மாசோ பாடலில் விவேக் செய்த மெர்சல் விஷயங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் உள்ள ‘மாசோ’ பாடலை பாடலாசிரியல் விவேக் எழுதியுள்ளார்.

இப்பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இப்பாடலில் சில புதுமையான வார்த்தைகள் பயன்படுத்தியுள்ளதாக பாடலாசிரியர் தெரிவித்துள்ளார்.

அதாவது தமிழை ஆங்கிலம் போல பேசினால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து இந்த பாடலில் வரும் வார்த்தைகளை எழுதியுள்ளாதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த வார்த்தைகளையும் அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Lyricist Vivek introduced new words in Mersal Macho song

Vivek Lyricist‏ @Lyricist_Vivek
#Macho idea behind d lyrics. All in one place for ur convenience. Have tried something new. Hope u all like it. Cheers

தமிழ்நாட்டில் தல; கேரளாவில் ..? என்னதான் ஆச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அஜித் நடிப்பில் விவேகம் படம் வெளியானது.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் தொடர்ந்து விடுமுறை நாட்கள் வந்ததால் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்தது.

கேரளாவில் முந்தைய அஜித் படங்கள் ரூ. 6 கோடி வரை வசூலித்து இருந்ததாம்.

எனவே முந்தைய வசூலை விவேகம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரூ. 4.8 கோடி வரைதான் வசூலித்துள்ளதாம்.

மேலும் விநியோகஸ்தர்கள் பங்குபோக மற்றவர்களுக்கு லாபம் இல்லை என கூறப்படுகிறது.

கேரளாவில் ரஜினி, விஜய் படங்களை போன்று அஜித் படங்கள் லாபத்தை பெற்றுத்தரவில்லை எனவும் தகவல்கள் வந்துள்ளன.

Vivegam failed to beat Ajiths previous records in Kerala

மிகமிக அவசரம் படத்தில் உள்ள ஒரே பாடலை எழுதிய சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண் போலீசார் குறித்து இதுவரை பேசப்படாத ஒரு விஷயத்தை மையமாக வைத்து மிக மிக அவசரம் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி.

தயாரிப்பாளராக இருந்து அமைதிப்படை 2, கங்காரு ஆகிய இரண்டு படங்களை தயாரித்தவர், இப்படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார்.

“இந்தக் கதையை எழுதியவர் இயக்குநர் ஜெகன். கதையைப் படித்ததுமே, இதுதான் இயக்குநராக எனக்கு முதல் படமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து களமிறங்கினேன்.

திட்டமிட்டபடி படத்தை எடுத்து முடித்துவிட்டோம். திருப்தியாக வந்திருக்கிறது படம்.

இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதே, பாடலாசிரியராக மாறிவிட்டார் இயக்குநர் சேரன். அவராகவே முன்வந்து ஒரு பாடலை எழுதிவிட்டார்.

‘பெண்ணிற்கோர் தீமை செய்தோம்…’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை இஷான் தேவ் இசையமைத்துப் பாடியுள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள ஒரே பாடல் இதுதான். மிகச் சிறப்பாக அமைந்துள்ளது…”, என்கிறார் சுரேஷ் காமாட்சி.

மிக மிக அவசரம் படத்தில் நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ஹரீஷ் நடித்துள்ளார். வழக்கு எண் முத்துராமன், லிங்கா, ஈ ராமதாஸ், வீகே சுந்தர், சக்தி சரவணன், அரவிந்த், குணா, வெற்றிக்குமரன், சாமுண்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கதை வசனத்தை இயக்குநர் ஜெகன்நாத் எழுத, பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்ஸன் எடிட்டிங் செய்துள்ளார். மக்கள் தொடர்பு எஸ் ஷங்கர்.

சேரன் எழுதிய இந்தப் பாடலை சமீபத்தில்தான் யுட்யூபில் வெளியிட்டு வாழ்த்தினார் இயக்குநர் ராம். அந்தப் பாடலுக்கு சமூக வலைத் தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Director Cheran became lyricist for Miga Miga Avasaram movie

பாடல் வீடியோ:

அர்ஜுன் அறிமுகப்படுத்திய டியூன்ஸ்மேஷ்; உங்களுக்கும் வாய்ப்பிருக்கு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் விஷால் ஜோடியாக “பட்டத்து யானை” படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அதன்பின்னர் சரியான வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை என கூறப்படுகிறது.

எனவே, தன் மகளுக்காக ‘சொல்லி விடவா’ என்ற ஒரு படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் அர்ஜுன்.

இப்படத்தில் கன்னட நடிகர் சந்தன்குமார் ஹீரோவாக நடிக்க பிரகாஷ்ராஜ், சுஹாசினி, கே.விஸ்வநாத், மொட்டை ராஜேந்திரன், சதீஷ், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜெஸ்சி கிப்ட் இசையமைத்துள்ள இப்படத்தை தீபாவளி அன்று வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்திற்காக டப்ஸ்மேஷ் போன்ற டியூன்ஸ்மேஷ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதில் வெறும் டியூன் மட்டும் வருகிறது. அதற்கு பொருந்திற போல வரிகளை நீங்கள் எழுத வேண்டும் எனவும் அதற்கான சூழ்நிலையும் அவர் தெரிவித்துள்ளார்.

Arjun introduced TuneSmash for his Sollividava  You too can Participate

இதோ அந்த டியூன் வீடியோ உங்களுக்காக….

ஆரவ் காதல் முறிவு; ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை ஓவியா.

இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றபோது நடிகர் ஆரவ் அவர்களை காதலிப்பதாக கூறினார்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் தான் ஆரவ்வை காதலிப்பதாகவும் அவருக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தன் ரசிகர்களுக்கு ஷாக் அளிக்கும் விதமாக புதிய ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் ரிலேஷன்ஷிப்பில், சிங்கிள் எனவும் இதுவே திருப்தியளிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

இதனை ஆயிரக்கணக்கானோர் லைக்கும் ரீட்வீட்டும் செய்துள்ளனர்.

இது நிச்சயம் ஓவியா ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமாக இருக்கும் என நம்பலாம்.

Oviya breaks her relationship with Bigg Boss Aarav

ஒரு காதல் ஜோடிக்காக ஊரையே காலி செய்த மக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்.ஆர்.ஆர். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘நாடோடி கனவு’.

இதில் நாயகனாக மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ளார். நாயகியாக சுப்ரஜா நடித்துள்ளார்.

மேலும் கிரேன் மனோகர், விஜய் கணேஷ் மற்றும் கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

சபேஷ் முரளி இசையமைத்துள்ள இப்படத்தை வீர செல்வா இயக்கியுள்ளார். ராகுல் இணை தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிஜு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பொதுவாக ஒரு கிராமத்தில் தவறு செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பார்கள். அதுபோல் காதலர்களையும் ஊர் மக்கள் ஒதுக்கி வைப்பார்கள்.

ஆனால், இந்த படத்தில் காதலர்களை ஊரை விட்டு ஒதுக்கிவைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால், ஊர் மக்கள் அனைவரும் ஊரை காலி செய்கிறார்கள்.

எதற்காக இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டது என்பதை வித்தியாசமான திரைக்கதை மூலம் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் படக்குழுவினர்.

இப்படத்தில் இடம்பெறும் ‘கருத்த மச்சான்’ என்ற பாடல் படப்பிடிப்பின் போது, கதாநாயகி சுப்ரஜாவிற்கு விஷப்பூச்சி ஒன்று கடித்து உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது.

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து திரும்பிய உடனே ஓய்வெடுக்காமல், மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் நாயகி சுப்ரஜா.

இப்படத்தின் படப்பிடிப்பு பரமக்குடி, சிவகங்கை மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது. செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு – ஆர்.ஆர்.ஆர். புரொடக்‌ஷன்ஸ்
தயாரிப்பாளர் – கே.ராஜேந்திரன்
இணை தயாரிப்பு – ஆர்.ராகுல்
தயாரிப்பு மேற்பார்வை – ஏ.வி.பழனிச்சாமி
இயக்கும் – வீர செல்வா
இசை – சபேஷ் முரளி
ஒளிப்பதிவு – ஜிஜு
பாடல்கள் – சீர்காழி சிற்பி, அண்ணாமலை
எடிட்டிங் – கிரேசன்
கலை – ராம்ஜி
நடனம் – சிவசங்கர், அஜய், சதீஸ், செல்வி
மக்கள் தொடர்பு – சரவணன். N

Master Mahendran Supraja starring Nadodi Kanavu

More Articles
Follows