பாக்யராஜின் சூப்பர் ஹிட்டான படத்தலைப்பில் இணையும் விதார்த் – விக்ராந்த்

பாக்யராஜின் சூப்பர் ஹிட்டான படத்தலைப்பில் இணையும் விதார்த் – விக்ராந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில், முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் புகழ் இயக்குநர் ராம்குமாரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய சஜி சலீம் இயக்கத்தில், விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘விடியும் வரை காத்திரு’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

படத்தின் முதன்மை கதாபாத்திரங்களாக விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண், சந்திரன், மஹாலக்ஷ்மி ஷங்கர், குவின்சி, வலினா பிரான்சிஸ், நிம்மி இம்மானுவேல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தை பற்றி பேசிய ரவீந்திரன்…

“ஒரு நாள் இரவில் நடக்கும் முழு நீள திரில்லர் படமாக ‘விடியும் வரை காத்திரு’ இருக்கும் என்றும், தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்றும் கூறினார்.

“ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு நக்சலைட், அவர்கள் வந்த கார் மாறி செல்கின்றனர். இந்த பயணத்தின் போது ஏற்படும் விளைவுகள் தான் இந்த படத்தின் மையக்கரு.

இதில் கார்த்திக் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார், விக்ராந்த் நக்சலைட் ஆக வருகிறார், மற்றும் விதார்த் முக்கியமான டிரைவர் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

ஒரு சுவாரசியமான நேரத்தில் இந்த பயணத்தில் இணைகிறார் வருண்,” என்று ரவீந்திரன் தெரிவித்தார்.

நடிகர்கள் தேர்வு பற்றி அவர் கூறுகையில்…

“சலீம் இந்த கதையை என்னிடம் சொல்லும்போது இந்த நடிகர்கள் தான் இந்த கதாபாத்திரங்களுக்கு சரியாக பொருந்துவார்கள் என்று தோன்றியது.

விதார்த், விக்ராந்த் மற்றும் கார்த்திக் மூவருமே மிகவும் நேர்த்தியான கலைஞர்கள். சரியான கதையை தேர்வு செய்வதில் விதார்த் திறமைசாலி, விக்ராந்த் ஒரு சிறந்த நடிகர்.

நடிப்பில் இருந்து விலகி இருந்த கார்த்திக்கை நான் சமாதானம் செய்து ஒத்துக்கொள்ள வைத்தேன். இந்த திறமைசாலிகளுக்கு இப்படம் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

நியூசிலாந்து நாட்டில் இருந்து நடிப்பதற்கு ஆர்வத்துடன் வந்துள்ளார் வருண்,” என்று தெரிவித்தார்.

படத்தில் உள்ள அனைத்து கதாப்பாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று ரவீந்திரன் மேலும் கூறினார்.

படத்தின் தலைப்பை பற்றி பேசிய தயாரிப்பாளர் ரவீந்திரன்…

“பல வருடங்களுக்கு முன்பு பாக்கியராஜ் அவர்கள் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘விடியும் வரை காத்திரு’.

இதன் தலைப்பு எங்கள் படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தததால் அவரிடம் சென்று கோரிக்கை வைத்தோம். முழு மனதோடு இந்த தலைப்பை அவர் எங்களுக்கு வழங்கினார்,” என்றார்.

“ஜூலை 23 அன்று படப்பிடிப்பு தொடங்குகிறது. படப்பிடிப்பு முழுவதும் கோயம்புத்தூரில் 30 நாட்கள் நடைபெறவுள்ளது.

ஒரு நாள் இரவில் நடைபெறும் சம்பவங்கள் என்பதால் அதிகமான காட்சிகள் இரவில் படமாக்கப் படவுள்ளன.

முழு வீச்சில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அக்டோபர் இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

இந்த படத்திற்காக இயக்குநர் சலீம் பல விதமான புதிய யுக்திகளை கையாள உள்ளார் என்று ரவீந்திரன் தெரிவித்தார்.

‘விடியும் வரை காத்திரு’ திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை சந்தோஷ் மேற்கொள்கிறார்.

மேலும் இசை – அஸ்வத், படத்தொகுப்பு – ஜெரோம் ஆலென், கலை – நர்மதா வேணி, ஆடை வடிவமைப்பு – மின்னி பாஸ்டின் ஆகியோர் கையாள்கின்றனர்.

அசோகன் ஜி நிர்வாக தயாரிப்பாளர் ஆவார்.

விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் மற்றும் பிரபல நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் ‘விடியும் வரை காத்திரு’ படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில் ஷாஜி சலீம் இயக்கவுள்ளார்.

*Libra Productions V C Ravindhran to bankroll ‘Vidiyum Varai Kaathiru’ directed by Saji Saleem and starring Viddharth, Vikranth, Karthik Kumar and Varun*

கேரளாவை பரபரப்புக்குள்ளாக்கிய பஹத் பாசிலின் ‘நிலை மறந்தவன்’ தமிழில் ரிலீஸ்

கேரளாவை பரபரப்புக்குள்ளாக்கிய பஹத் பாசிலின் ‘நிலை மறந்தவன்’ தமிழில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் ஜூலை 15-ல் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’.. மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிரட்டல் வில்லனாகவும் நடித்து வரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். புஷ்பா மற்றும் விக்ரம் படங்களின் வெற்றிக்கு பிறகு இப்படம் வெளியாகிறது.

ராஜாராணி, நையாண்டி படங்களில் கதாநாயகியாக நடித்தவரும் பஹத் பாசிலின் மனைவியுமான நடிகை நஸ்ரியா நசீம் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் அவருடன் கோலிசோடா-2 படத்தில் வில்லனாக நடித்த செம்பான் வினோத்தும் நடிக்க, திமிரு படத்தில் நடித்த விநாயகன் இதில் மனதை தொடும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ராஜமாணிக்கம், உஸ்தாத் ஹோட்டல் ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவரும் பிரேமம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை தயாரித்தவருமான பிரபல மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

மலையாளத்தில் ‘ட்ரான்ஸ்’ என்கிற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தற்போது தமிழில் ‘நிலை மறந்தவன்’ என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது.

மதத்தின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு போலி கும்பல்.. படித்து வேலை கிடைக்காத இளைஞன் ஒருவன் தன்னை அறியாமலேயே இந்த மோசடிக்கு துணை போகிறான். ஒரு கட்டத்தில் உண்மை தெரிய வரும்போது அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பதை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு ; தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ்

இயக்கம் ; அன்வர் ரஷீத்

இசை ; ஜாக்ஸன் விஜயன் – சுஷின் ஷியாம்

ஒளிப்பதிவு ; அமல் நீரத்

படத்தொகுப்பு ; பிரவீன் பிரபாகர்

வசனம் ; சர்வம் கிருஷ்ணார்ப்பணம் (தமிழாக்கம்)

மக்கள் தொடர்பு ; KSK செல்வா

Fahadh Faasil’s Nilai Marandhavan gets release date

PS1 Event : ‘பொன்னியின் செல்வன்’ படத்தை MGR எடுக்காமல் விட்ட காரணம் புரிந்தது – மணிரத்னம்.. ‘ரோஜா’-வே பான் இந்தியா படம்தான்- த்ரிஷா

PS1 Event : ‘பொன்னியின் செல்வன்’ படத்தை MGR எடுக்காமல் விட்ட காரணம் புரிந்தது – மணிரத்னம்.. ‘ரோஜா’-வே பான் இந்தியா படம்தான்- த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரித்து, இயக்குனர் மணிரத்னம் இயக்கி, பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அப்படத்தின் குழுவினர் பேசியதாவது:

நடிகர் கார்த்தி பேசும்போது…

நம் பள்ளிப்பருவத்தில் வரலாறு படம் என்றாலே தூங்கிவிடுவோம். வரலாற்றின் மீது ஆர்வம் இருக்காது. அப்படி விழித்திருக்கும் எஞ்சிய நேரத்தில் நாம் கேட்டதெல்லாம் அந்நியர் நம்மை அடிமைபடுத்திய தான். இப்போது இருக்கும் காலகட்டத்தில் புத்தகம் படிப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. 10 வினாடி வீடியோவைப் பார்த்துவிட்டு நகர்ந்து விடுகிறார்கள்.

ஆனால், 5 பகுதிகளைக் கொண்ட ஒரு புத்தகத்தை மணி சார் படமாக்கியிருக்கிறார். வரலாறு படிக்காமல்.. படைக்க முடியாது. இந்த இளைய தலைமுறையினருக்கு வரலாறு படியுங்கள் என்று சொல்கிறேன்.

இப்படத்தைப் பார்க்கும்போது பெருமிதம் வரும். அப்படி பெருமிதம் வரும்போது இதைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். பொன்னியின் செல்வன், மணி சார் நமக்கு அளித்த பரிசு என்று தான் கூற வேண்டும்.

நான் எனது அம்மாவிடம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளேன் என்று கூறிய போது. எனது கல்லூரியில் உள்ள பெண்கள் எல்லாம் வந்திய தேவனை போன்ற ஒருவனைத் தான் திருமணம் செய்ய ஆசைப்படுவார்கள் என்று கூறினார்.

அம்மாடியோவ்… அவர் என்ன அவ்வளவு பெரிய லவ்வர் பாயா பொன்னியின் செல்வன்? என்று கேட்டேன். அதன் பிறகு வரலாறு படிக்கும் நண்பனிடம் கேட்டேன், வந்திய தேவனை எப்படி புரிந்து கொள்வது என்று கேட்ட போது ஐஏஎஸ் அதிகாரி தான் என்று கூறினார்.

ஐஏஎஸ் அதிகாரிக்கு எல்லாம் தெரியும். அது போல குதிரையேற்றம், போர் போன்ற எல்லாக் கலைகளையும் அறிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

அவருக்கென தனி பிரிவு கிடையாது என்று கூறினார். வந்திய தேவன் ஒரு இளவரசன் ஆனால் அவனுக்கு நாடு கிடையாது. ஆனால் அவன் பேராசை கொண்டவன். அவனுக்கு எல்லா ஆசைகளும் உண்டு. பெண் ஆசையிலிருந்து பண ஆசை வரை எல்லா ஆசைகளும் உண்டு. ஆனால், மிகவும் நேர்மையானவன். இது தான் எனக்கு வந்திய தேவனை புரிந்துகொள்ள உதவியாக இருந்தது.

மேலும், ஒரு நாவலை படமாக்குவதில் சிக்கல் உள்ளது. ஏனென்றால், இந்த நாவலை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதலிருக்கும். குறைந்தது 50 லட்சத்திற்கும் மேலான மக்கள் இந்த புத்தகத்தை படித்திருப்பார்கள். அனைவருக்கும் ஏற்றவாறு மணி சார் இந்த படத்தை மிக அழகாக உருவாக்கி இருக்கிறார் என்றார்.

நடிகை திரிஷா பேசும்போது

‘ரோஜா’ திரைப்படத்தின் போதே இயக்குனர் மணிரத்னம் அவர்கள் பான் இந்தியா படம் என்பதை உருவாக்கிவிட்டார்.

யார் கேட்டாலும் நான் சொல்வேன் மணிரத்னம் சாரின் குந்தவை. தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் படம்.

ராஜ ராஜ சோழன் உலகம் முழுவதும் தமிழை, அதன் பெருமையை கொண்டு சென்றார். மணி சார் இப்படம் மூலம் கொண்டு செல்கிறார் என்றார்.

சரத்குமார் பேசும் போது…

இந்த மேடையில் நிற்பது திரிஷா கூறியது போல புல்லரிக்கும் கணம் தான். கார்த்தி கூறியது போல சோழர்களைப் பற்றி இன்னும் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். கடல் பயணம் மேற்கொண்டு சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தியது சோழர்கள். எத்தனை படங்கள் நடித்திருந்தாலும், மணிரத்னம் படத்தில் நடிப்பது பெருமை.

அதிலும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் நடித்திருந்தாலே பெருமை தான். அதன்படி பழுவேட்டையராக நடித்திருப்பதில் பெருமையடைகிறேன். வசனங்களை எப்படி பேசவேண்டும் என்று மணி சாரிடம் கேட்டால், நீங்கள் படித்து மட்டும் வாருங்கள். எப்படி நடிக்க வேண்டும் என்று நான் சொல்லித் தருகிறேன்.

இப்படத்தின் அறிவிப்பு வந்தபோதே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ரசிகர்களும் எந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற ஆர்வத்துடனும் படத்தின் ரிலீஸ் எப்போது என்ற ஏக்கத்துடனும் இருந்தார்கள். இப்போது அவர்களுக்கான பதில் கிடைத்துவிட்டது என நினைக்கிறேன்.

சோழர் சாம்ராஜ்யம் மிக பெரியது. கலிங்கம், கங்கை கொண்ட சோழபுரம் என பறந்து விரிந்த ஓர் சாம்ராஜ்யம். கடல் கடந்து ஆட்சி செய்யும் அளவிற்கு மாபெரும் ஒன்று. அப்போது, ஆமைகளை பின் தொடர்ந்து அதன்பின் வரும் மின்சாரத்தை வைத்து தான் சோழர்கள் ஒவ்வொரு தேசத்திற்கும் சென்று சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார்.

இப்படத்தில் நடிக்கும் ஒவ்வொருவரும் ஒருவருக்கு ரசிகர்களாக இருப்பார்கள். அப்படி நினைத்துக் கொண்டு தான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். ஆனால், ஒவ்வொருவரும் என்ன கதாபாத்திரமாக இருக்க வேண்டுமோ அந்த பாத்திரமாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். காந்தம் போல சொல்வார்கள் அப்படி தான் மணி சார் என்னை அழைத்தார்.

இப்படத்தை பான் இந்தியா படம் என்று கூறுங்கள். பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த படம் என்று கூறுங்கள். ஆனால், இத்தனை கலைஞர்கள் ஒரே படத்தில் இணைந்து நடித்திருப்பது மணி சாரின் பொன்னியின் செல்வன் படத்தில் தான். நான் மணிரத்னம் சாரை பார்த்து பயந்து கொண்டிருந்தேன்.

ஆனால், சிங்கம் என்றால் அது மணி சார் தான். அவர் இப்படி செய்யுங்கள் என்று சாதாரணமாக கூறுவார். அதை உள்வாங்கி நடித்தாலே போதும். என்றார்.

விக்ரம் பிரபு பேசும்போது,

சிறு வயதில் தாத்தா பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்து வா என்று கூறினார். அப்போது நான் கொண்டு வந்து கொடுத்தேன். இன்னும் நான்கு பாகம் இருக்கிறது அதையும் எடுத்து வாடா என்று கூறினார். அப்படிதான் எனக்கு பொன்னியின் செல்வனை தெரியும். இப்போது மணி சார் அழைத்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

ஐஸ்வர்ய லட்சுமி பேசும்போது,

எவ்வளவு நன்றி கூறினாலும் மணி சாருக்கு போதாது. ஒவ்வொரு கதாபாத்திரத்திமும் இயற்கையாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதே பெருமை. இதை தவிர பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றார்.

ஜெயம் ரவி பேசும்போது,

எங்கள் ஒவ்வொருக்கும் பெருமைதான். இதை உங்களுக்கு வழங்குவதைவிட மகிழ்ச்சியான விஷயம் எதுவுமில்லை. ஒருமுறை மணி சாரின் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தவறிவிட்டது. அதற்காக என்னை திட்டுவதற்காக தான் அழைத்தார் என்று சென்றேன்.

ஆனால், நீ தான் பொன்னியின் செல்வனாக நடிக்க போகிறாய் என்று கூறினார். இந்த மேடையைவிட அவர் கூறிய அந்த தருணம் தான் புல்லரிக்கும் தருணமாக இருந்தது. பல பேரின் கனவு நனவாகி இருக்கிறது.

எங்களுடைய கனவும் நனவாகியிருக்கிறது. பல லட்சம் பேர் இந்த புத்தகத்தை படித்திருக்கிறார்கள். பல ஆயிரம் பேர் இதைப் பற்றி பேசியிருக்கிறார்கள். ஆனால், இதை ஒரே ஆளாக திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் மணி சார். அவருக்கு தலை வணங்குகிறேன். அந்த ஒரு மனிதன் மணி சாரை நினைத்து பல காரணங்களால் மற்றவர்களால் செய்ய முடியாமல் போனதை தனி ஒருவனாக நடத்தி காண்பித்திருக்கிறார் என்றார்.

இயக்குனர் மணிரத்னம் பேசும்போது,

நான் கல்லூரி ஆரம்பிக்கும்போது இந்த புத்தகம் படித்தேன். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் நெஞ்சை விட்ட நீங்கவில்லை. கல்கிக்கு முதல் நன்றி.

இப்படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய படம். நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு அவர் நடிக்க வேண்டியது. ஆனால், முடியாமல் போனதற்கான காரணம் இன்று புரிந்தது. எங்களுக்காக விட்டு சென்றிருக்கிறார்.

எவ்வளவு பேர் முயற்சித்திருக்கிறார்கள். நானும் 3 முறை 1980 களில் இருந்து முயற்சி செய்து இன்று தான் முடித்திருக்கிறேன். இங்கு உள்ளவர்கள் அனைவராலும் தான் இது சாத்தியமானது. இவர்கள் இல்லையென்றால், இது சாத்தியமில்லை. முக்கியமாக ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி என்றார்.

இசைமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பேசும்போது

30 வருடங்களாக எனக்கு பாஸ் மணிரத்னம் சார் தான். ஒருவருக்குள் இருக்கும் திறமையை எப்படி வெளியே எடுப்பது என்பதை நான் மணி சாரிடம் தான் கற்றுக் கொண்டேன். பொறுமை, மனிதநேயம், அன்பு, ஊக்குவித்தல் என்றவர் தான் மணி சார். இப்படத்திற்கு இசையமைக்க பல இடங்களுக்கு சென்று ஆராய்ச்சி செய்தோம்.

அப்போது பாலி என்ற இடத்திற்கு சென்று 2 வாரம் தங்கி அங்குள்ள இசைக்கருவிகளை பற்றி ஆராய்ச்சி செய்தோம். அந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கு வந்துவிட்டது. அந்த காலத்திலும் அனைவரும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியிருக்கிறார்கள். ஆகவே, இது நம் எல்லோருடைய படம் என்று கூறவேண்டும் என்றார்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேசும்போது,

இப்பட வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம். மணி சாரைப் பற்றி நிறைய கூறலாம். அவர் சிறந்த நண்பர், ஆசிரியர், வழிகாட்டி என்று சொல்லிக் கொண்டே போகலாம். இப்பட வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்துடன் வீட்டிற்கு வந்தேன். வந்ததும் பயம் வந்தது. இப்படத்தை எப்படி செய்ய போகிறேன், அதுவரை உயிரோடு இருப்போமா? என்று பலவித பயம் இருந்தது. மணி சார் அதையெல்லாம் உடைத்து நம்பிக்கை கொடுத்தார். இப்படம் தமிழின் அடையாளம். தமிழ் இருக்கும் வரை பொன்னியின் செல்வன் அடையாளமாக இருக்கும் என்றார்.

லைகா தமிழ்குமரன் பேசும்போது,

இன்று சில கலைஞர்களைத் தான் பார்த்தீர்கள். இன்னும் நாட்கள் செல்ல செல்ல இப்படத்தில் நடித்த அனைவரையும் பார்க்கலாம். இன்று டீசர் மட்டும் தான் வெளியாகியிருக்கிறது. இன்னும் டிரைலர், இசை வெளியீடு என்று செப்டம்பர் 30 படம் வெளியாகும் வரை நிறைய இருக்கிறது என்றார்.

Actress Trsiha speech at Ponniyin Selvan teaser launch event

OFFICIAL விக்ரம் இப்போ எப்படி இருக்கிறார்.? விக்ரம் தரப்பு & மருத்துவமனை அறிக்கை

OFFICIAL விக்ரம் இப்போ எப்படி இருக்கிறார்.? விக்ரம் தரப்பு & மருத்துவமனை அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நடிப்புகென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம்.

சினிமாவில் இவரின் ஆரம்ப காலகட்டத்தில் சிறிய சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டு இருந்தார.

மலையாளம் & தமிழ் படங்களில் அவ்வப்போது தலை காட்டி வந்தார்.

மேலும் பல பிரபல நடிகர்களுக்கு டப்பிங் கலைஞராக வேலை பார்த்து வந்தார்.

பாலா இயக்கத்தில் வெளியான ‘சேது’ படத்தில் தனது முழு திறமையும் காட்டி மக்கள் மனங்களை வென்றார்.

இந்த படத்திற்கு பின் பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார் விக்ரம்.

தில், தூள், சாமி, ஜெமினி, காசி என ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு வேடத்தில் அசத்தியிருந்தார் விக்ரம்.

அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படும் ஒரு நடிகர் விக்ரம் என்று சொன்னால் அது மிகையல்ல.

தற்போது இவரது மகன் துருவ் சினிமாவில் நடித்து வருகிறார்.

அண்மையில் ஓடிடியில் வெளியான மகான் படத்தில் தந்தை மகன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார்.

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிய ‘கோப்ரா’ படம் ஆகஸ்டில் ரிலீசாகவுள்ளது.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய இடத்தில் நடித்துள்ளார் விக்ரம். இந்த படம் செப்டம்பர் 30ல் ரிலீஸ்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதன் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விக்ரமின் மேலாளர் மற்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

விக்ரமுக்கு லேசான மார்பு அசவுகரியம் இருந்தது. அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. இது தொடர்பான வதந்திகளைக்கேட்டு வேதனை அடைகிறோம்.

இந்த நேரத்தில் அவருக்கும் குடும்பத்திற்கும் தேவையான தனிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விக்ரம் தற்போது நலமாக இருக்கிறார். இன்னும் ஒரிரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.

இந்த அறிக்கை பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்புகிறோம்”

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

OFFICIAL How is Vikram now? Vikram side & hospital report

‘அஜித் 61’ பட போஸ்டரை ஸ்ரீதேவி பிறந்தநாளில் வெளியிட புரொடியூசர் ப்ளான்

‘அஜித் 61’ பட போஸ்டரை ஸ்ரீதேவி பிறந்தநாளில் வெளியிட புரொடியூசர் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நேர் கொண்ட பார்வை’ & ‘வலிமை’ ஆகிய படங்களை தொடர்ந்து போனிகபூர் மற்றும் வினோத்துடன் மூன்றாவது முறையாக அஜித் கைகோத்திருக்கும் படம் AK61.

வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு க்ரைம் – த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

யுவன் இசையமைக்க இப்படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், மகாநதி சங்கர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டுள்ளாராம்.

அன்றைய தினம் போனி கபூரின் மனைவி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Producer plan to release ‘Ajith 61’ poster on Sridevi’s birthday

JUST IN விக்ரமுக்கு உடல்நலக்குறைவு.; மருத்துவமனையில் அனுமதி! நடந்தது என்ன.?

JUST IN விக்ரமுக்கு உடல்நலக்குறைவு.; மருத்துவமனையில் அனுமதி! நடந்தது என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நடிப்புகென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம்.

சினிமாவில் இவரின் ஆரம்ப காலகட்டத்தில் சிறிய சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டு இருந்தார.

மலையாளம் & தமிழ் படங்களில் அவ்வப்போது தலை காட்டி வந்தார்.

மேலும் பல பிரபல நடிகர்களுக்கு டப்பிங் கலைஞராக வேலை பார்த்து வந்தார்.

பாலா இயக்கத்தில் வெளியான ‘சேது’ படத்தில் தனது முழு திறமையும் காட்டி மக்கள் மனங்களை வென்றார்.

இந்த படத்திற்கு பின் பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார் விக்ரம்.

தில், தூள், சாமி, ஜெமினி, காசி என ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு வேடத்தில் அசத்தியிருந்தார் விக்ரம்.

அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படும் ஒரு நடிகர் விக்ரம் என்று சொன்னால் அது மிகையல்ல.

தற்போது இவரது மகன் துருவ் சினிமாவில் நடித்து வருகிறார்.

அண்மையில் ஓடிடியில் வெளியான மகான் படத்தில் தந்தை மகன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார்.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் விக்ரம்.

இந்த நிலையில் இவருக்கு சற்று முன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விக்ரம்.

செய்திகளை தொடர்ந்து அறிந்துக் கொள்ள எங்களுடன் இணைப்பில் இருங்கள்..

Actor Vikram admitted to hospital ? what happened.?

More Articles
Follows