ரஜினி நடிக்கும் புதிய படத்தின் சூட்டிங் ஆரம்பம்?

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் சூட்டிங் ஆரம்பம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு ரஜினி மகள் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் “லால் சலாம்” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்குகிறது. விஷ்ணு விஷால் – விக்ராந்த் நடிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கிறார். லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இன்று ஹோலி பண்டிகை என்பதால் படக்குழு புதிய போஸ்டரை வெளியீட்டு இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

Lal Salaam shoot commences today on the auspicious occasion of Holi

மீண்டும் இணையும் சார்பட்டா பரம்பரை கூட்டணி ;அதிகார பூர்வ அறிவிப்பு!

மீண்டும் இணையும் சார்பட்டா பரம்பரை கூட்டணி ;அதிகார பூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. பாக்ஸிங் கதையை மையபடுத்தி உருவான இது நேரடியாக OTT இல் வெளியிடப்பட்டது. திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்தால் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்.

இந்நிலையில் ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்தின் தொடர்ச்சியை ஆர்யா அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் ஒரு புதிய போஸ்டருடன் அறிவித்தார், “ரோசமான ஆங்கில குத்துச்சண்டை போட்டியின் சுற்று 2 ஐக் காண நீங்கள் தயாரா?”.இரண்டாம் பாகத்தை ரஞ்சித் – ஆர்யா இணைந்து தயாரிக்கின்றனர்.

Arya and Pa. Ranjith’s ‘Sarpatta Parambarai 2’ official announcement is here

வாழ வழியில்லாத விஜயகாந்த் – விக்ரம் பட தயாரிப்பாளர்.; சூர்யா ரூ. 2 லட்சம் உதவி.; ரஜினி கவனிப்பாரா.?

வாழ வழியில்லாத விஜயகாந்த் – விக்ரம் பட தயாரிப்பாளர்.; சூர்யா ரூ. 2 லட்சம் உதவி.; ரஜினி கவனிப்பாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகாந்த் நடித்த ‘கஜேந்திரா’ மற்றும் விக்ரம் & சூர்யா இணைந்து நடித்த ‘பிதாமகன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை.

இவர் ரஜினி தயாரித்து நடித்த ‘பாபா’ படத்திலும் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் இவர் தற்போது தனது மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

மேலும் நண்பர்கள் மற்றும் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் தனக்கு உதவி செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது வீடியோவை அவரது நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உதவி கேட்டுள்ளனர்.

இது குறித்த வீடியோவும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் வி.ஏ.துரை நிலையை அறிந்து நடிகர் சூர்யா அவரது சிகிச்சைக்காக ரூபாய் 2 லட்சம் வழங்கி உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Producer Durai in critical condition Suriya help

‘கஸ்டடி’ படத்துக்கு டப்பிங் பேச ஆரம்பித்த நாக சைதன்யா

‘கஸ்டடி’ படத்துக்கு டப்பிங் பேச ஆரம்பித்த நாக சைதன்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் கிருத்தி ஷெட்டி நடித்துள்ள படம் ‘கஸ்டடி’.

இப்படத்தில் அரவிந்த் சாமி, பிரியாமணி, ராம்கி, சம்பத் ராஜ், சரத்குமார், பிரேம்ஜி, வெண்ணெலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரித்துள்ளார்.

கஸ்டடி

இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இசையமைத்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில், நடிகர் நாக சைதன்யா இப்படத்தில் தனது பகுதிக்கு டப்பிங் பேசத் தொடங்கியுள்ளார்.

மேலும், ‘கஸ்டடி’ படத்தை மே 12, 2023 அன்று திரைக்கு வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

கஸ்டடி

Naga Chaitanya begins dubbing for ‘Custody’

AK 62 அப்டேட் கேட்டா அஜித் பைக் டூர் டைட்டில் கிடைச்சிருக்கே..!

AK 62 அப்டேட் கேட்டா அஜித் பைக் டூர் டைட்டில் கிடைச்சிருக்கே..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியானது.

இதற்கு முன்பே அஜித் நடிக்கும் AK 62 படத்தின் அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டு பின்னர் அவர் நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன.

எனவே அஜித்தின் அடுத்த பட படத்தை இயக்குபவர் யார்.? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

அஜித் 62 படத்தின் அப்டேட் பற்றி ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

சுரேஷ் சந்திரா

இந்த நிலையில் படத்தின் அறிவிப்பு பற்றிய தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் அஜித்தின் பைக் டூர் பற்றிய அறிவிப்பை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில்..

லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது.

அஜித்

Suresh Chandra reveals Ajith bike Tour title

பெரியார் & திருவள்ளுவர்.. மாட்டை வைத்து அரசியல் ஆட்டம்.; வைரலாகும் ‘பப்ளிக்’ சீன்ஸ்

பெரியார் & திருவள்ளுவர்.. மாட்டை வைத்து அரசியல் ஆட்டம்.; வைரலாகும் ‘பப்ளிக்’ சீன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.

விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக் பீக்கள் கவனத்தை ஈர்த்தன.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள “உருட்டு”, “உருட்டு” பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிங்காரவேலர், ரெட்டை மலை சீனிவாசன்,அயோத்திதாச பண்டிதர், நடேசனார், கக்கன், சத்தியமூர்த்தி, பாரதிதாசன், இளையபெருமாள், பட்டுகோட்டை அழகிரி, ஜீவா, நெடுஞ்செழியன், மூக்கையா தேவர், ராமமூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையார், காயிதேமில்லத் படங்களை வைத்து வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் பெரியார் படம் புறக்கணிக்கப்பட்டது குறித்து பெரும் விவாதம் எழுந்தது. சமுக ஊடகத்தில் இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

அதற்கு அடுத்து வெளி வந்த ஸ்னீக்பீக்ல் மாடே மாடே என்று மாட்டை வைத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை நக்கல் செய்யும் காட்சி புதுமையான , நையாண்டி தனமாகவும், அதே நேரத்தில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

அடுத்தாக வெளியான ஸ்னீக்பீக்ல் அரசியல் தலைவர் ஒருவர், தமிழே அறியாத ஒரு பெண்ணுக்கு தனது கட்சிப் பெயரை சொல்லித்தருவது போலவும், ‘கட்சி பெயரே சொல்ல வரலை.. எப்படி சீட் வாங்கித் தருவது’ என்று கேட்பது போலவும் ஒரு sneak பீக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதை தொடந்து வெளியான Sneak peak 3 வீடியோவில் திருக்குறள் எழுதுனது திருவள்ளுவரா? என்று இலக்கிய அணி பொறுப்புக்கு வரும் ஒருவர் கேட்கும் வீடியோ வெளியாகியது.

இன்றைய அரசியல் நிலையை காட்டுவது போல் அமைந்து இருந்தது. பெரும் வரவேற்பை பெற்றது.

வித்தியாசமான போஸ்டர்கள், sneak peak மூலம் கவனம் பெற்று வரும் பப்ளிக் படம். என்ன சொல்ல வருகிறது. எந்த அரசியலை பேச போகிறது என்கிற எதிர்பார்ப்பை எகிற செய்து உள்ளது.

இந்த நிலையில் தற்போது பப்ளிக் படத்தின் முதல் பாடலான “உருட்டு”,”உருட்டு” பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

யுகபாரதி எழுதயுள்ள “உருட்டு”,”உருட்டு” பாடல் அனைத்து அரசியல் கட்சிகளையும் பாரபட்சம் இல்லாமல் விமர்சனம் செய்து உள்ளது. இதில் உள்ள வரிகள் இன்றைய அரசியல் சூழ்நிலையை ஆழ்ந்த கருத்துகளுடன், தைரியமாக வெளிப்படுத்தி உள்ளது.

மக்கள் மத்தியில் “உருட்டு”, “உருட்டு” பாடலுக்கு வரவேற்பை பெற்றுதந்துள்ளது.

Uruttu uruttu lyric video from public goes viral

More Articles
Follows