‘ரத்தம் என் ரத்தம்…’ சிம்புவுக்காக வைரமுத்து எழுதிய பாடல்

‘ரத்தம் என் ரத்தம்…’ சிம்புவுக்காக வைரமுத்து எழுதிய பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vairamuthu simbu strசிம்பு நான்கு வேடங்களில் நடித்து, இரண்டு பாகமாக உருவாகி வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

இதன் முதல்பாகம் ஜீன் 23ஆம் தேதியும் இரண்டாம் பாகம் கிறிஸ்துமஸ் தினத்திலும் வெளியாகவுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்புவுடன் தமன்னா, ஸ்ரேயா, சனாகான், நீது சந்திரா ஆகிய நான்கு நாயகிகள் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் சிம்பு அறிமுகமாகும் ஒரு பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளதாக சிம்பு தெரிவித்துள்ளார்.

STR‏Verified account @iam_str
Intro song penned by our legend #Vairamuthu blessed n thankful  Dedicating it to my true bloods #RaththamEnRaththam #NeengaillamaNaanilla

Lyricist Vairamuthu wrote Intro song for Simbu in AAA movie

‘அரசியல் சிஸ்டம் சரியில்லை; மாற்றம் வேண்டும்..’ ரஜினி பரபரப்பு பேச்சு

‘அரசியல் சிஸ்டம் சரியில்லை; மாற்றம் வேண்டும்..’ ரஜினி பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Star Rajinikanthதன் ரசிகர்களை கடந்த 4 நாட்களாக சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இன்று 5வது நாள் இறுதிநாள் என்பதால், பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது…
ரசிகர்களுக்கு நான் நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வளவு ஒழுக்கமா, இவ்வளவு கட்டுப்பாடா இருந்தது. பழகினதுக்கு நன்றி.

ஒழுக்கம்தான் வாழ்க்கையில முக்கியம். அது இல்லைன்னா முன்னேற முடியாது. அதை தெளிவா கடைப்பிடிச்சீங்க. தொடர்ந்து அதை கடைபிடிங்க.

இங்கே பக்கத்தில் இருந்தவர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். காவல்துறையினருக்கும் நன்றி.

எனக்கு தமிழக மக்கள்தான் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். பணம் பேர் புகழ் எல்லாம் தந்துள்ளனர்.

என்னை வாழவைத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என நான் நினைக்க வேண்டாமா?

அதற்கு நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என கேட்கிறார்கள்.

இங்கு ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் அரசியல் சிஸ்டம் சரியில்லை. ஜனநாயகம் கெட்டுப் போய்விட்டது.

அரசியல் குறித்த மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும்.

எனவே சிஸ்டத்தை மாற்ற வேண்டும். மக்களின் சிந்தனையை மாற்ற வேண்டும்.

எல்லாரும் இணைந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்“ என்று ரஜினிகாந்த் பேசினார்.

இதுபோன்று தன் அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக தெரிவித்தார் ரஜினிகாந்த்.

‘ரசிகர்களை சந்தித்தது மகிழ்ச்சி; என்றும் மறக்க முடியாது..’ ரஜினி

‘ரசிகர்களை சந்தித்தது மகிழ்ச்சி; என்றும் மறக்க முடியாது..’ ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Rajinikanthகடந்த நான்கு நாட்களாக 15 மாவட்டங்களில் உள்ள தன் ரசிகர் மன்ற உறுப்பினர்களை சென்னைக்கு வரவழைத்து சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த்.

அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார் ரஜினிகாந்த் என்பதை பார்த்தோம்.

இதனிடையே தன் அரசியல் பிரவேசம் பற்றியும், ரசிகர்கள் தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று சந்திப்பு நிறைவுநாளாக இருப்பதால், தன் ட்விட்டரில் இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில்…

“ரசிகர்களை சந்தித்த பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்றும் மறக்க முடியாது.” என பதிவிட்டுள்ளார்.

Rajinikanth‏Verified account @superstarrajini
Extremely happy after meeting my fans #Memorable #Unforgettable

மீண்டும் ரஜினி-மம்மூட்டியை இயக்கும் மணிரத்னம்

மீண்டும் ரஜினி-மம்மூட்டியை இயக்கும் மணிரத்னம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Mammoottyரஜினி-மம்மூட்டி இணைந்து நடிதித தளபதி படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

கடந்த 1991ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இப்படத்திற்கு பிறகு மணிரத்னம் இளையராஜா இதுவரை இணையவில்லை.

இந்நிலையில் 26 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினி, மம்மூட்டியை இணைத்து ஒரு படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும், அதற்கான கதையை எழுதும் பணியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியின் இன்றைய இமேஜ்ஜை வைத்து, திரைக்கதை எழுதி வருவதாக சொல்லப்படுகிறது.

ஷங்கர் மற்றும் ரஞ்சித் படங்கள் முடித்துவிட்டு ரஜினி இதில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தன் அரசியல் பிரவேசம் பற்றி ரஜினி பரபரப்பாக பேசி வருவதும் இங்கே கவனித்தக்கது.

‘ஆக்டர் வேண்டாம்; டாக்டர் வேண்டும்..’ அன்புமணி ராமதாஸ்

‘ஆக்டர் வேண்டாம்; டாக்டர் வேண்டும்..’ அன்புமணி ராமதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilnadu need Doctor not a Actor says Anbumani Ramdoss regarding Rajini entry in Politicsகடந்த 5 நாட்களாக தன் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

அப்போது ரசிகர்களிடையே பேசும்போது…

தமிழகத்தில் நிறைய கட்சித் தலைவர்கள் இருந்தாலும், அரசியல் சிஸ்டம் சரியில்லை.

மக்கள் அரசியலை தவறாக பார்க்கிறார்கள். எல்லாரும் இணைந்து மாற்றம் வர நினைக்க வேண்டும் என பேசினார்.

இதுகுறித்து பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது….

ரஜினிகாந்த் என் நண்பர்தான். ஒரு நல்ல மனிதர்.

ஆனால் தமிழகத்தை சினிமாகாரர்கள் ஆட்சி செய்தது போதும்.

கடந்த 50 ஆண்டுகளாக எம்ஜிஆர் என்ற நடிகர், ஜெயலலிதா என்ற நடிகை, மற்றும் சினிமாவை சார்ந்தவர்களே தமிழகத்தை ஆட்சி செய்துள்ளனர்.

தமிழகம் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி ஐசியூவில் உள்ளது.

அதை காப்பாற்ற ஒரு ஆக்டர் வேண்டாம். ஒரு டாக்டர்தான் வேண்டும். என்று தெரிவித்தார்.

Tamilnadu need Doctor not a Actor says Anbumani Ramadoss regarding Rajini entry in Politics

‘ரஜினியின் தலைமையை ஏற்பார்கள்; அரசியலில் திருப்புமுனை உருவாகும்’ – திருமாவளவன்

‘ரஜினியின் தலைமையை ஏற்பார்கள்; அரசியலில் திருப்புமுனை உருவாகும்’ – திருமாவளவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Thiruvamavalavanதன் அரசியல் பிரவேசத்தை பற்றி ரஜினிகாந்த் இன்று உறுதிப்படுத்தும் விதமாக பேசியிருந்தார்.

தன் ரசிகர்களை போர்களத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

இதுகுறித்து சற்றுமுன் விடுத்தை சிறுத்தை கட்சிகள் தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது…

தன்னுடைய அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தி ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். அவரை அரசியலுக்கு வரவேற்கிறேன்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை அதிமுக திமுக கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்தன.

ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் இணையாமல் தனித்து போட்டியிட வேண்டும்.

அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் திருப்புமுனையாக அமையும்.

அதிமுக பலவீனப்படுத்தப்பட்டத்தாக ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.

சாதி, மதம் என அனைத்தையும் தாண்டி எம்ஜிஆர் கருணாநிதி ஜெயலலிதா செயல்பட்டனர்.

திமுக கட்டமைப்பு ரீதியில் பலமாக இருந்தாலும், அந்த கட்சியை வீழ்த்த மதவாக சக்திகள் களம் இறங்கியுள்ளன.

அனைத்து தரப்பு மக்கள் ஏற்றுக் கொள்ளும் தலைவராக ரஜினி நிச்சயம் இருப்பார்.

அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று எந்த அர்த்தத்தில் ரஜினி சொன்னார் எனத் தெரியவில்லை.

ஆனால், இந்தியா முழுக்கவே இந்த சிஸ்டம் சரியில்லை என்பது உண்மைதான்.” என்று பேசினார்.

Rajini entry will be a turning poing in Tamilnadu politics says Thirumavalavan

More Articles
Follows