தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோலிவுட்டில் எங்கு திரும்பினாலும் ‘விக்ரம்’ படம் குறித்த பேச்சு எதிரொலிக்கிறது.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பின் கமல் நடித்த படம் வெளியானது. மேலும் 7 ஆண்டுகளுக்கு பின் வெறித்தனமான ஒரு வெற்றியை தன் தீவிர ரசிகர் இயக்குனர் லோகேஷ் மூலம் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ‘விக்ரம்’ வெற்றி வாகை சூடியுள்ளது.
எனவே ஒவ்வொரு மொழி ரசிகர்களுக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.
தமிழில் பேசிய வீடியோவில்…
‛‛தரமான படங்களையும், நடிகர்களையும் தாங்கி பிடிக்க தமிழ் ரசிகர்கள் ஒருபோதும் தவறியது இல்லை. அந்த வெற்றி வரிசையில் என்னையும், எங்கள் ‘விக்ரம்’ படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம்.
தம்பிகள் விஜய் சேதுபதி, பஹத் பாசில், செம்பன் வினோத், நரேன் என வீரியமிக்க நடிகர் படை இதற்கு முக்கிய காரணம்.
கடைசி 3 நிமிடங்கள் வந்து திரையரங்குகளை அதிர வைத்த தம்பி சூர்யா அன்பிற்காக மட்டுமே நடித்தார். நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம்.
லோகேஷிற்கு சினிமாவிலும், என் மீதும் இருக்கும் காதல், படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும், படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறே இருக்கிறது. உங்கள் அன்பு தொடர விழையும் ராஜ்கமல் இன்டர்நேஷனலின் ஊழியன், உங்கள் நான்”.
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை உலகளவில் ரூ 200 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு காஸ்ட்லியான LEXUS காரை பரிசளித்துள்ளார் தயாரிப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன்.
லோகேஷுக்கு காஸ்ட்லி காரை கிப்ட்டாக கொடுத்த தயாரிப்பாளர் கமல்ஹாசன்
இந்த செய்தியை நாம் நேற்று நம் filmistreet தளத்தில் பார்த்தோம்.
இத்துடன் 13 உதவி இயக்குநர்களுக்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 ரக பைக்குகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் கமல்ஹாசன்.
மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கமல்ஹாசன் என்பதால் இந்த படம் மூலம் அவருக்கு நல்ல லாபம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Lexus car for director .. Apache bike for 13 assistant directors .; Producer Kamal’s generous mind