’அடுத்த சாட்டை’யை கழட்டிவிட்ட லிப்ரா ரவீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி தயாரித்து நடித்துள்ள படம் அடுத்த சாட்டை.

முதல் பாகத்தை போலேவே இப்படமும் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் விதமாக உருவாகியுள்ளது.

முதல் பாகத்தில் பள்ளியில் படித்த மாணவர்கள் இதில் கல்லூரியில் படிப்பதாக உள்ளது.

கல்லூரி முதல்வராக தம்பி ராமையாவும், பேராசிரியராக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் முக்கிய வேடத்தில் அதுல்யா ரவி கல்லூரி மாணவியாக இணைந்துள்ளார்.

சசிகுமார் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

பிரபு திலக்-சமுத்திரக்கனி இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதன் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்சன்ஸ் சார்பாக ரவீந்திரன் வாங்கியிருந்தார்.

தற்போது தனக்கும் சமுத்திரக்கனிக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபட்டால் ரவீந்திரன் விலகியிருப்பதாக அறிவித்துள்ளார்.

Libra Productions and Samuthirakani clash in Adutha Sattai release

விஷால்–அனிஷா திருமணம் நிற்க இதான் உண்மையான காரணம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில ஆண்டுகளுக்கு முன் சரத்குமார் மகள் & விஷால் மிகவும் நெருக்கமாக இருந்தனர். இதனையடுத்து விரைவில் இவர்களின் திருமணம் நடக்கும் என கோடம்பாக்கமே கூறி வந்தது.

ஆனால், திடீரென தெலுங்கு நடிகையும், தொழிலதிபரின் மகளுமான அனிஷாவைக் காதலிப்பதாக அறிவித்து அவருடன் கடந்த மார்ச் மாதம் நிச்சயத்தார்த்தமும் செய்துக் கொண்டார் விஷால்.

இவர்களின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு மாதமே உள்ள நிலையில், திடீரென இருதரப்பிலும் திருமண வேலைகளை நிறுத்தி உள்ளதாக தகவல்கள வந்த வண்ணம் உள்ளன.

மேலும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நிச்சயதார்த்த புகைப்படங்களை அனீஷாவும் நீக்கியுள்ளதால் இது உறுதி என்கிறார்கள்.

ஆனால் என்ன காரணம்? என்பது இதுவரை தெரியவில்லை.

தன் திருமணத்தை பற்றி கேட்கும்போது எல்லாம் நடிகர் சங்கம் புதிய கட்டிடம் கட்டிய பிறகு அங்குதான் என் திருமணம் நடக்கும் என பல ஆண்டுகளாக கூறி வந்தார்.

ஆனால் தற்போது வரை நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை. எனவே இதுதான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இவையில்லாமல் அனிஷாவின் பெற்றோர் நடிகர் சங்க கட்டிடத்தில் திருமணத்தை நடக்க சம்மதம் அளிக்கவில்லை எனவும் ஒரு தகவல் வருகிறது.

நிஜமாகவே திருமணம் நின்றதா? என்பது குறித்து இரு தரப்பும் அறிவிக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

சமீபத்தில் கன்னி ராசி பட பிரஸ் மீட்டில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என வரலட்சுமி கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Here is reason why Vishal and Anisha Call Off Wedding After Engagement

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை இயக்கும் இருமுகன் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர் சி இயக்கி வரும் ‛ஆக்ஷன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இப்படம் தற்போது துருக்கியில் படமாக்கப்பட்டு வருகிறது. வில்லனாக வேதாளம் பட புகழ் கபிர் துகான் சிங் நடித்து வருகிறார்.

இதனையடுத்து துப்பறிவாளன் 2 படத்தில் விஷால் நடிப்பார் என கூறப்பட்டது.

இந்த நிலையில் விக்ரமின் இருமுகன், விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் விஷால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Vishal to team up with Anand Shankar

கார்த்திதான் பர்ஸ்ட்; ரஜினி-விஜய்-அஜித்-சூர்யா எல்லாம் நெக்ஸ்ட்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டேய்.. என்னடா பண்ணி வச்சிருங்கீங்க.. டைட்டிலை பார்த்தா இப்படி கேட்க தோனுதா..? வரோம் பாஸ். வெயிட் பண்னுங்க…

கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கியவர் ரஞ்சித். அதன்பின்னர் ரஜினி நடித்த கபாலி, காலா படங்களை இயக்கினார்.

கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார் வினோத். அதன்பின்னர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார் வினோத்.

அதுபோல் கார்த்தி நடித்து வரும் கைதி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இவர் அடுத்து விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார்.

அதுபோல் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கினார் சிவா. அதன்பின்னர் தொடர்ந்து அஜித் நடித்த வீரம், வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இதற்கு அடுத்து சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் சிவா. இதற்கு அடுத்து ரஜினி படத்தை இயக்கவுள்ளார் சிவா என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ஆக… இயக்குனர்கள் வினோத், ரஞ்சித், சிவா, லோகேஷ் கனகராஜ் ஆகிய நால்வரும் முதலில் கார்த்தி நடித்த படங்களை தான் இயக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini Vijay Ajith Suriya all next to Karthi

தமிழன்தான் ஆளனும்.; ரஜினிக்கு எதிராக விஜய் தந்தை எஸ்ஏசி பேச்சு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பாளர், அபிராமி ராமநாதனின், 73வது பிறந்த நாள் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு வாழ்த்தினர்.

இதில், நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான, எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:

தமிழன் எங்கிருந்தாலும் அவனுக்கு பெருமை தான். அமெரிக்காவில் பணியாற்றும் சாப்ட்வேர் வல்லுனர்கள் பலரும் தமிழர்கள்தான்.

மத்திய அரசு விருது கொடுத்தால் தான், தமிழனுக்கு பெருமை வரும் என்று அர்த்தமில்லை.

தமிழன் என்று சொல்வதில் எப்போதுமே, ஒரு திமிர் உண்டு. அப்படிப்பட்ட தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று பேசினார்.

இவரின் பேச்சுக்கு ரஜினிகாந்துக்கு எதிரான கருத்தாக இருக்குமோ? என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் கட்சி தொடங்கவுள்ள ரஜினி வெளி மாநிலத்தவர் என்பதால் எஸ்ஏசி.யின் இந்த பேச்சு அரசியல் உலகில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

Tamizhan must rule Tamilnadu says SA Chandrasekar

சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இசையில் உருவாகும் சர்பத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

7 ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் சர்பத் படத்தில் இசை அமைப்பாளராக தனது தடத்தை அழுத்தமாக பதித்துள்ளார் இசை அமைப்பாளர் அஜீஸ். கதிர், சூரி காம்பினேஷனில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்குகிறார்.

2009 சூப்பர் சிங்கர் சீசன் 2-வில் குரலால் வசீகரித்த அஜீஸ் தற்போது சினிமாவில் இசை அமைப்பாளராக வசீகரித்து வருகிறார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் குழந்தைக் குரலாக ஒலித்த இவரது குரல் அப்போதே பிரபலம். கோவா படத்தில் இவர் பாடிய இதுவரை பாடல் இதுவரைக்கும் இளைஞர்களை கவர்ந்து வருகிறது. குரலில் மெஸ்மரிசம் பண்ணும் அஜீஸ் இப்போது தன் இசை விரலாலும் கலக்கி வருகிறார். விரைவில் வெளியாக இருக்கிற சர்பத் படத்தில் 5 பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். வெளியாகும் முன்பே சர்பத் படத்தின் பாடல்கள் மீது பெரிய நம்பிக்கை கொண்டுள்ள அஜீஸ், “இசை தான் என் ஜீவன்” என்கிறார்.

மேலும் ஒரு வெப்சீரிஸுக்கும் இசை அமைத்து வரும் அஜீஸ் சர்பத் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்குப் பிறகு மிகப்பிரபலமான இசை அமைப்பாளாராக பரிணாமம் அடைவார் என்கிறார்கள் படக்குழுவினர். படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 5 பாடல்களில் ஒரு பாடல் ப்ராப்பரான திருவிழா பாடலாம். ஒரு பிரண்ட்ஷிப் பாடல் இரண்டு மெலடி பாடல் என வெரைட்டியாக பாடல்கள் கம்போஸ் பண்ணி வைத்திருப்பதாக சொல்லும் அஜீஸ், படத்தின் கதையும் கதைக்கு ஏற்ற பின்னணி இசையும் சிறப்பாக இருப்பதாக கூடுதல் தகவலையும் சொன்னார். அஜீஸுக்கு பள்ளிப் படிப்பின் போதே இசை மீது தீராக்காதல் இருந்ததாம்.

இண்டிபெண்டண்ட் இசையில் பெரிய நாட்டத்தோடு இருந்துள்ள இவர் பல்வேறு குறும்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மேலும் இசை ஆல்பங்களாலும் ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளார். இனி பல பெரும் படங்களில் அஜீஸுன் இசைப் பயணம் தொடரும் என எதிர்பார்க்கலாம்

More Articles
Follows