‘கைதி’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தவரை ‘விஜய் 67’ படத்தில் இயக்கும் லோகேஷ்.?

‘கைதி’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தவரை ‘விஜய் 67’ படத்தில் இயக்கும் லோகேஷ்.?

கமல்ஹாசன் தயாரித்து நடித்த படம் ‘விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் உரையாடினார்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

அப்போது ஒரு ரசிகர் உங்கள் அடுத்த படங்களில் மன்சூர் அலிகான் நடிப்பை எதிர்பார்க்கலாமா எனக் கேள்வி கேட்டார்.

இதற்கு லோகேஷ் கனகராஜ் ‘விரைவில்…’ என பதிலளித்துள்ளார்.

எனவே விரைவில் லோகேஷ் இயக்கும் படத்தில் மன்சூர் அலிகான் நடிப்பது உறுதியாகியுள்ளது.

விரைவில் விஜய்யின் ‘தளபதி 67’ படத்தை
லோகேஷ் இயக்கவுள்ளார். எனவே மன்சூர் அலிகான் அந்த படத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

லோகேஷ் இயக்கிய ‘கைதி’ படத்தில் முதலில் நாயகனாக நடிக்க இருந்தவர் மன்சூரலிகான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகே படத்தில் நாயகனாக கார்த்தி நடித்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

ரஜினியுடன் இணைந்து நடிக்கத் தயார்.; ‘விக்ரம்’ பட வெற்றி விழாவில் கமல் ஓபன் டாக்

ரஜினியுடன் இணைந்து நடிக்கத் தயார்.; ‘விக்ரம்’ பட வெற்றி விழாவில் கமல் ஓபன் டாக்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் ஜூன் 3ல் திரையரங்குகளில் வெளியான படம் ‘விக்ரம்’.

இதில் சூர்யா, விஜய்சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்தனர்.

இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை பத்திரிகையாளர்களுடன் படக்குழுவினர் இன்று சென்னையில் பகிர்ந்து கொண்டனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்…

“விக்ரம் -2′ படத்திற்கு நாடு தழுவிய பாராட்டு கிடைத்துள்ளது.

மிக்க மகிழ்ச்சி. நன்றி என்பதை தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.

இதற்கு முன்பும் நிறைய வெற்றி கிடைத்துள்ளது. இருப்பினும் இது இந்திய படமொன்று வெற்றி கொள்வதாக தான் பார்க்கிறேன்.

அதற்காக தற்போது கிடைத்துவிட்டது போதும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

ரஜினியுடன் இணைந்து நடிக்கத் தயார். அது நடக்கலாம்.”

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

சிவகார்த்திகேயனின் செல்லப் பெயரையே SK20 படத்திற்கு வைத்த படக்குழு

சிவகார்த்திகேயனின் செல்லப் பெயரையே SK20 படத்திற்கு வைத்த படக்குழு

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் ரிலீசான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் மூலம் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸ் கிளப்பில் இணைந்தன.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக எஸ்.கே 20 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் SK20 என்ற படம் உருவாகுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் முதல் படமும் இதுதான்.

உக்ரைன் நடிகை மரியா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆகஸ்ட் 30ல் விநாயகர் சதூர்த்திக்கு இப்படம் வெளியாகும் என அறிவித்தனர்.

எனவே படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடத்தி போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் SK20 ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

இந்தப் படத்திற்கு பிரின்ஸ் PRINCE என பெயரிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயனை கோலிவுட்டின் பிரின்ஸ் என ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி தாலி எடுத்துக் கொடுக்க நயன்-விக்கி திருமணம் நடந்தது.; பங்கேற்ற பிரபலங்கள் லிஸ்ட் இதோ

ரஜினி தாலி எடுத்துக் கொடுக்க நயன்-விக்கி திருமணம் நடந்தது.; பங்கேற்ற பிரபலங்கள் லிஸ்ட் இதோ

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.

இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்களே கேட்கத் தொடங்கி விட்டனர்.

ஒவ்வொரு படத்திற்கும் அப்டேட் கேட்பது போல இவர்கள் திருமணத்திற்கும் அப்டேட் கேட்க தொடங்கினர் ரசிகர்கள்.

ஆனால் காதலித்த இருவரும் அதற்கான பதிலை அளிக்காமல் தங்களது பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

என்னதான் பல வருடங்கள் காதலித்துக் கொண்டே இருந்தாலும் திருமணம் என்று வந்துவிட்டால் அதற்கான நேரம் கைவிட வேண்டும் அல்லவா? அதற்காக தான் அவர்கள் இருவரும் பதில் அளிக்காமல் இருந்தார்களோ? என்னவோ.?

எனவேதான் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று தங்களுக்கு விரும்பிய கடவுளை வேண்டிக் கொண்டனர்.

இந்த நிலையில், திருமணம் ஜூன் 9 இன்று நடைபெற உள்ளதாக, விக்னேஷ் சிவன் அறிவித்தார்.

இந்த நிலையில், இருவரின் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று காலை நடைபெற்றது.

இவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமண விருந்தின் மெனுவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த திருமணத்தில் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுக்க நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் விக்னேஷ்சிவன்.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தில் கலந்துக் கொண்ட திரை பிரபலங்கள் லிஸ்ட் இதோ…

ரஜினிகாந்த்
ஷாருக்கான்
சூர்யா
கார்த்தி
விஜய் சேதுபதி
கிருத்திகா உதயநிதி
சரத்குமார்
ராதிகா சரத்குமார்
ஷாலினி அஜித்குமார்
அனோஷ்கா அஜித்குமார்
ஆத்விக் அஜித்குமார்
ஷாமிலி
விக்ரம் பிரபு
குஷ்பு
பொன்வண்ணன்
சரண்யா பொன்வண்ணன்
திலிப் ( மலையாளம் நடிகர்)
கவின்
திவ்ய தர்ஷினி

Dr.ஐசரி k கணேஷ்
போனி கபூர்l
Lyca தமிழ் குமரன்
கல்பாத்தி s அகோரம்
ஞானவேல்ராஜா
2D ராஜசேகர் பாண்டியன்
டிரைடன் ஆர்ட்ஸ் ரவி
லலித் குமார்
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்
சாந்தி பிலிம்ஸ் அருண்

ஏஆர்.ரகுமான்
ஏஆர்ஆர்.அமீன்
அனிருத்
ரவி ராகவேந்திரா
லக்ஷ்மி ராகவேந்திரா

கேஎஸ் ரவிக்குமார்
மணிரத்தினம்
கௌதம் வாசுதேவ் மேனன்
விஷ்ணுவர்தன்
அனு வர்தன்
அட்லி
ஹரி
மோகன் ராஜா
எடிட்டர் மோகன்
பிரீதா ஹரி

Dop.ஓம்பிரகாஷ்
Dop.வெற்றி
Dop.வேல்ராஜ்
Dop.தினேஷ் கிருஷ்ணன்

தரண் குமார்
கலா மாஸ்டர்
சதீஷ்
சோனி அசோக் பர்வாணி

பாடலாசிரியர் தாமரை.

தமிழகம் முழுக்க 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்தளித்த நயன்தாரா – விக்னேஷ்சிவன்

தமிழகம் முழுக்க 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்தளித்த நயன்தாரா – விக்னேஷ்சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

2015ல் வெளியான இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க அனிருத் இசையமைத்து இருந்தார்.

இந்த பட சூட்டிங் சமயத்தின் போதே நயன் & விக்கி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில்தான் வசித்து வந்தனர்.

இருவரும் எங்கும் சென்றாலும் இணைந்தே சென்றனர். சமூக வலைத்தளங்களில் ஜோடியாக போட்டோ போட்டு அசத்துவார்கள்.

இருவரும் அடிக்கடி அனைத்து மத வழிப்பாட்டு தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.

அண்மைக்காலமாக ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி பல படங்களை தயாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.

கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு மேலாக இவர்கள் காதலித்துக் கொண்டே இருப்பதால் இவர்களுக்கு எப்போது திருமணமாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்.

அதன்படி நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் இன்று ஜூன் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்துக் கொண்டனர்.

திருமண நிகழ்வை தனியார் ஓ.டி.டி நிறுவனம் ஒன்று விரைவில் வெளியிட உள்ளது.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட்டுள்ளது.

ஆதரவற்றோர் முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இந்த கல்யாண விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

சூர்யாவுக்கு சூப்பர் கிப்ட் கொடுத்த கமல்.; சிலிர்க்கும் சிவகுமார் குடும்பம்

சூர்யாவுக்கு சூப்பர் கிப்ட் கொடுத்த கமல்.; சிலிர்க்கும் சிவகுமார் குடும்பம்

கமல்ஹாசன், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி,சூர்யா ஆகியோர் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி ரிலீசானது.

நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்குகளில் மக்கள் வெள்ளம் அலைமோதுவதை காண முடிகிறது.

இதுவரை உலகளவில் சுமார் ரூ. 200 கோடி வசூலை படம் இந்த படம் குவித்துள்ளது.

கமலுக்கும் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்துள்ள சூர்யாவுக்கும் பெரும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

விக்ரம் 3 படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் சூர்யா. இந்த தகவலை சூசகமாக அறிவித்தார் கமல்.

அண்ணா எப்படி சொல்றது? – சூர்யா.; சாரி தம்பி சார் – கமல்.; ரெண்டு பேரும் என்ன சொல்றாங்க.?

படத்தின் மிகப்பெரிய வெற்றியால் ‘விக்ரம் ‘ படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் அவர்கள் இயக்குனர் லோகேஷெக்கு லெக்சஸ் சொகுசு காரை பரிசளித்தார்.

மேலும் 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக்குகளையும் பரிசாக வழங்கினார் கமல்.

இந்த நிலையில் சிறப்பு வேடத்தில் நடித்த சூர்யாவுக்கு விலையுயர்ந்த ரோலக்ஸ் (கேரக்டர் பெயரும் அதான்) பிராண்டட் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்துள்ளார் கமல்.

இந்த பரிசை கொடுக்க கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நடிகர் சூர்யாவை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்து பரிசை அளித்தனர்.

அப்போது சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார் அருகில் இருந்தார். கமலை ஆரத்தழுவி கட்டிக்கொண்டார்.

கமல் சூரியாவை சந்தித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் சூர்யாவின் தம்பி கார்த்தியும் ”விக்ரம்’ படம் பார்த்து சிலாகித்து குறிப்பிட்டு இருந்தார்.
லோகேஷ் இயக்கிய ‘கைதி’ படத்தில் கார்த்தி நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal gives super gift to Actor Surya

More Articles
Follows