மறைந்த நடிகர் சேதுவுக்கு ஆண் குழந்தை பிறந்தது..; குட்டி சேது வந்திருப்பதாக மனைவி உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் சேது என்ற சேதுராமன்.

இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் ஒரு டாக்டர்.

Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை சென்னையில் நடத்தி வந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு உமையாள் என்பவரை சேது திருமணம் செய்தார்.

இத்தம்பதிக்கு சஹானா என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த 2020 மார்ச் மாதம் 26-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 36.

சேது மரணமடையும் போது அவரது மனைவி 5 மாதம் கர்ப்பமாக இருந்தார்.

தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தங்கள் குடும்பத்தில் மீண்டும் சேதுராமனே குட்டி சேதுவாக வந்திருப்பதாக குடும்பத்தினர் உருக்கத்துடன் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் சிட்டி ரோபோவை தனுஷுடன் கம்பேர் செய்த ‘ஜகமே தந்திரம்’ நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மே மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளிப் போய் உள்ளது.

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ரகிட ரகிட’ என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சில நெகட்டிவ் மீம்ஸ் & விமர்சனங்களும் வந்தன.

இந்தப் படத்தில் சுருளி என்ற தனுஷ் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக சஞ்சனா நடராஜன் நடித்துள்ளார்.

சஞ்சனாவின் அண்மை பேட்டியில்…

நான் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். முதல் நாள் ஷூட்டிங்கில் பதட்டமாக இருந்தேன்.

தனுஷ் நடிப்பை நாள் முழுவதும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

எத்தனை டேக் என்றாலும் அதே எனர்ஜியுடன் இருக்கிறார்.

அவர் சிட்டி ரோபோ மாதிரி. கேரக்டருக்காக எதையும் எளிதில் உள்வாங்கிக் கொள்கிறார்” என கூறியுள்ளார்.

சென்னைக்கு வருவோர் தங்கள் ஆபிஸ் மூலமாக இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம்.; முக்கியமான கன்டிசன் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது.

கடந்த ஓரிரு மாதங்களாக ஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெற நிறைய சிரமங்கள் உள்ளது.

குறிப்பாக சென்னை நகரில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற ஊழியர்கள் மீண்டும் சென்னை வர இ-பாஸ் பெற வேண்டும்.

முக்கியமாக பஸ் போக்குவரத்து வசதி தேவைப்படுகிறது.

சிலர் கொரோனா தொற்று பயம் காரணமாக கார் & பைக் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பயணிக்க விரும்புகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கூறியதாவது…

கொரோனா தொற்று தற்போமைய சூழலில் முழு தளர்வு என்பதற்கு வாய்ப்பில்லை.

சென்னைக்கு வருவதற்கான இ-பாஸ் வழங்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை.

வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் தொழிலாளர்கள், தாங்கள் பணியாற்றும் நிறுவனங்கள் மூலமாக இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்.

பணியாளர்கள் சென்னைக்கு வந்ததும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வசதிகளை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் செய்து கொடுத்தால்தான் இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்” என கூறினர்.

பெற்றோரே சத்துணவு முட்டையை வாங்கி கொள்ளலாம்..; நாப்கின் எப்படி கொடுப்பீங்க..? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக நாடெங்கிலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

எனவே தமிழக பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படாமல் உள்ள முட்டைகளை அவர்களின் பெற்றோர் மூலமாக வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு மெட்ராஸ் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், மாணவர்களை தினமும் பள்ளிகளுக்கு அழைத்து முட்டை வழங்குவது பாதுகாப்பாக இருக்காது.

எனவும், முட்டை கொள்முதல் செய்வதிலும் சில இடர்பாடுகள் இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கிவந்த முட்டைகள் ஊரடங்கால் தடைபட்டு விடக்கூடாது என்பதால் மாணவர்களுக்கு அரசு தொடர்ந்து முட்டை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர் நீதிபதிகள்.

அதன்படி மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகள் வழங்கலாம் என தெரிவித்தனர்.

முட்டைகளை தினம்தோறும் வழங்குவதா, வாரம்தோறும் மொத்தமாக வழங்குவதா போன்றவற்றை அரசே முடிவெடுத்துக்கொள்ளலாம்.

மாணவிகளுக்கு சானிடரி நாப்கின் எப்படி வழங்குவது? என்பதையும் அரசு திட்டமிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நண்பர்கள் தினத்தை கொண்டாடிய விஜய்..; தளபதிக்கு தங்க மனசு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நண்பர்கள் தினம் நேற்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் நண்பர்கள் வெளியில் செல்ல முடியவில்லை.

இந்த நிலையில் நடிகர் விஜய் தனது சிறு வயது நண்பர்களுடன் நேற்று வீடியோ காலில் பேசியுள்ளார்.

சஞ்சீவ், ஸ்ரீநாத், ராம்குமார், மனோஜ் உள்ளிட்ட அனைவருடனும் வீடியோ கால் மூலமாக நண்பர் தினத்தை கொண்டாடி உள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி திட்டத்திற்கு முதல்வர் எதிர்ப்பு..; ஸ்டாலின் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விடுத்துள்ள அறிக்கையில்…

தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே தொடரும்… புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி திட்டத்தை சேர்த்திருப்பது வேதனை அளிக்கிறது என கூறியிருந்தார்.

இந்த நிலையில், முதல்வரின் அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

#NEP2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள @CMOTamilNaduவுக்கு நன்றி!

மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம்.

அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்!

இவ்வாறு முதல்வருக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More Articles
Follows