ரஜினி-கமல் வரிசையில் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெருமை

sivakarthikeyanஎம்ஜிஆர், ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் சூப்பர் ஹிட் படத்தலைப்பை இன்றைய படங்களுக்கு பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.

தற்போது இந்த வரிசையில் சிவகார்த்திகேயனின் படத்தலைப்பு இடம்பெறும் வகையில் ஒரு படம் உருவாகிறது.
சிவகார்த்திகேயன் கேரியரில் மாபெரும் ஹிட்டடித்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

இப்படப்பெயரை கொஞ்சம் மாற்றி, வருத்தப்படாத காதலர் சங்கம் என்ற பெயரில் ஒரு படம் உருவாகவுள்ளது.

இதில் கவிஞர் ஜெயம் கொண்டான் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடிக்கவிருக்கிறாராம்.

ஆனைவாரி ஸ்ரீதர் இப்படத்தை இயக்க, இதன் சூட்டிங் அடுத்த மாதம் திருச்செங்கோடு பகுதியில் நடைபெற உள்ளது.

கஷ்டப்படும் சினிமா கலைஞர்களுக்கு உதவிடும் வகையில் மலிவு விலை உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் கவிஞர் ஜெயம் கொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

Like Rajini Kamal movie title Sivakarthikeyan movie title also used

Overall Rating : Not available

Related News

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய…
...Read More
'சுந்தரபாண்டியன்' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில்…
...Read More

Latest Post