அசர வைத்த ‘அகண்டா’ ஒளிப்பதிவு..; மகிழ்ச்சியில் ‘மாயோன்’ ஒளிப்பதிவாளர்

அசர வைத்த ‘அகண்டா’ ஒளிப்பதிவு..; மகிழ்ச்சியில் ‘மாயோன்’ ஒளிப்பதிவாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் வெளியாகி வசூலில் சாதனைப் படைத்து வரும் ‘அகண்டா’ படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்திற்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இவர் தமிழில் தயாராகி, விரைவில் வெளியாகவிருக்கும் ‘மாயோன்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘அகண்டா’.

இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுடன் பிரக்யா ஜெய்ஸ்வால், பூர்ணா, ஸ்ரீகாந்த், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பொயப்பட்டி ஸ்ரீனு இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

தெலுங்கு பேசும் மாநிலங்களிலும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியிட்ட தேதி முதல் வசூலில் சாதனை படைத்து வருவதற்கு இந்தப் படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்டமான விஷுவல் காட்சிகளும் காரணம் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘அகண்டா’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத், தமிழில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் என் கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘மாயோன்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

அவர் தமிழில் அறிமுகமாகும் ‘மாயோன்’ படத்திலும் பிரம்மாண்டமான விஷுவல் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

அவருடைய கடினமான உழைப்பை பாராட்டி ‘மாயோன்’ பட குழுவினர், ‘அகண்டா’ படத்திற்கும், ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத்திற்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.

Maayon team wishes to cinematographer Ram Prasath

ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில் கதை நாயகர்களாக யோகிபாபு & ரமேஷ் திலக்

ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில் கதை நாயகர்களாக யோகிபாபு & ரமேஷ் திலக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ரெஜிஷ் மிதிலா தமிழில் யோகிபாபுவை நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை உருவாக்குகிறார்.

ரெஜிஷ் மிதிலா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இத்திரைப்படம் முழுக்க, முழுக்க ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகவுள்ளது.

பெயரிடப் படாத ‘புரொடக்‌ஷன்1’ ஆக உருவாகும் இப்படத்தின் பூஜையில் படக்குழுவினர் மற்றும் திரைபிரபலங்கள் கலந்து கொள்ள எளிய முறையில் நடைபெற்றது.

யோகிபாபு மற்றும் ரமேஷ் திலக் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ பாட்டி ), நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் எளிய பூஜையுடன் துவங்கியது.

தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை, ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து, இயக்கம் : ரெஜிஷ் மிதிலா
தயாரிப்பாளர்கள்: ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ்

தயாரிப்பு நிறுவனம்: தி கிரேட் இந்தியன் சினிமாஸ்
ஒளிப்பதிவு : கார்த்திக் எஸ் நாயர்
படத்தொகுப்பு : சைலோ
இசையமைப்பாளர்: பரத் சங்கர்

ஆடை வடிவமைப்பாளர்: குவோச்சாய்.S
ஒப்பனை: கோபால்
நிர்வாக தயாரிப்பு : சுனில் ஜோஸ்
தயாரிப்பு மேற்பார்வை : ஜெயபாரதி

முதன்மை இணை இயக்குனர்: நிதிஷ் வாசுதேவன்
இணை இயக்குனர்: கார்த்தி
இணை இயக்குனர்: அகில் V மாதவ்
உதவி இயக்குனர்கள்: பிரஜின் MP,
தண்டேஷ் D நாயர், வந்தனா
விளம்பர வடிவமைப்பாளர்: சிவகுமார்
ஸ்டில்ஸ்: ஜோன்ஸ்
Pro: ஜான்சன் .

Yogi Babu and Ramesh Thilak plays protogonist in new film

‘ஆன்டி இண்டியன்’ படத்தை பார்த்த பாரதிராஜா பாக்யராஜ் சீமான் சேரன் என்ன சொன்னாங்க.?

‘ஆன்டி இண்டியன்’ படத்தை பார்த்த பாரதிராஜா பாக்யராஜ் சீமான் சேரன் என்ன சொன்னாங்க.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் *ஆன்டி இண்டியன்*..

சினிமா விமர்சகராக இருந்து, இயக்குநராக மாறியுள்ள மாறன் இயக்கிய படம் எப்படி இருக்கும் என்பதால் ரசிகர்கள், திரையுலகினர் என இருதரப்பினரிடமும் இந்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு மற்ற படங்களை விட அதிகமாகவே உள்ளது.

வரும் டிச-1௦ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் சிறப்புக் காட்சித் திரையிடலில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா இந்த படத்தைப் பார்த்துவிட்டு பேசும்போது, “எடுக்கின்ற திரைப்படங்களை எல்லாம் இந்த ப்ளூ சட்டை மாறன் இப்படி நையாண்டி செய்து விமர்சனம் பண்ணி வருகிறானே.. இவன் ஒரு படம் எடுக்கட்டும் பார்க்கலாம் என நினைத்தேன்.. படத்தையும் எடுத்து விட்டான்.

நம்பிக்கை இல்லாமல் தான் இந்தப் படத்தை பார்த்தேன்..

ஏதாவது ஒரு இடத்திலாவது அவனுக்குப் பதிலடி தருவதற்கு இடம் கிடைக்குமா என எதிர்பார்த்தேன்..

ஆனால் அதற்கான வாய்ப்பை எனக்கு இந்தப் படம் தரவே இல்லை. இத்தனை நாட்கள் மற்ற திரைப்படங்களை விமர்சித்து வந்த ப்ளூ சட்டை மாறன், தான் அதற்கு தகுதியான நபர் தான் என நிரூபித்துவிட்டான் என்று கூறினார்

இயக்குநர் சேரன் படம் பற்றி கூறும்போது, “சமூக அவலங்களை ,சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை, மனிதனுக்குள் மதம் புகுந்து எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதை அருமையான படைப்பாக கொடுத்துள்ளார். ஒரு விமர்சகராக இருந்து இயக்குநராக அவர் எடுத்திருக்கும் அற்புதமான, மிகச்சிறப்பான முயற்சி இது” என்றார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது,

இந்தப்படத்தை 18 நாட்களில் எடுத்துள்ளார்கள் என்றால் என்னால் நம்பவே முடியவில்லை. மதம் எந்த அளவுக்கு மனிதத்தைக் கொல்கிறது என அப்படியே தனது படைப்பில் காட்சிகளாகவும் உரையாடல்கள் மூலமாகவும் உணர்த்தியுள்ளார் மாறன்.

அதேசமயம் எந்த ஒரு சாராரைப் பற்றியும் குறிப்பிடும் படமாகவும் இது உருவாகவில்லை.

இசையமைப்பாளராகவும் மாறி இப்படத்திற்கு தேவையான பின்னணி இசையையும் சரியாகக் கொடுத்துள்ளார்..

இந்தப்படத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. படம் எல்லாராலும் பெரிதும் ரசிக்கப்படும்” என்றார்.

ப்ளூ சட்டை மாறன் பேசும்போது, “இந்த படத்தைப் பார்த்துவிட்டு உங்களது குறை நிறைகளை சொல்லுங்கள் என்று பாரதிராஜா, பாக்யராஜ், சேரன், சீமான் ஆகியோரிடம் கேட்டேன் ஆனால் படம் பார்த்துவிட்டு, சொல்வதற்கு குறை என ஒன்றுமே இல்லை என கூறிவிட்டார்கள்.

குறிப்பாக இயக்குர் இமயம் பாரதிராஜா என்னை பார்க்கும்போதெல்லாம் நீ ஒரு படம் எடுடா, உன் படத்தை நான் விமர்சிக்கிறேன் என்று கூறுவார்.. ஆனால் இப்போது விமர்சிப்பதற்கு ஒன்றுமே இல்லை என்று படத்தை பாராட்டியுள்ளார் கேட்கவே சந்தோசமாக இருக்கிறது.

இயக்குநர் சங்கத்தில் உள்ள அனைவரும் இந்த படத்தை பார்த்துவிட்டு படம் முடிந்ததும் எழுந்து நின்று கைத்தட்டினார்கள்.

ரசிகர்களிடமிருந்தும் இதேபோன்ற பாராட்டு கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்

Celebrities reaction after watching Anti Indian

ஆர்யாவுக்கு ‘அயோத்யா’ அவார்ட்டு பார்ய்யா…; மகிழ்ச்சியில் ‘மகாமுனி’ குழு

ஆர்யாவுக்கு ‘அயோத்யா’ அவார்ட்டு பார்ய்யா…; மகிழ்ச்சியில் ‘மகாமுனி’ குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019ல் வெளியான படம் மகாமுனி.

தமன் இசையமைத்த இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து இருந்தது. ரசிகர்களால் இந்த படத்திற்கு பெரும் பாராட்டுக்கள் கிடைத்தது.

இதுவரை 9 சர்வதேச விருதுகளையும் இந்த படம் வென்றுள்ளது.

இந்த நிலையில் 15வது அயோத்யா திரைப்பட விழாவில் மகாமுனி படத்தில் நாயகனாக நடித்துள்ள ஆர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஆர்யா கூறியிருப்பதாவது..”அயோத்யா திரைப்பட விழாவின் 15ஆவது ஆண்டு விழாவில் மகாமுனியில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது மகிழ்ச்சி.

இயக்குனர் சாந்தகுமார், இசையமைப்பாளர் தமன், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு எனது நன்றிகள் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த விருதால் மகாமுனி படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Arya wins best actor award at Magamuni film festival

மலையாள சூப்பர் ஸ்டார் படத்தில் ரம்யா பாண்டியன்

மலையாள சூப்பர் ஸ்டார் படத்தில் ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய மக்களை கவர்ந்த ‘ஜோக்கர்’ படம் மூலம் தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் நடிகை ரம்யா பாண்டியன்.

அதன்பின்னர் மறைந்த இயக்குனர் தாமிரா இயக்கிய ஆண் தேவதை படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார்.

பின்னர் ‘குக் வித் கோமாளி, மற்றும்பிக் பாஸ் சீசன் 2’ ஆகிய டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

நடிகர் சூர்யா தயாரித்த ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படம் இவரது நடிப்பில் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த நிலையில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும் மலையாளப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் நடிக்கிறார் ரம்யா.

இந்த படத்திற்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என பெயரிட்டுள்ளனர். தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Actress Ramya Pandian to romance with Malayalam Super Star

தூசி தட்டப்படும் ‘துப்பறிவாளன் 2’.; இளையராஜா இசையில் இயக்குனராகிறார் விஷால்

தூசி தட்டப்படும் ‘துப்பறிவாளன் 2’.; இளையராஜா இசையில் இயக்குனராகிறார் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தயாரிப்பாளர் என விறுவிறுப்பாக இயக்கி வரும் விஷால் ‛துப்பறிவாளன் 2′ பட மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.

துப்பறிவாளன் முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கினே 2ஆம் பாகத்தையும் இயக்கி வந்தார். சில நாட்கள் லண்டனில் பட வேலையை துவங்கிய நிலையில் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் பிரச்சினை உருவானது.

இதனால் படத்திலிருந்து மிஷ்கின் விலக தற்போது விஷாலே இயக்க உள்ளதாக அறிவித்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

இந்த நிலையில் தற்போது துப்பறிவாளன் 2 படத்தை அடுத்தாண்டு 2022 ஏப்ரல் முதல் படப்பிடிப்பை லண்டனில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பில் ஒரு புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

Vishal’s Thupparivaalan 2 to resume shooting from April

More Articles
Follows