தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை – நெடுநல்வாடை படம் பற்றி வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“நெடுநல்வாடை” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழா வழக்கமாக நடைபெறும் சினிமா விழாக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் என்று யாரும் இல்லாமல் புதுவிதமாக நடைபெற்றது எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தியது.

இந்தப்படம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக, 50 நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 50 பேர்களும் சேர்ந்து படத்தில் பணியாற்றியவர்கள், பொதுமக்கள் முன்னிலையில் அவர்களே பாடல்களை வெளியிட்டது புதுமையாக இருந்தது.

மேலும், பாடல்களைக் கேட்ட பொதுமக்களையே மேடையேற்றி அவர்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வைத்தது ஆச்சர்யமான நிகழ்வாக இருந்தது.

வழக்கமாக பிரபலங்கள் வெளியிட்டு பாடல்கள் மக்களைச் சென்றடையும். ஆனால், இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மூலமாக, பிரபலங்களைச் சென்றடைந்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.

சினிமா வட்டாரத்தில் இந்தப் படத்தின் பாடல்களும், அதை வெளியிட்ட விதமும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

படத்தையும், பாடல்களையும் பற்றி
கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது:

தலைப்புப் பஞ்சம் பிடித்து ஆட்டுகிறது தமிழ் சினிமாவை. தமிழில் பேர் வைத்தால்தான் வரிச்சலுகை கிட்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டிய அளவுக்கு தமிழ் சினிமாவில் தலைப்புகள் தமிழைவிட்டு தள்ளிப்போய்க் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஈராயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு தமிழ் இலக்கியத்தின் தலைப்பை, தனக்கு ஆபரணமாகச் சூடிக்கொண்டு வெளிவரப் போகிற படம்தான் “நெடுநல்வாடை”.

இந்தப் படத்திற்குப் பாட்டெழுதியது எனக்கு ஒரு சுகமான அனுபவம். நெல்லை மாவட்டத்து வட்டார வழக்கில் எழுதுங்கள் என்றும், ஆங்கிலச் சொல்லே கலவாமல் முழுக்க முழுக்க தமிழ்ப்பாட்டு எழுதுங்கள் என்றும் இயக்குனர் செல்வகண்ணன் கேட்டபோது நான் மகிழ்ந்து போனேன்.

ஒரு படத்தில் பாட்டு என்பது, உடலில் தொங்குகிற ஆடையாக இல்லாமல் உடம்பில் ஒட்டியிருக்கும் தோல் மாதிரி இருக்கவேண்டும் என்று நம்புகிறவன் நான்.

படத்திற்கும் பாட்டுக்கும் இடைவெளியே இருக்கக் கூடாது. படத்தின் அங்கம்தான் பாட்டு.

இந்த இலக்கணத்தை “நெடுநல்வாடை”யில் நீங்கள் காண்பீர்கள்.
கிராமத்து வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்ட இந்தக் கதையில், இன்னும் அறுந்து போகாத தமிழ்க் கலாச்சாரத்தின் பழைய வேர்களைத் துப்பறிந்திருக்கிறார் இயக்குனர் செல்வகண்ணன்.

நன் உறவுகள் புனிதமானவை. நம் உறவுகள் ஆழமானவை. அந்த உறவின் பெருமையை, மகள் வழிப்பேரனை ஒரு தாத்தா எப்படியெல்லாம் நேசிக்கிறார் என்ற அடிப்படைப் பண்பாட்டை “நெடுநல்வாடை”யில் செல்வகண்ணன் விவரித்துக் கொண்டே போகிறார்.

இந்தப் படம் தமிழர்களின் உறவின் மிச்சத்தையும், எச்சத்தையும், உச்சத்தையும் சொல்லும் படமாகத் திகழும் என்று நான் நம்புகிறேன்.

ஒரு கிழவன் செய்கிற தியாகம்தான் “நெடுநல்வாடை”யின் மொத்தக்கரு. தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை.

தியாகத்தை உள்ளடக்கமாகக் கொண்ட “நெடுநல்வாடை”யும் வெல்லும். செல்வகண்ணன் பேர் சொல்லும்.

பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில், 50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கிறார்கள்.

மையப்பாத்திரத்தில், 70 வயது விவசாயியாக ‘பூ ராமு’ நடிக்கிறார். அவருடன் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி, ஐந்துகோவிலான், செந்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

பாடல்கள் – வைரமுத்து
வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, மு.காசிவிஸ்வநாதன் எடிட்டிங்கைக் கவனிக்க, ஜோஸ் பிராஃங்க்ளின் இசையமைக்கிறார்.
மக்கள் தொடர்பு – மணவை புவன்.

அனிதா அண்ணனை நெகிழவைத்த இளைய தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார்.
இதனால் நீட் தேர்வை நீக்குமாறும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் பல போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு மாணவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இதனிடையில் அனிதாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவரது குடும்பத்தாரை சந்தித்தார் விஜய் என்பதை பார்த்தோம்.

பொதுவாக இதுபோல் ஒரு பிரபலம் ஒரு இடத்திற்கு சென்றால், அந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.

ஆனால் காவல்நிலையத்திலும் அனிதா வீட்டிற்கும் தகவல் கொடுக்காமல் திடீரென விஜய் சென்றாராம்.

இந்த நெகிழ்வான சம்பவம் குறித்து அனிதாவின் அண்ணன் மணிரத்னம் கூறியதாவது…

“அனிதாவின் இறப்பு எங்களை பாதித்துவிட்டது.

ஒருநாள் காலை வழக்கம் போல் விடிந்தது. திடீரென எழுந்து பார்த்தால் விஜய் எங்கள் வீட்டிற்கு வந்தார். வாரிச்சுருட்டி எழுந்தோம்.

அதற்கு அவர் மெதுவா எழுந்திருங்க. அவசரமில்லை என்று சொன்னார். நான் அவர் உட்கார சேர் எடுக்க போனேன்.

உங்களைத்தான் பார்க்க வந்தேன். பின்பு எங்களோடு தரையில் அமர்ந்து பேசத்தொடங்கினார்.

உங்க கண்ணீர் நாளை ஆனந்தக்கண்ணீராக மாறும். அனிதாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நினைதேன்.

ஆனால் நான் வந்தால் அந்த நிகழ்வின் போக்கே மாறியிருக்கும்.

எனக்கும் வித்யா என்று ஒரு தங்கை இருந்தாள். அவளின் மரணம் எங்களை வெகுவாகப் பாதித்தது.

இப்போது உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என தெரிகிறது.

அனிதாவும் எனக்கு தங்கைதான்

என்ன உதவி வேண்டுமானாலும் எனக்கு போன் பண்ணுங்க. நான் செய்கிறேன்.

அதன்பின்னர் நான் பணம் கொடுத்தேன் என்பதை யாரிடமும் சொல்லவேண்டாம் என கேட்டுக்கொண்டார்” என்று உருக்கமாக பேசினார் மணிரத்னம்.

ரஜினியின் 2.ஓ பட ஆடியோ வெளியீட்டு தேதி உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது என்பதை பார்த்தோம்.

இது துபாய் நாட்டில் உள்ள பர்ஜ் பார்க் என்னும் இடத்தில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளதாம்.

இந்நிகழ்வின் போது இப்பட இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான் மேடையில் இதன் பாடல்களை பாட போகிறாராம்.

இதனையடுத்து நவம்பரில் டீசர் ஐதராபாத்திலும், டிசம்பரில் ட்ரைலர் சென்னையிலும் வெளியிட உள்ளனர்.

இந்த விழாக்களை லைக்கா நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக நடத்திட முடிவுசெய்திருக்கிறதாம்.

2017 தீபாவளிக்கு விஜய்-அட்லி கூட்டணியின் 2 படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி படத்தை தொடர்ந்து மெர்சல் படத்திலும் விஜய், அட்லி கூட்டணி அமைந்தது.

இந்தாண்டு 2017 தீபாவளிக்கு மெர்சல் படம் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் தெறி படத்தின் சாட்லைட் உரிமையை கைப்பற்றிய சன்டிவி தீபாவளி நாளில் தெறி படத்தை ஒளிப்பரப்பவிருக்கிறார்களாம்.

எனவே இந்தாண்டு தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமையும் என நம்பலாம்.

2017 Diwali will have double treat of Vijay fans

பெப்சி ஸ்டிரைக் வாபஸ்; விரைவில் ரஜினி-விஷால் பட சூட்டிங் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் பெப்சி நிறுவனம் மோதல் நீடித்து வருவதால் கடந்த 13 நாட்களாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தொடர்ந்து பேச்சு வார்த்தி நடத்திவந்தார்.

இதனிடையில் பெப்சியில் உள்ள டெக்னீசியன் யூனியனை நீக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை விதித்தது.

இதனை ஏற்றுக்கொண்ட பெப்சி அந்த யூனியனை நீக்க, பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே ஓரிரு நாட்களில் காலா, சண்டக்கோழி2 உள்ளிட்ட பட சூட்டிங்குகள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

FEFSI strike over Soon Kaala Sandakozhi shooting will start

தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது; சொன்னதை செய்தார் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தியேட்டரில் புதிய படம் ரிலீஸ் ஒருபக்கம் என்றால், அன்றைய தினமே தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையத்தளத்தில் புதுப்படம் ரிலீஸ் ஆகும்.

இது திரைப்பட லாபம் பெரிதும் பாதிக்கப்பட தமிழ் சினிமாவுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது.

இந்த இணையத்தளம் எங்கிருந்து இயக்கப்படுகிறது? இதன் நிர்வாகி யார்? என்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமல் சினிமா பிரபலங்கள் தவித்து வந்தனர்.

எத்தனை முறை இந்த தளத்தை முடக்கினாலும் மீண்டும், மீண்டும் புதிய பெயர்களில் தனது திருட்டுத்தனத்தை அரங்கேற்றி வந்தனர் அதன் அட்மின்கள்.

எனவே இவர்களை எச்சரிக்கும் விதமாக விரைவில் இவர்களை பிடித்தே தீருவேன் என தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால் கூறியிருந்தார்.

இந்நிலையில் விஷால் கொடுத்த ஐடியாவின் பேரில் தமிழ் ராக்கர்ஸின் அட்மின் கவுரிஷங்கர் என்பவரை சென்னை திருவல்லிக்கேணி போலீசார் இன்று கைது செய்தனர்.

இவர் திருப்பூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் கன் என்ற இணையத்தளத்துடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கவுரிஷங்கருக்கு மேல் இன்னும் சில அட்மின்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

போலீசாரின் விசாரணையில் பல கட்ட தகவல்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷாலின் இந்த அரிய முயற்சியை திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

Tamil rockers website admin arrested Vishal done what he said

More Articles
Follows