கபாலி சீக்ரெட்ஸை ஆந்திராவில் அவுட்டாக்கிய ரஞ்சித்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி வருகிற ஜீலை 15ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலாய் மொழிகளில் ஒரே நாளில் வெளியாகவிருப்பதால், படக்குழுவினர் இரவு பகல் பாராமல் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் தெலுங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குனர் ரஞ்சித்.

அப்போது கபாலி கதையின் ஒரு பகுதியை அவர் கூறினாராம்…

“சுதந்திர காலத்திற்கு முன்பு பிரிட்டிஷ் அரசாங்கம் மலேசியாவிற்கு தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை அழைத்து சென்றதாம்.

அங்குள்ள ரப்பர் தொழிற்சாலையில் இவர்களை வேலைக்கு அமர்த்தி கடுமையாக வேலை வாங்கியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த கபாலி புரட்சி செய்து, தன் மக்களை காப்பாற்ற போராடுகிறார். இந்த போராட்டமே இதன் மையக்கரு.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது ஆக்ஷன் படம் மட்டுமல்ல. சென்டிமெண்ட் நிறைந்த கதையம்சம் உள்ள படம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி.. வீ கேர் ஓகே; யு கேர் சமந்தா…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா.

இவர் நேற்று மதுரையில் நடைபெற்ற வீகேர் 32-வது கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

இவரது வருகைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் சமந்தாவை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர்.

இதனால் ரசிகர்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, விழா மேடை சரிந்தது.

விழாவை முடித்துக் கொண்டு சமந்தா உடனே சென்றுவிடுவார் என்பதால் யாரோ ஒரு நபர் சமந்தாவின் கார் டயரையும் பஞ்சராக்கி விட்டார்.

அதன்பின்னர் தடியடி நடத்திய போலீசார் கூட்டத்தை கலைத்து சமந்தாவை வேறு காரில் தங்கும் ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தனர்.

வீ கேர் இருக்கட்டும் சமந்தா. பர்ஸ்ட் யு கேர்.

அண்மையில் கூட ஐதராபாத்தில் உள்ள ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்கு சமந்தா சென்றபோது இதுபோன்ற மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘சிவாவும் பவர் ஸ்டாரும் ரீடேக் எடுக்க நானே காரணம்.’- காசி விஸ்வா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிர்ச்சி சிவா மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் இணைந்து நடித்துள்ள ‘அட்ரா மச்சான் விசிலு’ படம் ஜூலை-7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

கச்சேரி ஆரம்பம் புகழ் திரைவண்ணன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் தன் அனுபவம் குறித்து, இப்படத்தின் ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா தெரிவித்துள்ளதாவது..

“நானும் திரைவண்ணனும் நல்ல நண்பர்கள். ‘கச்சேரி ஆரம்பம்’ படத்தில் இணைந்து பணியாற்ற முடியாமல் போனதால், இப்படத்திற்கு முன்பே திட்டமிட்டோம்.

தயாரிப்பாளர் கோபி நாங்கள் கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்தார்.

சென்னை, மதுரை பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் சுமார் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.

சிவாவும் பவர்ஸ்டாரும் ஸ்பாட்டில் இருந்தாலே ஒரே கலாட்டாவாக இருக்கும். இருவரும் சேர்ந்து நடிக்கும் போது என்னை அறியாமலேயே சிரித்துவிடுவேன்.

அப்போது கேமரா ஷேக்காகி விடும். என்னாலேயே சிலமுறை ரீடேக் எடுக்கும் சூழ்நிலையும் உருவானது.

டான்ஸ் என்றால் சிவா கொஞ்சம் கூச்சப்படுவார். ஆனால் அவரை தைரியப்படுத்தி டான்ஸ் ஆடவைத்துள்ளோம்.

பவர்ஸ்டார் டான்சும் பட்டையை கிளப்பும்.

இயக்குனர் திரைவண்ணனை பொறுத்தவரை தான் நினைத்ததை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளார். அதற்கு நான் உறுதுணையாக இருந்து இருக்கிறேன் என்பதை உறுதியாக சொல்வேன்.

ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இந்தப்படம் அமையும்” என்றார் காசி விஸ்வா.

‘அப்பா’ படம் உருவாக காரணம் என்ன..? சமுத்திரக்கனி நெகிழ்ச்சி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரக்கனி எழுதி, இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம் அப்பா.

இவருடன் தம்பி ராமையா, நமோ நாராயணன் மற்றும் பள்ளிக் குழந்தைகள் பலரும் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வருகிற ஜீலை 1ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

இப்படம் குறித்து சமுத்திரக்கனி கூறியுள்ளதாவது…

“இதில் நிறைய அப்பாக்களை பற்றி கூறியிருக்கிறேன். தன் மகனின் ஆசையை தானாகவே தெரிந்து கொண்டு நிறைவேற்றும் ஒரு அப்பா.

குழந்தை பிறந்தது முதல் படிப்பு, திருமணம் வரை திட்டமிடும் ஒரு அப்பா.

மகனே உனக்கு என்ன தோனுதோ அதை செய்யிடா என்று சொல்லும் ஒரு அப்பா என அப்பாக்களை காட்டியுள்ளேன்.

+2 தேர்வில் 1040 மார்க் எடுத்தும் தைரியலட்சுமி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அந்த செய்தியை படித்த முதல் 3 நாட்கள் என்னால் மீளமுடியவில்லை.

எனவே அன்றுமுதல், நான் பத்தாம்வகுப்பு, +2 தேர்வு முடிவுகள் வந்தால் சிலநாட்களுக்கு பேப்பர் படிப்பதில்லை.

அதன்பின்னர் என் உதவியாளர்களை களப்பணியாற்றி இதுபோன்ற எல்லாம் தகவல்களையும் சேகரிக்க சொன்னேன்.

நானும் குழந்தைகள் பற்றிய செய்திகளை சேகரித்தேன். இந்தியாவில் தற்கொலையில் தமிழ்நாடுதான் முதலிடம் என அப்போது தெரிய வந்தது.

எனவே 3 வருடங்களாக இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கினேன். இப்படத்திற்கு பாடல்கள் தேவைப்படவில்லை.

குழந்தைகளிடத்தில் குறையில்லை. அவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்வி முறையில் தான் பிரச்சினை உள்ளது. அதில் மாற்றம் செய்ய வேண்டும்.

இப்படத்தை திரைப்பட விழாக்களுக்கும் அனுப்ப இருக்கிறேன்.”

இவ்வாறு தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி.

ரஜினிக்கு அடுத்து சூர்யாதான்… கன்பார்ம் செய்த கபாலி இயக்குனர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை இயக்கியவர் ரஞ்சித்.

எனவே, இதனைத் தொடர்ந்து ரஞ்சித்துக்கு கால்ஷீட் கொடுத்தார் சூர்யா.

ஆனால் ரஜினியின் கபாலி வாய்ப்பு ரஞ்சித்துக்கே வரவே, ரஜினி பட வாய்ப்பை விட வேண்டாம் என சூர்யாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் கேட்டுக் கொண்டார்களாம்.

தற்போது கபாலி ரிலீசுக்கு ரெடியாகிவிட்ட நிலையில், சூர்யா படத்தை கையில் எடுக்க இருக்கிறாராம் ரஞ்சித்.

ஹரி இயக்கும் சிங்கம் 3 படத்தை அக்டோபரில் முடித்துவிட்டு ரஞ்சித் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என தெரிய வந்துள்ளது.

‘காக்கா முட்டை’க்கு பிறகு நல்ல படங்கள் இல்லை’ – வசந்தபாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள படம் ‘பகிரி’.

இன்றைய ட்ரெண்டான வாட்ஸ்அப்பை மையமாக கொண்டு விவசாயத்தை பற்றி அலசி ஆராய்ந்துள்ள இப்படத்திற்கு கருணாஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார்.

இப்படத்தின் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் நடிகை நமீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் பேசியதாவது…

“செருப்பு தைக்கிற தொழிலை கேவலமாக பார்த்த பலர் இன்று பணத்திற்காக அத்தொழிலை செய்கின்றனர்.

ஆனால் விவசாயம் செய்யதான் இங்கே யாரும் இல்லை.

‘இந்தப் பிழைப்பு எங்களோடு போகட்டும்மய்யா.. நீ பட்டனம் போய் செட்டிலாகு என தங்களை பிள்ளைகளை விவசாயிகளே வெளியூறுக்கு அனுப்பி வைக்கும் நிலைமை உள்ளது.

சமூகம் சார்ந்த ஒருவன் ஒருவன் என்னவாக வேண்டும் என்கிற அந்தப் போராட்டமே இந்த ‘பகிரி’ படம்” என்றார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் வசந்தபாலன் பேசியதாவது….

“இந்த ‘பகிரி’ என்கிற பெயரே பிடித்திருந்தது. ஆங்கில வார்த்தைகளுக்கெல்லாம் தமிழில் மாற்றுச் சொல் தேடாமல் அப்படியே பயன்படுத்தி வருகிறோம்.

கம்ப்யூட்டர் என்ற சொல் கணிப்பொறி ஆனது. அதன்பின்னர் அழகாக கணினி என்று மாறியது.

நான் ‘அங்காடித் தெரு’ என்று தலைப்பு வைத்த போது பலருக்கும் புரியவில்லை. சிலர் அங்கன் வாடியா என்றுகூட கேட்டார்கள்.

ஆனால் அது சட்ட சபையிலேயே பேசப்பட்டது. தற்போது பாண்டி பஜாருக்கு என்பது சௌந்தரபாண்டியன் அங்காடி எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

நான் என் படத்திற்கு ‘வெயில் ‘ என்று தலைப்பு வைத்தபோது கூட ஷங்கர் சார் வேண்டாம் என்றார். பின்னர்தான் ஒத்துக் கொண்டார்.

ஒரு படைப்பாளி பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல நல்ல செய்தி உள்ள படத்தையும் கொடுக்க வேண்டும்.

இப்போது மராத்தி, கன்னடத்தில் நல்ல படங்கள் வருகின்றன. எப்போதாவது இங்கே நல்ல படங்கள் வருகின்றன.

‘காக்கா முட்டை’ க்குப் பிறகு எதுவும் வரவில்லை. எல்லாமே கூமுட்டைகளாகவே இருக்கின்றன.

விவசாயத்தைப் போலவே தமிழ்ச் சினிமாவும் நொறுங்கிக் கொண்டு இருக்கிறது. பத்து ஹீரோக்கள் நடித்த படங்கள் தவிர மற்றவை ஓடுவதில்லை.

விவசாயம் என்பது ஒரு சாதி. ஆனால் அது இன்று அழிந்து வருகிறது.

ஜவஹர்லால் நேரு நம், இந்தியாவை விவசாய நாடாக்குவதற்கு பதிலாக தொழிற்சாலையாக மாற்ற நினைத்தாரோ அன்றே விவசாயம் இறந்துவிட்டது.

கோ கோ கோலா 1 லிட்டர் தயாரிக்க 12 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. என்னதான் கண்டு பிடித்தாலும் தண்ணீரை யாரும் கண்டுபிடிக்க முடியாது. ‘ஹெச் 2ஓ ‘ வை யாராலும் உருவாக்கிட முடியாது.

விவசாய நிலங்கள் அடுக்குமாடிக் கட்டிடங்களாகின்றன. காரை இறக்குமதி செய்யலாம். அரிசியை இறக்குமதி செய்யலாமா?

பிரதமர் மோடி நாடு நாடாகப் சென்று தொழில் தொடங்க இந்தியா வாருங்கள் என்கிறார். இன்னும் 20 ஆண்டுகளில் உணவுக்காகக் கையேந்தும் நிலை வரும்.

சேரன் போன்ற கலைஞர்களை கண்ணீர் விட்டுக் கெஞ்சிக் கதற வைக்கிறது. நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற கனவுடன் சினிமாவுக்கு வந்தோம். ஆனால் அந்தக் கனவு நொறுங்கி கொண்டிருக்கிறது” என்று பேசினார்.

முன்னதாக புதிதாகத் தேர்வான தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியனின் நிர்வாகிகள் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் A.ஜான், பொருளாளர் விஜய முரளி, துணைத்தலைவர் வி.கே. சுந்தர், இணைச்செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ‘பகிரி’ படக் குழுவின் சார்பில் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர்.

More Articles
Follows