MGRக்கு கிட்னி வழங்கி ஒரே கிட்னியோடு வாழ்ந்த லீலாவதி மரணம்.; ஓபிஎஸ் ஈபிஎஸ் டிடிவி இரங்கல்

MGRக்கு கிட்னி வழங்கி ஒரே கிட்னியோடு வாழ்ந்த லீலாவதி மரணம்.; ஓபிஎஸ் ஈபிஎஸ் டிடிவி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1984ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

எம்ஜிஆரை வாழ வைப்பதற்காக தன்னுடைய ஒரு (கிட்னி) சிறுநீரகத்தை தானமாக கொடுத்தவர் லீலாவதி.

இவர் எம்ஜிஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் ஆவார்.

(எம்ஜிஆர் 1987 டிசம்பர் 24ல் காலமானார்.)

அதன்பிறகு ஒரே கிட்னியோடு கிட்டத்தட்ட 36 வருடங்கள் வாழ்ந்து வந்தவர் லீலாவதி.

இவர் சமீபத்தில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.

லீலாவதியின் மரணம் எம்ஜிஆர் விசுவாசிகளிடையே ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leelavathi, who donated kidney to MGR, is no more

கமல் நலம் பெற வேண்டி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்த கட்சியினர்

கமல் நலம் பெற வேண்டி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்த கட்சியினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் அமெரிக்கா சென்று வந்த நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதன் காரணமாக, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே அவர் விரைவில் குணமாகி நலம் பெறவும் வீடு திரும்பவும் ரசிகர்கள் & கட்சியினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு அர்ச்சனை வழிபாடுகளை, அவரது கட்சியினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திருவொற்றியூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில், நேற்று சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

இதில் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர், பால்குடம் ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

கூடுதல் தகவல் : கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக இன்று நவம்பர் 26 மதியம் 2 மணிக்கு மருத்துவனை அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Fans wish Kamal Haasan a speedy recovery

காட்சிகளுக்கு இசையமைக்க மாட்டார் மரகதமணி.; RRR சென்னை விழாவில் உண்மையை உடைத்த ராஜமௌலி

காட்சிகளுக்கு இசையமைக்க மாட்டார் மரகதமணி.; RRR சென்னை விழாவில் உண்மையை உடைத்த ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா இணைந்து வழங்கும், இந்திய திரைத்துறையில் மொழி மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் இந்த வருடத்தின் மிகப்பிரமாண்ட படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம் ஆகும்.

பாகுபலி திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தில் இந்திய திரைத்துறையின் பல மொழிகளில் இருந்தும் பெரும் நட்டத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

பாலிவுட் நாயகி ஆலியா பட், நாயகன் அஜய் தேவ்கன், நடிகர் சமுத்திரகனி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன.

இன்று சென்னையில், இப்படத்தின் தமிழ் பதிப்பின், பிரமாண்ட விழாவில் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஆர் மால் PVRRR திரையரங்கில் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் இயக்குநர் S S ராஜமௌலி, Lyca Productions சார்பில் தமிழ்குமரன், தயாரிப்பாளர் NV பிரசாத், DVV Entertainment சார்பில் தயாரிப்பாளர் தானய்யா கலந்து கொண்டனர்.

*இவ்விழாவில் Lyca Productions சார்பில் தமிழ்குமரன் பேசியதாவது…

பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி உடன் எங்கள் நிறுவனம் இணைவது எங்களுக்கு பெருமை. உலகளவில் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கும் பிரமாண்ட படைப்பாக RRR இருக்கிறது. இது நட்பு ரீதியிலான சங்கமம். இன்னும் பல படைப்புகளில் இது தொடருமென நம்புகிறோம். நன்றி.

*DVV Entertainment சார்பில் தயாரிப்பாளர் தானய்யா பேசியதாவது…

இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இது எங்களுக்கு மிக முக்கியமான படைப்பு. உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென்று நம்புகிறோம், நன்றி.

*இயக்குநர் S S ராஜமௌலி பேசியதாவது…

சில வருடங்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. நீண்ட நாட்கள் கழித்து உங்களை சந்திப்பதற்கு மன்னிக்கவும். அடுத்த மாதம் எங்கள் மொத்தப் படக்குழுவினருடன் உங்களை மீண்டும் சந்திப்போம். அதற்கு மிகப்பெரிய அளவில் திட்டமிட்டிருக்கிறோம். அப்போது உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறோம்.

RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தில் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு ஆக்சன் காட்சிக்கு பின்னும் பெரிய எமோஷன் இருக்கும், அந்த எமோஷன் தான் படத்தின் உயிர்நாடி. அந்த எமோஷனை, ஆத்மாவை வெளிக்காட்டும் ஒரு இசை தான் உங்களுக்கு இன்று அறிமுகப்படுத்தும் உயிரே பாடல். அண்ணன் மரகதமணி அவர்கள் தான் இசையமைத்துள்ளார்.

அவர் எப்போதும் படத்தின் காட்சிகளுக்கு இசையமைக்க மாட்டார். படத்தின் உயிர் எதைப்பற்றியதோ, படம் என்ன சொல்ல வருகிறதோ அதற்கு தான் இசையமைப்பார். அப்படி RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தின் மொத்த ஆத்மாவையும் இந்த பாடலில் கொண்டு வந்திருக்கிறார்.

மதன் கார்கி இந்தப்பாடல் கேட்டபோதே கண்ணீர் சிந்தி ரசித்தார், அருமையான பாடல் வரிகளை தந்திருக்கிறார். இதை இன்னும் உலகிற்கு காட்டவில்லை, உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

*தொழில்நுட்ப குழு:*

திரைக்கதை, இயக்கம் – S S ராஜமௌலி
கதை – விஜயேந்திர பிரசாத்
வசனம் – கார்கி
இசை – MM மரகதமணி
ஒளிப்பதிவு – K K செந்தில்குமார்
படத்தொகுப்பு – ஶ்ரீகர் பிரசாத்
மக்கள் தொடர்பு – நிகில்

Director Rajamouli about music director Maragatha Mani

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரின் பாராட்டைப் பெற்ற ‘ஜெய் பீம்’ படக்குழு

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரின் பாராட்டைப் பெற்ற ‘ஜெய் பீம்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்தார். அவருடன் நடிகர் சூர்யா, சூர்யாவின் தந்தை சிவக்குமார், இயக்குநர் த.செ.ஞானவேலு, 2D நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோரும் படத்தைப் பார்த்தனர்.

முன்னதாக படத்தை (ஓடிடி) தொலைக்காட்சியில் பார்த்த நல்லக்கண்ணு, திரையில் காண விருப்பம் தெரிவித்திருந்தார்.

அதற்கேற்ப படத்தை என் எப் டி சியில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று வியாழக்கிழமை இரவு படத்தைத் திரையில் கண்டு ரசித்தார்.

படத்தைப் பார்த்துவிட்டு நல்லக்கண்ணு அவர்கள், நடிகர் சூர்யாவையும், படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் வெகுவாகப் பாராட்டினார்.

நடிகர் சூர்யாவின் கன்னத்தில் செல்லமாக வருடிக் கொடுத்து தனது பாராட்டை நல்லக்கண்ணு பதிவு செய்தார்.

தமிழகத்தில் 1990களில் நடந்த பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காண்போரின் சிந்தையைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ‘ஜெய் பீம்’.

நீதிபதி சந்துருவின் வழக்காடு பயணத்தில் இருந்து நிறையவே ஈர்க்கப்பட்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு வழக்கறிஞராக, நீதிபதியாக நீதியரசர் சந்துரு தனது கடமையைச் செய்ய, நீதியை நிலைநாட்டு தன் எல்லைகளைத் தாண்டியும் எப்படிப் போராடினர் என்பதற்கான சாட்சி ‘ஜெய் பீம்’.

இத்திரைப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார். படத்தில் சூர்யாவுடன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஃபிலோமின்ராஜ் எடிட்டராகவும், கலை இயக்குநராக கதிரும் பணியாற்றியுள்ளனர்.

நவம்பர் 2 ஆம் உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பிராந்தியங்களில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் பரவலாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் படத்திற்கு பாராட்டும், படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

அந்த வரிசையில், தற்போது ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் பாராட்டியுள்ளார்.

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரின் பாராட்டு, நடிகர் சூர்யாவையும் ஜெய்பீம் படக்குழுவினரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Veteran political leader Nallakannu has expressed his heartfelt appreciation to actor Suriya

ஆறு மொழிகளில் அசத்த வரும் ‘மட்டி’.; ஓடிடி ஆஃபரை ஒதுக்கி தள்ளிய தயாரிப்பாளர்

ஆறு மொழிகளில் அசத்த வரும் ‘மட்டி’.; ஓடிடி ஆஃபரை ஒதுக்கி தள்ளிய தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் முதன்முதலில் பிரமாண்ட அளவில் ஆறு மொழிப் படமாக உருவாகியிருக்கிறது ‘மட்டி ‘ (Muddy) திரைப்படம்.

இந்தியாவின் முதன்முதலாக கரடுமுரடான மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் டாக்டர் பிரகபல் இயக்கி உள்ளார்.

பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.குடும்பம், பகை, பழிவாங்கல் , ஆக்ஷன் திகில் என்று பல வண்ணங்களில் இப்படக்கதை சுற்றிச் சுழலும்.

‘கே ஜி.எப் ‘ போன்று இப்படம் ஒரு முழு மேக்கிங் ஸ்டைல் விசையுடனான விறுவிறுப்பைப் பார்ப்பவர்களிடம் உணரவைக்கும் .

‘கே ஜி.எப் ‘
படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘ராட்சசன்’ படப்புகழ் சான் லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். ‘புலி முருகன் ‘ புகழ் ஆர்.பி.பாலா இப்படத்திற்குத் தமிழில்
வசனம் எழுதி இருக்கிறார்.

யுவன் கிருஷ்ணா, ரிதன் , அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்கள் தவிர பல படங்களில் அறிமுகமான முகங்களும் இப் படத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகளில் உருவாகி இருக்கிறது .அந்தந்த மொழிகளுக்கும் தனித்தனியானதாக உருவாகி இருக்கிறது.

ஒவ்வொரு மொழிக்குமான பிரத்தியேகமான கலாச்சார பண்பாட்டுத் தன்மையோடு இப்படம் உருவாகியிருக்கிறது.

சினிமா மீது தாகமும் மோகமும் கொண்ட புதிய இளைஞர்களின் கூட்டணியில் ஐந்தாண்டு கால திட்டமிட்ட உழைப்பால் இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

இதில் வரும் ஜீப் பந்தயப் படப்பிடிப்புக்காக இரண்டு ஆண்டு காலம் திட்டமிட்டுப் பயிற்சி எடுத்துக்கொண்டு ஒத்திகை பார்த்து உருவாக்கி இருக்கிறார்கள்.

இதில் வரும் ஜீப் ரேஸ் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். டூப்புகள் எதுவும் கையாளாமல் அந்தக் காட்சிகள் உருவாகியிருக்கின்றன.
அதனால்தான் இந்தப் படத்தின் தகுதியறிந்து அந்தந்த மொழிகளில் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டிரைலர்களை வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்கள்.

தமிழில் விஜய் சேதுபதி, ஜெயம்ரவி , தெலுங்கில் அனில் ரவி புடி,
கன்னடத்தில் டாக்டர் சிவராஜ்குமார்,
இந்தியில் பாலிவுட் நட்சத்திரம் அர்ஜுன் கபூர்,மலையாளத்தில் பகத் பாசில், உன்னி முகுந்தன், அபர்ணா பாலமுரளி , ஆசிப் அலி ,சிஜுவில்சன் என்று திரைப் பிரபலங்கள் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு ஆதரவுக் கரம் கொடுத்துப் படத்தை மேலே கொண்டு சென்றுள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் டாக்டர் பிரகபல் பேசும்போது

“இந்தப் படம் திரையரங்கில் வெளியானால்தான் அதன் முழு ரசிப்பு அனுபவத்தையும் தர முடியும். அந்த அளவிற்கு இதில் சம்பந்தப்பட்ட காட்சிகள் அமைந்துள்ளன.

இதில் வரும் சாகச காட்சிகளை திரையரங்கில் ரசித்தால் தான் அதன் முழு விளைவையும் உணர முடியும். இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு நல்ல விலை கேட்டு வந்தும் பிகே 7கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணதாஸ் தருவதற்கு மறுத்து விட்டார் .

ஏன் என்றால் இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்த்தால் தான் உண்மையான திகிலான வீரியமான காட்சிகளின் அனுபவத்தினை உணர்ந்து ரசிக்க முடியும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எனவே அவர் ஓடிடியில் வெளியிடக் கொடுக்க மறுத்துவிட்டார்.

இந்தப்படத்தின் டிரைலர்கள் , மோஷன் போஸ்டர்கள் போன்றவை பெரிய அளவில் வெற்றி பெற்றன. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வெளியிட்டு உள்ளார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”என்கிறார்.

பல படங்களில் இடம் பெறாத கதை நிகழ்விடங்கள் படத்தில் வருகின்றன. வாகனங்கள் செல்லாத பல இடங்களில் இதன் படப்பிடிப்பு சிரமப்பட்டு நடந்திருக்கிறது.

அதற்காகப் பெரிய அளவில்
திட்டமும் பயிற்சியும் செயல் படுத்தப் பட்டிருக்கிறது.

இப்படத்தின் டிரைலர் மில்லியன் கணக்கில் ஹிட்டடித்து படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை
உயர்த்தி வைத்துள்ளது.

“ஒரு பரபரப்பான சாகசம் நிறைந்த திகிலான ஆக்சன் திரில்லர் அனுபவத்துக்குத் தயாராக இருங்கள்” என்று படக்குழு உத்தரவாதம் அளிக்கிறது.

சினிமா தாகம் உள்ள இளைஞர்களின் திறமைகள் இணைந்து இப்படத்தை முழு வீச்சோடு உருவாகியிருக்கிறது .இப்படம் டிசம்பர் 10 முதல் ஒரே நேரத்தில் 6 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது.

India’s first-ever mind-boggling 4×4 mud race film “MUDDY” with its worldwide theatrical release on December 10, 2021

தமிழகத்தில் ரூ 150 கோடி வசூலித்து 2வது இடத்தில் ‘அண்ணாத்த’..; ரஜினியை முந்திய நடிகர் யார்? என்ன படம்.?

தமிழகத்தில் ரூ 150 கோடி வசூலித்து 2வது இடத்தில் ‘அண்ணாத்த’..; ரஜினியை முந்திய நடிகர் யார்? என்ன படம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘அண்ணாத்த’ திரைப்படம் நவம்பர் 4ல் தீபாவளி அன்று தியேட்டர்களின் ரிலீசானது.

இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தனர்.

வெளியான இரண்டு நாட்களிலே அண்ணாத்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்து புதிய சாதனை நிகழ்த்தியது.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல அண்ணாத்த வசூல் குறைய ஆரம்பித்தது.

கனமழை காரணமாக சென்னை வெள்ளத்தில் மிதங்க தொடங்கியது.

மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை கொட்டியதால் திரையரங்குகளுக்கு மக்கள் வரவு குறையவே வசூலும் குறைந்தது.

தற்போது வரை 21 நாட்களை ஆன நிலையில் உலகம் முழுவதும் 230 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மட்டுமே அண்ணாத்த திரைப்படம் 150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன்படி அண்ணாத்த படம் 2வது இடத்தை பிடித்துள்ளது. அப்படி என்றால் ரஜினியை முந்தியது யார்? என்பதே தானே உங்கள் கேள்வி.

முதல் இடத்தில் இருக்கும் அந்த நடிகர் யார் தெரியுமா? அதுவும் ரஜினி தான் (அவரை முந்த யார் இருக்கா.?)

அந்த படம் எது.? லைகா ரஜினி – ஷங்கர் கூட்டணியில் வெளியான 2.0 படம் தான் அது.

Annaatthe Collection in Tamilnadu Crosses 150CR in just 3 weeks

More Articles
Follows