தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அடுத்த மாதம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படம் ரிலீசாகவுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பில் இந்த படம் உள்ளதால் மற்ற படங்கள் / நடிகர்கள் ரஜினியுடன் மோத மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிம்பு நடித்த ‘மாநாடு’ படம் அதே நாளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சில நாட்களில் அருண் விஜய் நடித்த ‘வா டீல்’ மற்றும் ஆர்யா விஷால் இணைந்து நடித்து ‘எனிமி’ ஆகிய திரைப்படங்களும் நவம்பர் 4ல் ரிலீசாகும் என அறிவித்தனர்.
நவம்பர் 2ஆம் தேதி சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இன்று சற்றுமுன் சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளி திருநாளில் ரிலீசாகாது என அப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். அவரின் அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது…
அந்த அறிக்கையில்…
திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்…
நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறான் “மாநாடு”.
முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்து விட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது.
யாரோடும் போட்டி என்பதல்ல… ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைப் பார்ப்பது வழக்கம்.
அதைக் கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம்.
போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பது வியாபார புத்திசாலித்தனமுமல்ல.
நமது மாநாடு படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன் மீது மிகப் பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கி விடலாம்தான். ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்துக் கொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது.
அதேபோல் விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காய் பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் இலாபம் காண வேண்டும். நட்டமடையக் கூடாது.
சில காரணங்களுக்காக ஏன் என் படமும் அதன் வெற்றியும் பலியாக வேண்டும்??
ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாக உள்ளது.
நவம்பர் 25ந் தேதி படம் வெளியாகும். மாநாடு தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது.
வெளியாகும் படங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். பொறுமையாக எங்கள் முடிவை ஏற்கப்போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.
– சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்
Maanaadu – Release postponed to November 25th
