அரசியலில் லாரன்ஸ்; ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுடன் கூட்டணி

அரசியலில் லாரன்ஸ்; ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுடன் கூட்டணி

raghava lawrenceஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தமிழகம் முழுவதும் திரண்டனர்.

ஒரு வாரம் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்து கலந்து கொண்டார் லாரன்ஸ்.

போராட்டம் முடிவடையும் நாளில், அது போலீசாரால் கலவரமானது.

அதன்பின்னர் நடிகர் லாரன்ஸ் தமிழக முதல்வரை சந்தித்தார்.

இந்நிலையில் இச்சந்திப்பு குறித்தும், தன்னுடைய அடுத்த நடவடிக்கை குறித்தும் கூற பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஜல்லிக்கட்டு போராட்ட மாணவர்களுடன் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கவிருக்கிறோம்.

அந்த அமைப்புக்கு எந்த பெயரும் இதுவரை முடிவாகவில்லை.

அதையும் மாணவர்களே முடிவு செய்வார்கள்.

இந்த அமைப்பில் எந்த கட்சியை சார்ந்தவர்களும் இருக்க மாட்டார்கள்.

மேலும் அவர்கள் ஓட்டுக்காக பணம் வாங்க மாட்டார்கள் என்று உறுதியளித்த பின்னரே இந்த அமைப்பில் சேரலாம்.

இந்த அமைப்பு மருத்துவம் மற்றும் கல்விக்காக உதவும்,

சில நேரம் ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவானால், அதற்கான அவசியம் ஏற்பட்டால் நிச்சயம் மாணவர்களுடன் இணைந்து அரசியலுக்கு வருவேன்.

ஒவ்வொரு தொகுதியிலும் மாணவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்” என்று பேசினார்.

Lawrance will enter into Tamilnadu Politics with Students support

‘இளையராஜா-கமலுடன் பணியாற்ற முடியாது…’ – அமீர்

‘இளையராஜா-கமலுடன் பணியாற்ற முடியாது…’ – அமீர்

???????????????????????????எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள சத்ரியன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் படத்தின் நாயகி மஞ்சிமா மோகன் கலந்துக் கொள்ளவில்லை.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இயக்குனர் அமீர் பேசியதாவது…

சிவாஜி, பிரபுவை விட ஒரு படி ஆக்ஷனில் உயர்ந்து நிற்கிறார் விக்ரம்பிரபு. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

எனக்கு இளையராஜா மற்றும் கமலுடன் பணி புரிய ஆசை.

ஆனால் அவர்கள் சினிமா துறையில் அனைத்தையும் அறிந்தவர்கள்.

அவர்களுடன் வேலை செய்யும்போது என்னுடைய கருத்தை சொல்ல முடியாது.

எனவே அவர்களுடன் என்னால் பணியாற்ற முடியாது.

இங்கே பேசிய கவிஞர் சினேகன், வைரமுத்துவை தன் எதிரியாக குறிப்பிட்டார்.

என்னை வம்பில் மாட்டிவிட்டுள்ளார்.

ஏனென்றால் என்னுடைய சந்தனதேவன் படத்தில் அவர்கள் இருவரும் பணிபுரிகின்றனர்.

வேறுவழியில்லை. இரண்டு எதிரிகளையும் வேலை வாங்கவேண்டும்” என்றார்.

I cant work with Illayaraja and Kamalhassan says Director Ameer

ரஜினி-கமலுடன் நடித்த டிங்குக்கு இந்த நிலைமையா? (வீடியோ)

ரஜினி-கமலுடன் நடித்த டிங்குக்கு இந்த நிலைமையா? (வீடியோ)

kamal rajiniதமிழ் சினிமா உலகில் கிட்டதட்ட 35 வருடங்களாக நடிகராக பணியாற்றி வருபவர் டிங்கு.

தனது இரண்டு வயதிலேயே நடிக்கத் தொடங்கிய இவர் கமல், ரஜினி உள்ளிட்டவர்களுடனும் நடித்துள்ளார்.
அண்மைகாலமாக சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.

இவரும் இவரது நண்பர் ராபர்ட்டும் இணைந்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளனர்.

ஹரிஹர மகாதேவி என்ற படத்திற்கு பஜன ப்ப்பா பஜன ப்ப்பா என்ற பாடலுக்கு வரிகள் எழுதியள்ளனர்.

அந்த படத்திற்கு அமிரிஷ் என்பவரை இசையமைப்பாளராக கமிட் செய்துள்ளனர்.

ஆனால் சில காரணங்களாக அப்படம் தொடங்கப்படாமல் இருக்கவே, லாரன்ஸ் நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இசையமைக்கும் பணியை தொடர்ந்துள்ளார் அம்ரிஷ்.

அப்போது டிங்கு எழுதிய வரிகளையும் அந்த டியூனையும் இவர்களின் அனுமதியில்லாமல் லாரன்ஸ் படத்திற்கு பயன்படுத்தியுள்ளார்.

மேலும் மற்றொரு பாடலை பரத் நடித்த பொட்டு என்ற படத்திற்கு அம்ரிஷ் கொடுத்து விட்டார் எனவும் டிங்கு தெரிவித்துள்ளார்.

Acor Tinku Cheated by Music Director Amresh

டிங்குவின் அந்த கண்ணீர் பேட்டி வீடியோ பதிவு இதோ….

‘என்னோட எதிரியும் குருவும் வைரமுத்துதான்..’ கவிஞர் சினேகன்

‘என்னோட எதிரியும் குருவும் வைரமுத்துதான்..’ கவிஞர் சினேகன்

Lyricist Vairamuthu Snehanஎஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு. மஞ்சிமா மோகன் நடித்துள்ள படம் சத்ரியன்.

யுவன் இசையமைக்க, இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.

இதன் ஆடியோ வெளியீட்டு விழாவில் இப்படத்தின் பாடல் ஆசிரியர் சினேகன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது…

தமிழ் சினிமாவில் நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள். கிட்டதட்ட எல்லாருடனும் இணைந்து பணியாற்றி இருக்கிறார் வைரமுத்து.

ஆனால் என்னுடன் அவர் இதுவரை இணைந்து பணிபுரியவில்லை. அதை அவரே தவிர்த்து வருகிறாரா? தெரியவில்லை.

அவர் எனக்கு ஒரு வகையில் எதிரியாக தென்பட்டாலும், அவர்தான் எனக்கு ஆசான்.” என்று பரபரப்பாக பேசினார் சினேகன்.

Vairamuthu is my Guru also he is my enemy says Lyricist Snehan

அஜித்துக்கு பெருமை தேடித் தந்த அனிருத்

அஜித்துக்கு பெருமை தேடித் தந்த அனிருத்

Ajith Anirudhஅமராவதியில் தொடங்கி இன்று 57 படங்களில் நடித்து முடித்துவிட்டார் அஜித்.

இதுவரை அவர் இணையத்தில் செய்யாத சாதனையை தற்போது நிகழ்த்தியுள்ளார்.

இவரின் வேதாளம் படத்தில் ஆலுமா டோலுமா பாடலுக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்பாடல் வெளியான நாள்முதல் பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பியது.

இந்நிலையில் இப்பாடல் யூடியூப்பில் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் அஜித்துக்கு பெருமை தேடி தந்துள்ளார் அனிருத் என்று சொன்னால் அது மிகையல்ல.

Ajith Anirudh combination made record in Youtube by Aaluma Doluma Song

அட்லி இயக்கும் ‘விஜய் 61’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அட்லி இயக்கும் ‘விஜய் 61’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

vijay atleeவிஜய் நடிப்பில் வெளியான பைரவா படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனையடுத்து அட்லி இயக்க, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

இது அவரது 61வது படமாகும்.

இப்படத்தின் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது.

கிடைத்துள்ள தகவல்களின்படி கலைஞர்கள் விவரம் இதோ…

விஜய்யுடன் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், ஜோதிகா, வடிவேலு, கோவை சரளா, சத்யன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏஆர். ரஹ்மான் இசையை கவனிக்க, ஜிகே. விஷ்னு ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இந்த படத்தின் கதையை தெலுங்குப்பட இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியிருக்கிறார்.

கலைக்கு முத்துராஜ், படத்தொகுப்புக்கு ஆண்டனி எல் ரூபன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்படம் ஸ்ரீதேணான்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 1ஆம் தேதி இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

Vijay 61 movie cast and crew updates

More Articles
Follows