தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’.
இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
‘லியோ’ படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடல் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.
இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘லியோ’ படத்தில் நடிகர் ராமகிருஷ்ணன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நடிகர் ராமகிருஷ்ணன் சமீபத்தில் வெளியான உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘Maamannan’ movie actor join in Vijay’s ‘Leo’