இது SK Special Surprise : 6 மணிக்கு ‘மாவீரன்’.. 7 மணிக்கு ‘மாவீருடு’

இது SK Special Surprise : 6 மணிக்கு ‘மாவீரன்’.. 7 மணிக்கு ‘மாவீருடு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க, மிஷ்கின், யோகி பாபு, சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.

‘மாவீரன்’ திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மாவீரன்

இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இன்று மாலை 6.00 வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், தெலுங்கின் ‘மாவீருடு’ 7.00 வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீருடு

maaveeran film team gives big reveal to fans

கூகுளும் யூடியூபும் நுழைவதற்கு முன்பு…; ‘டிராஃபிக் ராமசாமி’ இயக்குநரின் அடுத்த அதிரடி

கூகுளும் யூடியூபும் நுழைவதற்கு முன்பு…; ‘டிராஃபிக் ராமசாமி’ இயக்குநரின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகம் முழுவதும் குழந்தைகள் படங்களுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில் அஞ்சலி, பசங்க, காக்கா முட்டை என்று குழந்தைகள் படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

தற்போது ‘மாமன்னன்’ எடுத்த மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற குழந்தைகள் படத்தை எடுத்து வருகிறார்.

இந்த வரிசையில் குழந்தைகள் படம் ஒன்றை இயக்குகிறார் டிராபிஃக் ராமசாமி படத்தின் இயக்குநர் விக்கி
.
இப் படத்தைப் பற்றி அவர் கூறிய போது…

“கேள்விகளால் உலகை அழகாக்கியவர்கள் குழந்தைகள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்கும் போது அவர்களின் அறிவு விரிவடைகிறது.

தொலைக்காட்சிகள் 90’களின் துவக்கத்திலும், இணையதளம் 90’களின் இறுதியிலும் தமிழகத்தில் பரவலாகத் தொடங்கின. இவை வீடு புகுந்து தமிழ்க் குடும்பங்களுக்குள் நுழைந்ததிலிருந்து புழுதியில் மண்ணுடன் மண்ணாக விளையாடிய குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.

அதன் விளைவாக இப்போதுள்ள குழந்தைகளிடம் கேள்விகள் குறைந்துபோய் பதில்களாகவே நிறைந்து இருக்கிறது. இவர்களுக்கு உலகைப் பற்றி அனைத்துமே தெரிந்திருக்கிறது.

இப்படம் கூகுளும், யூடியூபும் தமிழகத்திற்குள் நுழைவதற்கு முன்பு குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்த பொற்காலத்தையும், அவர்களின் உலகத்தையும் நகைச்சுவையாகச் சொல்லும் கிராமத்துப் பின்னணியில் அமைந்ததாக இருக்கும்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு சென்னையிலும், நடிகர்கள் தேர்வு மதுரை, சிவகங்கை வட்டாரங்களிலும் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இப்படத்தை கனா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது”

இவ்வாறு இயக்குநர் விக்கி கூறினார்.

Traffic Ramasamy movie directors next project updates

காமெடியன் பாவா லட்சுமணன் கால் விரல் அகற்றம்.; அரசு மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முத்துக்காளை

காமெடியன் பாவா லட்சுமணன் கால் விரல் அகற்றம்.; அரசு மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முத்துக்காளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் பாவா லட்சுமணன். இவர் பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் வடிவேலுடன் இணைந்த பின்னர் இவரது காமெடி பெரும் வரவேற்பை பெற்றது.

மம்மூட்டி, முரளி நடித்த ‘ஆனந்தம்’ படத்தில் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரனாக நடித்திருந்தார். மேலும் ‘எல்லாம் அவன் செயல்’ என்ற படத்தில் வடிவேலுவின் உதவி வழக்கறிஞராக இவரும் அல்வா வாசுவும் நடித்திருந்தனர்.

ஒரு காட்சியில் வடிவேலு ஜாமீன் கேட்டு சிறையில் கைதியாக காத்திருப்பார். அப்போது எல்லாம் மார்க்கெட்டிலும் தேடிவிட்டோம்.

ஜாமீன் என்ற மீன் மட்டும் கிடைக்கவில்லை என காமெடி செய்திருப்பார். அவரின் அந்த காமெடியை இன்றளவு நம்மால் மறக்க முடியாது.

இவர் சமீப காலமாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் காமெடி நடிகர் பாவா லட்சுமணன் அவர்களை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடிகர் முத்துக்காளை இரண்டாவது முறையாக சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜனும் அருகில் இருந்தார்.

பாவா லட்சுமணனுக்கு அகற்றப்பட்ட கால் கட்டை விரல் இடத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அடுத்த வாரம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாவா லட்சுமணன்

Actor Bava Lakshmanan plastic surgery treatment

#STR49 UPDATE : மீண்டும் சிம்பு – ரஹ்மான் வேல்ஸ் கூட்டணி.; இயக்குனர் இவரா.?

#STR49 UPDATE : மீண்டும் சிம்பு – ரஹ்மான் வேல்ஸ் கூட்டணி.; இயக்குனர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தனது 25 வது படத்தை அறிவித்திருந்தது. ‘ஜீனி’ என்று பெயரிடப்பட்ட இந்த படத்தை அர்ஜுன் ஜூனியர் இயக்க ஜெயம் ரவி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தொடர்ந்து மீண்டும் சிம்பு – வேல்ஸ் – ஏ ஆர் ரகுமான் ஆகியோரது கூட்டணி மீண்டும் இணையுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் சிம்புவின் 49 வது படமாக உருவாகுகிறதாம்.

சமீபத்தில் சிம்புவை ‘போர் தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா சந்தித்து கதை கூறியதாக கூறப்பட்டு வந்தது.

எனவே சிம்புவின் அடுத்த படத்தை அவர்தான் இயக்குவார் என தகவல் வந்த நிலையில் தற்போது சிம்பு 49 படத்தை ‘அடங்க மறு’ இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்குவார் என தகவல்கள் வந்துள்ளன.

எனவே விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.

சிம்புவின் 48வது படத்தை கமலஹாசன் தயாரிக்க தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் தங்கவேல்

STR 49 movie update Again Vels and ARR Combo

டென்பின் பவுலிங் இறுதிப்போட்டி : பரிசுகளை வழங்கிய ‘தீராக் காதல்’ இயக்குநர்

டென்பின் பவுலிங் இறுதிப்போட்டி : பரிசுகளை வழங்கிய ‘தீராக் காதல்’ இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை எழும்பூரில் உள்ள DU பவுலில் நடைபெற்ற 3வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப்போட்டியில் முன்னாள் மாநில சாம்பியன் யூசுப் ஷபீர், கணேஷ்.என்.டி-யை (384-355) வீழ்த்தினார் சாம்பியன் பட்டம் வென்றார்.

இரண்டு சுற்றுகளில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய இறுதிப் போட்டியில் கணேஷ், யூசுப்பை (177-170) விட 7 பின்கள் முன்னிலையுடன் முதல் சுற்றை முடித்தார்.

2வது சுற்றில் யூசுப் 178 புள்ளிகளுடன் மீண்டும் ஆதிக்கம் செலுத்தினார். இதன் மூலம் 29 பின்களின் ஒட்டுமொத்த பின்ஃபால் வித்தியாசத்தில் கணேஷை யூசுப் ஷபீர் வீழ்த்தினார்.

முந்தைய நாள், இரண்டு சுற்றுகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய முதல் அரையிறுதியில், முதல் நிலை வீரரான யூசுப் ஷபீர் நான்காம் நிலை வீரரான அக்ரமுல்லா பைக்-ஐ இரண்டு கேம் நாக் அவுட்டில் 78 பின்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

யூசுப் ஷபீர் போட்டியின் 2வது மற்றும் 3வது சுற்றில் 18 சுற்றுகளின் தகுதி புள்ளிகளை சராசரியாக 187.06 (பின்ஃபால் 3367) இல் முடித்தார்.

2வது அரையிறுதியில் இரண்டாம் நிலை வீரரான ஆனந்த் பாபு, மூன்றாம் நிலை வீரரான கணேஷ் என்.டி-யை எதிர்த்து விளையாடினார்.

கணேஷ் 32 பின்கள் வித்தியாசத்தில் ஆனந்தை (389-357) தோற்கடித்து இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தார்.

சிறப்புப் பரிசுகள்:
6 கேம் பிளாக்கில் அதிகபட்ச சராசரி: கணேஷ்.என்.டி (199.00)
18 ஆட்டங்களுக்குப் பிறகு அதிகபட்ச சராசரி: யூசுப் ஷபீர் (187.06)

இப்போட்டியின் நிறைவு விழாவில் ’அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’, ‘தீராக் காதல்’ போன்ற படங்களை இயக்கியிருக்கும் ரோகின் வெங்கடேஷன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

செந்தில் குமார்.என்
போட்டி இயக்குநர்
அலைபேசி : 9840318181

நிர்வாக அலுவலகம்: ரஜ்னி’ஸ் கோதண்டா கிரஹா அப்பார்ட்மெண்ட்ஸ்
G-1, பழைய எண்: 55, புதிய எண்: 83, 10வது அவென்யூ, அசோக் நகர்,
சென்னை – 600 083.
தொலைபேசி :+91-9840318181
மின்னஞ்சல்: [email protected]

Ten pin bowling competition Theera Kadhal director participated

RRR பட நடிகருடன் இணையும் விஜய்சேதுபதி.; ஹிட் இயக்குநருடன் மீண்டும் கூட்டணி

RRR பட நடிகருடன் இணையும் விஜய்சேதுபதி.; ஹிட் இயக்குநருடன் மீண்டும் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தனுஷ்.. தமிழ் சினிமா தாண்டி தெலுங்கு ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.

இதே வழியை பின்பற்றி நடிகர் விஜய் சேதுபதியும் தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி ஆகிய நேரடி படங்களில் நடித்து வருகிறார்.

‘காந்தி டாக்ஸ்’ மற்றும் ‘ஜவான்’ ஆகிய ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. மேலும் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான சைரா நரசிம்ம ரெட்டி & உப்பெனா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஆர் ஆர் ஆர் பட நடிகர் ராம்சரனின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் விஜய் சேதுபதி.

இந்த படத்தை ‘உப்பெனா’ இயக்குநர் புஜ்ஜி பாபு இயக்க இதில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கிறார்.

விளையாட்டை மையப்படுத்தி உருவாகவுள்ள இது ராம்சரணின் 16 வது படமாகும்.

Ramcharan and Vijay Sethupathi movie updates

More Articles
Follows