லெஜெண்ட் நீங்களா? இணையத்தில் வைரலாகும் அண்ணாச்சி போட்டோஸ்!

லெஜெண்ட் நீங்களா? இணையத்தில் வைரலாகும் அண்ணாச்சி போட்டோஸ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரவணா ஸ்டோர்ஸ் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியான லெஜெண்ட் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடச்சிது. இது திரைத்துறை மற்றும் சினிமா விமர்சகர்களை ஆச்சரியப்படுத்தியது, மேலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சமீபத்தில் ரிலீஸ் ஆன போதும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்போது எல்லாவற்றிற்கும் மேலாக சரவணன் தனது சமீபத்திய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். பிரமிக்க வைக்கும் நவீன உடையில் தோற்றமளிக்கும் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. லெஜெண்ட் பார்ட் 2 க்கு அண்ணாச்சி தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

Legend Saravanan’s amazing look transformation stuns netizens

ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்கும் அஜீத்?

ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்கும் அஜீத்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் ‘RC 15’ படத்தில் வில்லத்தனம் கலந்த கேமியோ ரோலில் நடிக்க அஜித்தை ஷங்கர் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் போன்ற கதாபாத்திரம் போல் அது என தெரிய வந்துள்ளது.

இருப்பினும், அஜித்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனை மறுத்துள்ளன, மேலும் அஜித் கேமியோவில் நடிக்க விரும்பவில்லை என்றும் அவரது முழு கவனம் ‘ஏகே 62’ இல் இருப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

What? Is Ajith playing the villain in Shankar’s next?

‘நாட்டு நாட்டு’ பாட்டு இனி எங்க பாட்டு இல்ல.; ஆர்ஆர்ஆர் பட நடிகர் அறிக்கை

‘நாட்டு நாட்டு’ பாட்டு இனி எங்க பாட்டு இல்ல.; ஆர்ஆர்ஆர் பட நடிகர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமௌலி இயக்கத்தில் தான் நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருது பெற்றதை பற்றி ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

“இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, ‘நாட்டு நாட்டு’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்ட ‘ஆர்ஆர்ஆர்’ குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். பாடலை சிறப்பாக பாடிய ராகுல் சிபில்கஞ்ச் மற்றும் காலபைரவா, நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் மற்றும் இந்த பாடலுக்கு உயிர்கொடுத்த அனைவருக்கும் பாராட்டுகள்.

‘நாட்டு நாட்டு’ பாடல் ஒரு உலகளாவிய கொண்டாட்டமாக மாறியுள்ளது. சிறந்த கதை மற்றும் சிறந்த பாடல் மொழி மற்றும் எல்லைகளை கடந்து வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது.

இந்தப் பாடல் இனி எங்களின் பாடல் அல்ல, ‘நாட்டு நாட்டு’ இனி பொதுமக்களுக்கும் அதை ஏற்றுக்கொண்ட அனைத்து வயது மற்றும் கலாச்சாரங்களை சேர்ந்தவர்களுக்கும் சொந்தமானது.

தி எலிபெண்ட் விஸ்பரர்ஸுக்கு ஆஸ்கார் விருது பெற்ற கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்கா ஆகியோரையும் வாழ்த்துகிறேன். இந்தியாவிற்கு இது ஒரு சிறந்த தருணம்!”

The song ‘Naatu Nathu’ is no longer our song says RRR actor

ஆஸ்கார் விழாவில் பங்கேற்ற தீபிகா படுகோனைப் பாராட்டிய கங்கனா ரனாவத்

ஆஸ்கார் விழாவில் பங்கேற்ற தீபிகா படுகோனைப் பாராட்டிய கங்கனா ரனாவத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் 95வது அகாடமி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டதைக் கண்டு உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இந்தியர்கள் மகிழ்ச்சியடைந்தனர், அங்கு அவர் தொகுப்பாளராக
திறம்பட செயல்பட்டார். உலக அரங்கில் அவரது நேர்த்தியான தோற்றம் நெட்டிசன்களின் பாராட்டைப் பெற்றது. நடிகை கங்கனா ரணாவத் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தீபிகா படுகோனைப் பாராட்டினார், இந்தியப் பெண்கள் இணையற்றவர்கள் என்பதற்கு அவர் ஒரு சான்றாக விளங்குகிறார் என்று கூறினார். கங்கனா தனது சமூக ஊடக பதிவில், தீபிகாவின் அசத்தலான அழகையும் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

Oscar 2023: Kangana Ranaut lauds Deepika Padukone

தனுஷின் ‘வாத்தி’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷின் ‘வாத்தி’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வெளியான படம் ‘வாத்தி’.

இப்படத்தில் தனுஷ் , சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகெள பரணி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், கென் கருணாஸ், பாரதிராஜா, ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், பட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெர்ரடி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி 17 அன்று தமிழ் – தெலுங்கு என இருமொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

‘வாத்தி’/’சார்’ படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.

இப்படத்தின் வசூலை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், ‘வாத்தி’ படம் வரும் மார்ச் 17 முதல் பிரபலமான நெட்பிளிக்ஸில் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாத்தி

Dhanush’s ‘Vaathi’ OTT Release Date Announcement

ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் கணக்கை தட்டி தூக்கிய ஹேக்கர்கள்

ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் கணக்கை தட்டி தூக்கிய ஹேக்கர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல கோலிவுட் நட்சத்திரங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. இருப்பினும், தொழில்நுட்ப ஆதரவு குழுக்களின் உதவியுடன் அவை மீட்டமைக்கப்படுகின்றன. இப்போது, ​​இந்த பட்டியலில் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்துள்ளார்.

கடந்த மார்ச் 10ம் தேதி ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் கணக்கு பெயர் தெரியாத நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. அவரது பக்கத்தின் பெயர் மற்றும் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் பக்கம் இன்று காலை வெற்றிகரமாக மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Music composer Harris Jayaraj’s Twitter account gets hacked

More Articles
Follows