கிரீன் சிக்னல் கிடைச்சா ‘மாநாடு’ ஆரம்பம்..; சிம்பு பட புரொடியூசர் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, எஸ்ஏசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இப்பட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் கொரானோ ஊரடங்கால் (முன்பே) படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இன்னும் சினிமா சூட்டிங் நடத்த அரசு அனுமதிக்கவில்லை.

இருந்த போதிலும் சிம்பு ரசிகர்கள் மாநாடு பட ‘அப்டேட்’ தருமாறு தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி…

“எல்லோரும் ‘மாநாடு’ பட அப்டேட் பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கத்தின் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

அனுமதி கிடைத்ததும் உடனடியாக சூட்டிங்கை ஆரம்பிப்போம்,” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியளவில் புதுச்சேரிக்கு தலை குனிவு.; ஆளுநர் அனுமதியில்லாமல் பட்ஜெட் தாக்கல்..; அன்பழகன் குற்றச்சாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

துணைநிலை ஆளுனர் கிரண்பேடி வராத நிலையில், சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் அவை நடவடிக்கைகள் தொடங்கியது.

நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் பேசியதாவது…

புதுச்சேரியில் ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அரசின் தவறான செயல்பாட்டினால் துணைநிலை ஆளுநர் தனது உரையை நிகழ்ந்த சட்டமன்றத்திற்கு வரவில்லை.

இதனால், இந்தியாவிற்கு எந்த மாநிலத்திற்கும் ஏற்படாத தலைகுனிவை புதுச்சேரிக்கு ஆளும் காங்கிரஸ் அரசு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஆளுநர் அனுமதியில்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டு, திட்டங்கள் நிறைவேற்ற ஆளுநர் தடையாக உள்ளார் என கூறி வருகிறார் முதல்வர் நாராயணசாமி.

வரும் தேர்தலுக்கான ஒரு நாடகத்தை ஆளும் அரசு நடத்தி வருகிறது.

என அன்பழகன் குற்றம் சாட்டி பேசினார்.

ரஜினியை முந்தி இந்தியாவில் விஜய் முதலிடம்.? தளபதி ரசிகர்கள் காமெடி.. BARC நிறுவனம் வெளியிட்ட உண்மை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா வசூல்… யூடியூப் சாதனை போல டிவிக்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகம் பேரால் பார்க்கப்படும் நிகழ்ச்சிக்கு TRP ரேட்டிங் கணக்கிடப்படுகிறது.

எந்த சேனலில் எந்த நிகழ்ச்சியை அதிகம் பேர் பார்க்கின்றனர் என்பதை கணக்கிட்டு ஒவ்வொரு வாரமும் முடிவுகளை அறிவித்து வருகிறது பார்க் (BARC) நிறுவனம்.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் விஜய் படம் என்றும் 117.9 மில்லியன் பார்வைகளை பெற்று விஜய் பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியானது.

அதில், இரண்டாவது இடத்தில் ராகவா லாரன்ஸ் 76.2 மில்லியன், ரஜினிகாந்த் 65.8 மில்லியன், அக்‌ஷய்குமார் 58.8 மில்லியன், பிரபாஸ் 56.9 மில்லியன் என புள்ளி விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

தனக்கு பிடித்த நடிகரை முதலிடத்தில் அவரது ரசிகர்கள் வைப்பார்கள்.. எனவே இதை விஜய் ரசிகர்கள் செய்திருப்பார்கள் என கூறப்படுகிறது.

ஆனால் அந்த புள்ளி விவரம் போலியானது என்று மறுப்பு தெரிவித்துள்ளது பார்க் நிறுவனம்.

இந்த தவறான தகவலை விளம்பரப்படுத்த தங்கள் நிறுவனத்தின் அடையாளம் (LOGO) தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

Kindly note, we would like to intercept this, as this data isn’t published or shared by BARC India. Only consider data published by BARC India’s official accounts and website as authentic.

100 யூனிட் இலவச மின்சாரம்; கருணாநிதி பெயரில் காலை டிபன்.; ப்ஃரீ லேப்டாப் புதுச்சேரி பட்ஜெட் முழு விவரம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. துணைநிலை ஆளுனர் கிரண்பேடி வராத நிலையில், சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் அவை நடவடிக்கைகள் தொடங்கியது.

நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் விவரங்கள் இதோ…

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம், இலவச குடிநீர் வழங்கப்படும்.

புதுச்சேரியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்… காலை உணவாக இட்லி, பொங்கல், கிச்சடி ஆகியவை வரும் நவம்பர் 15 முதல் வழங்கப்படும்… கருணாநிதி பெயரில் இத்திட்டம் தொடங்கப்படும்.

புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிக் கட்டணம் ரத்து.

அனைத்து கல்விக் கட்டணத்தையும் ரத்து செய்வதுடன் கல்லூரியில் சேர இலவச விண்ணப்பம் வழங்கப்படும்.

மேலும் அரசுப் பள்ளியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இணையதளம் மூலம் கல்வி கற்க இலவச லேப்டாப் வழங்கப்படும்.

‘கறுப்பர் கூட்டம்’ சேனலை தடை செய்ய யூடியுப் நிர்வாகத்திற்கு போலீஸ் பரிந்துரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் ஊரடங்கு ஒரு பக்கம் மக்களை பயமுறுத்தி வந்தாலும் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் விவகாரம் தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது.

அந்த சேனலில் இந்துக் கடவுள்களை அவமதித்து வீடியோக்கள் வெளியானது.

முக்கியமாக கந்தர் சஷ்டி கவசம் வீடியோ சர்ச்சையானது.

இது தொடர்பாக இந்து அமைப்பினரும் பாஜகவும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

இப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் என்ற இரண்டு நிர்வாகிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது.

மேலும் கறுப்பர் கூட்டம், யூடியூப் சேனலை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்ய யூடியூப் நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி இருக்கிறார்களாம்.

இளவயசு ஆசைய 40 வயசுல நிறைவேத்திகல…; வனிதாவை கடுப்பேற்றிய கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்ற உதவி இயக்குனரை 3வது திருமணம் செய்துக் கொண்டார் நடிகை வனிதா.

அந்த நிகழ்வில் தன் முதல் & 2வது கணவரின் குழந்தைகள் முன்னிலையில் தன் கணவரை முத்தமிட்டார் வனிதா.

அதை தொடர்ந்து தன் திருமணத்தை விமர்சித்து வருவோருக்கு அதிரடியாக பதிலளித்து வருகிறார் வனிதா விஜயகுமார் .

நடிகை கஸ்தூரியின் பல்வேறு ட்வீட்களுக்கும் பதிலளித்திருக்கிறார்.

அதில் ஒரு ட்வீட்டில்… கஸ்தூரி, எலிசபெத் ஹெலனுக்கு வாழ்க்கை அளித்திருக்கிறார். உங்களுக்கு வாழ்க்கை. அதனால் நீங்கள் அவருக்கு நிதி உதவியும் செய்யலாம். அவருக்கு நீங்களும், தமிழ்நாடும் இருக்கிறது” என வனிதா குறிப்பிட்டார்.

வனிதாவின் ட்வீட்டுக்கு…, நான் யாருடைய கணவரையும் திருடவில்லை. 40 வயதில் இளவயது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவில்லை.

நான் எலிசபெத் ஹெலனுக்கு சட்டப்படி ஆதரவு அளிப்பேன் என கூறியுள்ளார்.

அத்துடன் நடிகை லட்சுமி ராமகிருஷணன் தெரிவிக்கும் கருத்துக்கும் ஆதரவு தெரிவிப்பதாகவும் கஸ்தூரி பதிவிட்டார்.

எனவே இருவரும் மாறி மாறி ட்விட்டரில் அதிரடியாக கருத்துடன் மோதினர்.

ஒரு கட்டத்தில் ட்விட்டரிலும் & வாழ்க்கையிலும் தான் கஸ்தூரியை பிளாக் செய்து விட்டதாக தெரிவித்திருக்கிறார் வனிதா.

இதற்கு பயந்துட்டியா குமாரு என்று வனிதாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் கஸ்தூரி.

More Articles
Follows