை அடையாளப்படுத்தும் நிகழ்வாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி மாற்று திறனாளி குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர் கல்விக்காக நடத்தப்பட்டது.

Madarase Entertainment மற்றும் Greenmedows Resorts வழங்க Gframes நிறுவனம் JKP Fashion Studio இணைந்து இந்தப்போட்டியினை நடத்தியது.

ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் அவர்களது திறமையினை நிரூபிக்க வாய்ப்பாக நடத்தப்படும் இப்போட்டி 2020 மார்ச் 15,16 தேதிகளில் நடத்தப்பட்டது.

இதன் மூலம் வரும் வருவாய் மாற்றுத் திறனாளி குழந்தைகள் கல்விக்காக பயன்படுத்தப்படுகிறது. மூன்று வருடங்களாக தொடர்ந்து இந்நிகழ்ச்சியினை Madarase Entertainment நடத்தி வருகிறது.

Madarase Mr and Mrs India 2020 Season 3 Modelling Show

 

கொலைக்கார ‘கொரோனா’ குறித்து லொஸ்லியா சொன்ன அட்வைஸ்

கொலைக்கார ‘கொரோனா’ குறித்து லொஸ்லியா சொன்ன அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Losliyas awareness advice of Corona virus கமல் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் படு பிரபலமானவர் லொஸ்லியா.

தற்போது நடிகர் ஆரி நடிக்கும் படத்திலும் பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் Friednship படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொலைக்கார கொரோனா வைரஸ் குறித்து தன் கருத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் “Please stay safe” என மாஸ்க் அணிந்திருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார்.

Actress Losliyas awareness advice of Corona virus

முன்னழகை காட்டி நடுரோட்டில் முத்தம்..; அமலாபால் அடங்க மாட்டார் போலவே..!!

முன்னழகை காட்டி நடுரோட்டில் முத்தம்..; அமலாபால் அடங்க மாட்டார் போலவே..!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amala Pauls recent kiss photo goes viral சிந்து சமவெளி படம் தொடங்கி கடந்த ஆண்டு வெளியான ஆடை படம் வரை வித்தியாசமாக நடித்து சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் நடிகை அமலாபால்.

இதனிடையில் மைனா, தலைவா, தெய்வ திருமகள், பசங்க 2 படங்களில் அருமையாக நடித்து கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள அதே அந்த பறவை போல படம் ஹீரோயின் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது.

இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

அண்மையில் தன் தோழிக்கு கண்ட இடங்களில் தடவி முத்தமிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டார்.

கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை “ஹாட்”டாக்கும் அமலாபால்

மேலும் தன் பாய் ப்ரெண்டுடன் காற்று போக முடியாத படி கட்டியணைத்து ஒரு போட்டோவை வெளியிட்டார்.

இவை அனைத்துமே சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.

இந்த நிலையில் அரைகுறை ஆடையில் முன்னழகை காட்டியபடி மும்பை நகர் வீதியில் நின்றபடி முத்தம் கொடுக்கிறார்.

அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.

அந்த முத்தத்தை அமலா பால் யாருக்கு கொடுத்திருப்பார் என்பது தான் கேள்வி.?

Amala Pauls recent kiss photo goes viral


View this post on Instagram

Have A Good Time While There’s Still Time. #gypsylife #artoftheday #lifeinmumbai

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on

அய்யப்பனும் கோஷியும் பட தமிழ் உரிமையை வாங்கிய 5 ஸ்டார் கதிரேசன்

அய்யப்பனும் கோஷியும் பட தமிழ் உரிமையை வாங்கிய 5 ஸ்டார் கதிரேசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

5 Star Kathiresan acquires Ayappanum Koshiyum Tamil remake rightsநடிகர் ப்ரித்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளிவந்த “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரின் பாராட்டு பெற்று பெரு வெற்றி அடைந்துள்ளது. வசூலிலும் விநியோகஸ்தர்களை பெரிய அளவில் திருப்தி படுத்தியிருக்கிறது இந்த திரைப்படம்.

மிக எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியுள்ள இந்தப்படம் போன்று தமிழில் ஒரு படம் வெளியாகுமா என ரசிகர்கள் ஏங்கிய நிலையில், அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தும் ஒரு ஆச்சர்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழில் மிகச்சிறந்த படங்கள் தந்த, மிக முக்கிய தயாரிப்பாளராக விளங்கும் 5 ஸ்டார் கதிரேசன் “அய்யப்பனும் கோஷியும்” படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் கூறியதாவது…

மிகச்சாதாரண சினிமா ரசிகன் போலவே இந்தப்படம் பார்த்து நானும் பிரமித்து போனேன். அரிதிலும் அரிதாக, வெகு சில திரைப்படங்களே தொடக்கம் முதல் முடிவு அனைத்து அம்சங்களும் பொருந்தி வந்து நம்மை முழுதாக பரவசப்படுத்தும்.

படத்தின் திரைக்கதை, கதை சொல்லப்பட்டிருக்கும் பின்னணி களம், அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், அனைத்தையும் தாண்டி கதையை தாங்கும், ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பிரமிப்பான நடிப்பு, இவையனைத்தும் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுவதாக அமைந்திருக்கிறது.

இந்த படத்தின் தமிழ் உரிமையை கைப்பற்றியது மகிழ்ச்சி என்றாலும் இப்போது மிகப்பெரும் பொறுப்புணர்வு உருவாகியிருக்கிறது.

இப்படத்தை அதன் சாரம் கெடாமல், தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு, மலையாளப் பதிப்பின் மதிப்பு கெட்டுவிடாமல், ரீமேக் செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

தமிழின் முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் இப்படத்தின் ரீமேக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மிக விரைவில் தமிழ் பதிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

5 Star Kathiresan acquires Ayappanum Koshiyum Tamil remake rights

50 ரூபாய்ல எல்லாரும் பார்க்க ஒரு சினிமா.; ஜெய் ஆகாஷின் சூப்பர் ஐடியா

50 ரூபாய்ல எல்லாரும் பார்க்க ஒரு சினிமா.; ஜெய் ஆகாஷின் சூப்பர் ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jai Akash launched A Cube Mobile App to watch moviesநடிகர் ஜெய் ஆகாஷ் தமிழில் குறிப்பிடத்தக்க நடிகராக விளங்குபவர். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் கலக்குபவர். இவர் படங்கள் தமிழ் தவிர்த்து தெலுங்கு மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது “அடங்காத காளை” என்னும் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து, இயக்கிவருகிறார். மேலும் ரசிகர்கள் படம் பார்க்க A Cube எனும் புதிய மோபைல் ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது…

தற்போது “அடங்காத காளை” படத்தை நடித்து, தயாரித்து இயக்கியுள்ளேன். இப்படத்தில் எனக்கு அப்பா மகன் என இரு வேடங்கள். அப்பா ஒரு காவல்துறை அதிகாரி ஆனால் கெட்டவர். மகன் சாப்ட்வேர் என்ஞ்னியர் அவன் கெட்டவனா? நல்லவனா? என்பது ரகசியம்.

நடிகர் சாம்ஸ் எனது நண்பனாக ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா, குஷி ஆகியோர் நடித்துள்ளார்கள். அப்பா வேடத்திற்கு ஜோடியாக தொலைக்காட்சி நடிகை தேவி கிருபா நடிக்கிறார்.

இசை UK முரளி செய்துள்ளார். ஒளிப்பதிவு சக்ரி செய்துள்ளார். இப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வருகிறது. தெலுங்கில் இப்படம் “அந்தால ராக்சஷடு” எனும் தலைப்பில் வருகிறது.

இதன் படப்பிடிப்பு 50 சதவீதம் சென்னையிலும் 50 சதவீதம் ஹைதராபாத்திலும் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தை வெளியிட ஒரு புதிய ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளோம்.

இந்த ஆப் ரசிகர்கள் படம் பார்க்க மிகச்சிறந்த, எளிய வழியாக இருக்கும். வருகிற 18ந்தேதி எனது பிறந்த நாளன்று A Cube ஆப்பை வெளியிடுகிறோம்.

இந்த ஆப்பை அனைவரும் தங்கள் மொபைலில் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். இந்த ஆப்பில் வாராவாரம் ஒரு படத்தை வெளியிடவுள்ளோம். முதல் படமாக எனது “அடங்காத காளை” படம் வெளியாகிறது.

இந்த ஆப்பின் சிறப்பு என்னவெனில் படத்தை நீங்கள் தியேட்டரில் பார்க்க முடியாவிட்டால் 50 ரூபாய் கட்டி இந்த ஆப்பில் இரண்டு நாட்கள் வரை பார்த்து கொள்ளலாம். நீங்கள் பார்த்த பிறகு அந்த இரண்டு நாட்களில் வேறு எவர் வேண்டுமானாலும் பார்க்கலாம். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு படம் வெளியிட இருக்கிறோம்.

எனது அடுத்த படம் “புதிய மனிதன்” தெலுங்கில் “கொத்தகா உன்னாடு” என்றும் வரும் படம் இந்த ஆப்பில் அடுத்து வெளியாகும்.

வேறு பல தயாரிப்பாளர்களும் தங்களது படத்தை இந்த A Cube ஆப்பில் வெளியிட விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அவர்களது படமும் A Cube ஆப்பில் வெளியாகும். நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்க குடும்பத்துடன் தியேட்டர் போனால் அதன் செலவு தற்காலத்தில் 1000 ரூபாய்க்கும் மேல் ஆகிவிடும்.

ஆனால் இந்த A Cube ஆப்பில் நீங்கள் மிக குறைந்த கட்டணத்தில் குடும்பம் மொத்தமும் பார்க்க முடியும். அனைவரும் மிக எளிதான வழியில் படம் பார்க்க ஒரு மிகச்சிறந்த ஆப்பாக A Cube ஆப் இருக்கும் என்றார்.

Jai Akash launched A Cube Mobile App to watch movies

தமிழ் மலையாளம் ஹிந்தி… 3 குதிரை சவாரி செய்யும் கோமல் ஷர்மா

தமிழ் மலையாளம் ஹிந்தி… 3 குதிரை சவாரி செய்யும் கோமல் ஷர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Actress Komal sharmas 3 language movie updates தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டப்படி குற்றம்’ படத்தில் அறிமுகமானவர் கோமல் சர்மா.

அதன்பிறகு நாகராஜசோழன் எம்எல்ஏ, வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்த இவர் தற்போது தமிழகம் தாண்டி மலையாளம், இந்தி என தனது எல்லைகளை விரிவாக்கியுள்ளார்.

மலையாளத்தில் தற்போது மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகி வரும் ‘மரைக்கார் ; அரபிக்கலிண்டே சிம்ஹம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் கோமல் சர்மா.. பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள இந்தப் படம் குஞ்சாலி மரைக்கார் என்கிற கடற்படை தலைவனை பற்றிய படமாக உருவாகியுள்ளது.

விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ளது.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கோமல் சர்மா கூறும்போது…

“இந்த படத்திற்காக ஆடிசன் வைத்துதான் என்னை தேர்வு செய்தார் இயக்குநர் பிரியதர்ஷன். பொதுவாகவே மோகன்லால் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோரின் படங்களில் ஒருமுறையாவது நடித்து விடவேண்டும் என்பது எல்லோருக்குமே ஒரு கனவாக இருக்கும்.

அந்த கனவு எனக்கு ஒரே படத்தில் அதுவும் மிகப்பிரமாண்டமான வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பாக நிறைவேறியுள்ளது என்பதை இப்போது கூட என்னால் நம்பவே முடியவில்லை. சொல்லப்போனால் ஒரு லட்டை எதிர்பார்த்த எனக்கு ஒரே படத்திலேயே மூன்று லட்டு கிடைத்தது.

அந்தப்படத்தின் படப்பிடிப்பில் நடித்த அனுபவமே ரொம்ப வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக கிட்டத்தட்ட 400 படங்களில் நடித்துவிட்ட மோகன்லால் சார், நான் ஒரு வளர்ந்து வரும் நடிகை என்கிற பாகுபாடு எல்லாம் பார்க்காமல் மிக இயல்பாக பழகினார்.

படத்தில் எனக்கு பெரும்பாலான காட்சிகள் அர்ஜுன் சாருடன் தான் இருந்தாலும், மோகன்லால், நெடுமுடி வேணு உள்ளிட்ட மற்ற அனைத்து நடிகர்களுடனும் நான் நடிக்கும் காட்சிகளும் இருந்தன.

மோகன்லாலை பொருத்தவரை எந்த ஒரு காட்சியையும் ஒரே டேக்கில் ஓகே செய்யக்கூடியவர்.. அதனால் நானும் அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகளுக்கு என்னால் எந்தவித இடைஞ்சலும் வந்துவிடக்கூடாது என்பதால் படப்பிடிப்பிற்கு முன்னதாகவே, ஓரளவுக்கு மலையாளம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

இதற்காக தினசரி 2 மணி நேரம் மலையாளம் பேசி பயிற்சி எடுத்தேன். அது படப்பிடிப்பில் ஒரே டேக்கில் காட்சிகளை ஓகே செய்ய எனக்கு ரொம்பவே உதவியாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் கூட மலையாள புத்தகத்தை வைத்து ஏதாவது கற்றுக் கொண்டுதான் இருந்தேன்.

இந்த படத்தில் வரலாற்று கால உடைகள், ஆபரணங்கள், அப்போது பயன்படுத்தப்பட்ட வாள் போன்றவற்றை அணிந்துகொண்டு நடித்தது புது அனுபவமாக இருந்தது.

மரைக்கார் படத்தில் நடிக்கும்போதே மோகன்லால் சார் நடித்த இன்னொரு படமான ‘இட்டிமானி மேட் இன் சைனா’ என்கிற படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது..

அந்தப்படத்தில் நடிகை ராதிகாவின் மகளாக நடித்து இருந்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இடைவேளை நேரங்களில் நானும் ராதிகாவும் மட்டும் தமிழில் பேசிக்கொண்டே இருப்போம்.. படக்குழுவினர் எங்களை ஆச்சரியமாக பார்ப்பார்கள்..

இன்னொரு பக்கம் மரைக்கார் படம் முடிவடைந்ததும் இயக்குநர் பிரியதர்ஷன் இந்தியில் ‘ஹங்கமா-2’ படத்தை தொடங்கினார் இது அவர் ஏற்கனவே 2003-ல் இந்தியில் இயக்கிய ‘ஹங்கமா’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது..

மரைக்கார் படத்தில் எனது நடிப்பை பார்த்து வியந்து போனவர், இந்த ‘ஹங்கமா-2’ படத்தின் மூலம் இந்தியில் நுழையும் வாய்ப்பையும் எனக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

இந்தபடத்தில் ஷில்பா ஷெட்டி, பரேஷ் ராவல் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது.

அந்தவகையில் மரைக்கார் படத்தில் நடித்ததன் மூலம் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தயாரித்த இன்னொரு படத்திலும், அந்த படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய இன்னொரு படத்திலும் நடிக்கும் வாய்ப்பு தானாகவே கிடைத்தது மிகப்பெரிய விஷயம்..

கடுமையான உழைப்பு எப்போதும் வீண் போகாது என்பதை அப்போதுதான் நான் உணர்ந்து கொண்டேன்” என்கிறார் கோமல் சர்மா.

மலையாளம், இந்தி என திசை திரும்பியதால் தமிழ் படங்கள் இரண்டாம் பட்சம் தானா என கேட்டால் பதறுகிறார் கோமல் சர்மா.. “தமிழில் சில படங்களில் நடித்து வருகிறேன்.. சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து முறையான அறிவிப்பு வெளியாகும்” என்கிறார்.

Actress Komal sharmas 3 language movie updates

More Articles
Follows