மதத்தை வைச்சி தமிழ்நாட்டுல ஓட்டு வாங்க முடியல..; நயன்தாராவையும் அரசியல் பேச வைத்த ஆர்ஜே. பாலாஜி

மதத்தை வைச்சி தமிழ்நாட்டுல ஓட்டு வாங்க முடியல..; நயன்தாராவையும் அரசியல் பேச வைத்த ஆர்ஜே. பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகராக உருவெடுத்த ஆர்.ஜே.பாலாஜி தற்போது இயக்குனராகியிருக்கிறார்.

இவரும் என்.ஜே.சரவணன் என்பவரும் இணைந்து ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தை இயக்கியுள்ளனர்.

இதில் நயன்தாரா அம்மனாக நடிக்கிறார்.

இவர்களுடன் மவுலி, ஊர்வசி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் டிஸ்னிஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் இப்பட டிரைலரை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் படத்தை தயாரித்துள்ளார். எல்கேஜி டீம் இப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த டிரைலரில் நயன்தாரா மற்றும் பாலாஜியின் டைமிங் காமெடிகளும் செமயாய் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. கூடவே ஆன்லைன் க்ளாஸ் மற்றும் அரசியல் என அனைத்தையும் அலசியுள்ளனர்.

”கடவுள் இல்லை என்று சொல்பவன் ஓகே., ஆனால் ஒரு கடவுளை உயர்த்தி, மற்றொரு கடவுளை திட்டுபவன் ரொம்ப டேஞ்சர்” என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

”தமிழ்நாட்டுல மட்டும் தான் மதத்தை வைத்து இன்னும் ஓட்டு வாங்க முடியல, அடுத்த 5 வருஷத்துல அத மாத்தி காட்டுறேன்” என்று வில்லன் நடிகர் சொல்வது போல காட்சிகள் உள்ளன.

இந்த படம் சமகால அரசியலையும், போலி சாமியார்களை அம்பலப்படுத்தும் என நம்பலாம்.

ஆக.. நயன்தாரா அம்மனையும் அரசியல் பேச வைத்துவிட்டார் ஆர்ஜே. பாலாஜி.

Lady Super Star Nayanthara and RJ Balaji take potshots at religious politics

பாண்டிராஜ் இயக்கும் சூர்யா-40.; அறிவிப்பை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்

பாண்டிராஜ் இயக்கும் சூர்யா-40.; அறிவிப்பை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரித்து நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் ஓடிடியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இதன்பின்னர் கலைப்புலி தானு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இதற்காக நீண்ட தலைமுடியை வளர்த்து வருகிறார். நேற்றைய ‘சூரரைப் போற்று’ படம் தொடர்பான வீடியோவில் கூட அந்த ஹேர் ஸ்டைலை காண் முடிந்தது.

இந்நிலையில் சூர்யாவின் அடுத்தப்பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அக்டோபர் 25ஆம் தேதி மாலை வெளியிட்டுள்ளது.

சூர்யாவின் 40வது படமாக உருவாகவுள்ள படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.

Suriya 40 to be directed by Pandiraj and produced by Sun Pictures

suriya 40

பாஜக.வில் இணைகிறாரா? எப்போது..? என்ன சொல்கிறார் நடிகை வனிதா.?

பாஜக.வில் இணைகிறாரா? எப்போது..? என்ன சொல்கிறார் நடிகை வனிதா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vanitha vijayakumarகொரோனா ஊரடங்கு சமயத்தில் அதாவது கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை தன் மகள்கள் முன்னிலையில் 3வதாக திருமணம் செய்துக் கொண்டார் நடிகை வனிதா.

விவாகரத்து ஆகாத பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதால் நிறைய புகார்கள் மற்றும் வழக்குளை சந்தித்தார் வனிதா.

நடிகை கஸ்தூரி, புரொடியூசர் ரவீந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரின் கண்டனங்களை எதிர்கொண்டார்.

அண்மையில் கோவாவுக்கு ஹனிமூன் சென்று வந்த வனிதா தன் 3வது கணவர் பீட்டர் குறித்து குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.

அவரை நம்பி ஏமாந்துவிட்டேன் என பகிரங்கமாக வீடியோ வெளியிட்டார்.

இந்த நிலையில் நடிகை வனிதா பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து அவர் பேசும்போது…

பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன். இப்போது அது பற்றி எதுவும் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

அவர் சொல்வதை பார்த்தால் விரைவில் இணைவார் என்றே தெரிகிறது. ஆனால் எப்போது? என்பது மட்டும் தான் கேள்வியாகவுள்ளது.

நடிகைகள் நமீதா, காயத்ரி ரகுராம், குஷ்பு பாஜக.வில் அண்மையில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Vanitha Vijayakumar to join BJP ?

ஜப்பான் நாட்டின் ‘ஓசகா சர்வதேச தமிழ் திரைப்படவிழா’வில் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘சில்லுக் கருப்பட்டி’..!

ஜப்பான் நாட்டின் ‘ஓசகா சர்வதேச தமிழ் திரைப்படவிழா’வில் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘சில்லுக் கருப்பட்டி’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sillu Karuppattiசென்ற ஆண்டு தமிழில் வெளியான ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்று மக்களின் பாராட்டு மழையில் நனைந்து வந்த நிலையில் இப்போது ஜப்பான் நாட்டின் ஓசகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவிலும் சில்லுக் கருப்பட்டி திரைப்படம் தேர்ந்தெடுக்ப்பட்டது. வரும் நவம்பர் 1 ஆம் தேதி அங்கு திரையிடப்படுகிறது.

சமுத்திரக்கனி, மணிகண்டன், சுனைனா, நிவேதிதா சதீஷ், சாரா அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து இருந்த இந்த திரைப்படம் 4 வேறு காதல் கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கியிருந்த இந்த திரைப்படத்திற்கு வெளியானது முதல் இன்றுவரை பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில் இப்பொழுது மற்றுமொரு கௌரவம் இத்திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

#SilluKaruppatti has been Officially selected for screening & Nominated for the category Best Tamil Feature film of the year 2019 at @osaka_tamil Festival Nov 1 , 2020. Osaka City, Japan.

https://osakatamilfilmfestival.jp

மத்திய அரசு நிதி வழங்கினாலும் வழங்காவிட்டாலும் புதுச்சேரி மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. – நாராயணசாமி

மத்திய அரசு நிதி வழங்கினாலும் வழங்காவிட்டாலும் புதுச்சேரி மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. – நாராயணசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

narayana samyகாரைக்கால் மாவட்ட மீனவ கிராமங்களின் கடலோர பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மீனவர்கள் வலை பின்னும் கூடம் பல ஆண்டுகளாக சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது.

எனவே புதிதாக வலைபின்னல் கூடம் கட்டித்தரவேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதன்பேரில் உலக வங்கி நிதி உதவியுடன், திட்ட அமலாக்க முகமையினால் காரைக்கால் மண்டபத்தூர், அக்கம்பேட்டை, காளிக்குப்பம், கோட்டுச்சேரிமேடு கிளிஞ்சல்மேடு, காரைக்கால் மேடு, திரு-பட்டினம் பட்டினச்சேரி உள்ளிட்ட 8 கிராமங்களில் ரூ.20 கோடி செலவில் 10 மீனவர் பணிமனைகள் மற்றும் கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிமனைகள் திறப்பு விழா காரைக்கால் திரு-பட்டினத்தில் நடந்தது.

விழாவிற்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

“இந்த பணிமனைகளில் மீனவர்கள் தங்களது மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

மீனவர்களுக்கு காப்பீடு, மீன்பிடி தடைக்காலம் நிதி மற்றும் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை இந்த அரசு வழங்கி வருகிறது.

நாடு முழுவதும் அம்மை, போலியோ போன்ற பொதுவான நோய்களுக்கு எவ்வாறு தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டதோ, அதேபோல் அனைத்து மாநில மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போட வேண்டும்.

இதற்காக மத்திய அரசு நிதி வழங்கினாலும், வழங்கா விட்டாலும் புதுச்சேரி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை எங்கள் அரசும் இலவசமாக போடும்.”

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் கமலக்கண்ணன், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி., மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் சிங்காரவேல், சந்திரமோகன், கருணாநிதி, மதியழகன், டி.பிரபு, சிவகணேஷ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

Free Covid vaccine for all, announces Pondicherry CM Narayanasamy

இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள்.. மக்கள் உயிருடன் விளையாடாதீர்கள்.; ஆட்சியாளர்களுக்கு கமல் கண்டனம்

இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள்.. மக்கள் உயிருடன் விளையாடாதீர்கள்.; ஆட்சியாளர்களுக்கு கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanகொரோனா வைரஸ் பரவல் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை பயமுறுத்தி வருகிறது.

கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என முதல்வர் பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.

பிஹாரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

பாஜக வென்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக, மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில்…

நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர்.

எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர்.

இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள்.

ஐயா ஆட்சியாளர்களே…

தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து.

அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல.

மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்.

Vaccine Is Life-Saving Drug, Not A Sprinkling Promise says Kamal Haasan

More Articles
Follows