நம் போராட்டத்தை பயங்கரவாதம் எனத் திரிக்க தினத்தந்தி துணை போனதே..; சிம்பு பட தயாரிப்பாளர் வேதனை

suresh kamachiதமிழர்களுக்கு எதிரான சர்ச்சைக்களை உருவாக்கியுள்ள சமந்தாவின் #TheFamilyMan2 இணையத் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான சமந்தாவின் ஒரு பேட்டி தினந்தந்தி நாளிதழில் வெளியானது.

இந்த செய்தியை கண்டிக்கும் வகையில் சிம்புவின் ‘மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில்…

“நமது வேதனையில் யார் யாரோ தீ ஊற்றுகிறார்கள். எவனோ ஒருத்தன் படம் எடுத்து பயங்கரவாதி என்கிறான். தெலுங்கு தேச மருமகளாகப் போன சமந்தா ஈழப் பயங்கரவாதி என்கிறார். இவர்களெல்லாம் போதாதென்று நாம் இத்தனை ஆண்டுகள் வாங்கி நம் வீடுகளில் எழுந்ததும் கண் விழிக்கும் 1/2 https://t.co/LpthW2BxHk

பத்திரிகை எப்படி அந்த வார்த்தைகளை பிரசுரிக்கலாம்? யாரோ நம் போராட்டத்தை பயங்கரவாதம் எனத் திரிக்க முயல தினத்தந்தி அதற்குத் துணைபோயிருக்கிறது.

நாம் தமிழர் கட்சியை முதன் முதலில் உருவாக்கிய ஆதித்தனார் அய்யா உயிரோடிருந்தால் இந்த செய்தி வெளியாகியிருக்குமா? 2/3

தினத்தந்தியே இப்படி செய்தால் வேறு யாரை குறைபட்டுக் கொள்ள??3/4 @SeemanOfficial @offBharathiraja @directorcheran @packiarajan

இவ்வாறு பதிவிட்டுள்ளார் சுரேஷ் காமாட்சி.

Maanaadu producer slams Dinathanthi and The family man 2 team

Overall Rating : Not available

Latest Post