தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படம் அக்டோபர் 19 தேதி உலகம் எங்கும் ரிலீஸ் ஆகிறது.
அன்று காலை 9 மணிக்கு தான் தமிழகத்தில் காட்சிகள் தொடங்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு 5 காட்சிகளை மட்டும் திரையிட்டு கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஆந்திரா கேரளா கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.
எனவே தமிழகத்திலும் காலை 4 மணி 7 மணி காட்சிக்கு ரசிகர்களுக்காக அனுமதி அளிக்க வேண்டும் என லியோ பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
நீதிபதி அனிதா சுமந்த் தலைமையில் இந்த வழக்கு விசாரணை இன்று அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற்றது.
“ரசிகர்களுக்காக அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் எல்லா காட்சிகளும் ரசிகர்களுக்காக தானே திரையிடப்படுகின்றன என நீதிபதி அனிதா எதிர் கேள்வி கேட்டார்.
மேலும் அதிகாலை சிறப்பு காட்சிகளால் ஒரு ரசிகர் மரணம் அடைந்தார். மேலும் பல அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது. லியோ ட்ரெய்லர் வெளியான சமயத்தில் தியேட்டர் அடித்து நொறுக்கப்பட்டது எனவும் அரசு தரப்பில் வாதிட்டப்பட்டது.
இந்த சூழ்நிலையில் ‘லியோ’ படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது.
அதே சமயம் காலை 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு படத்தை திரையிடுவது பற்றி தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலித்து நாளை மதியத்திற்குள் (அக்டோபர் 18) உத்தரவு பிறக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.
Leo Fdfs Starts 7am TN Govt can decide says Court