தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’.
இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று நடிகர் அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘லியோ’ படத்தில் அவரது கதாபாத்திரமான ஹரோல்ட்தாஸின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், ‘லியோ’ படக்குழு ஏற்கனவே நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்த நாளன்று அவருடைய கதாபாத்திரமான ஆண்டனி தாஸின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
leo movie arjun character harold das glimpse video unveiled
