தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உருவான கனா படத்தில் ஜி.கே.பி எழுதிய “வாயாடி பெத்த புள்ள” பாடல் வெளியானது.
இப்பாடலை இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன், வைகோம் விஜயலஷ்மி பாடியுள்ளனர்.
“வாயாடி பெத்த புள்ள” பாடல் வெளியான கனம் முதல் இப்பாடலின் வரிகளும் இசையும் அனைவரையும் கவர்ந்தது. சமுக வளைத்தலங்களில் பிரபலம் ஆனது.
தான் எழுதிய பாடலை அனைவரும் கொண்டாடுவதை அறிந்த ஜி.கே.பி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். “இப்படிபட்ட பாராட்டுகள் ஒரு கலைஞனை மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை படைக்க தூண்டும், எனவே இந்த பாராட்டுகள் என்னை நான் அடுத்த கட்டத்திற்கு இட்டு செல்ல தூண்டும் தூண்டுகோள்” என்றார் பாடலாசிரியர் ஜி.கே.பி.
பாடல் – https://youtu.be/00fWlZnZAo0
