தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கலர்ஸ் டிவி என்ற தமிழ் சேனலின் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவுக்கு பெண் பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை நடிகை சங்கீதா தொகுத்து வழங்கி வருகிறார்.
இதில் 16 பெண் போட்டியாளர்கள் பங்கு பெற்று உள்ளனர்.
இதில் தேர்வாகும் ஒரு பெண்ணைத்தான் ஆர்யா தன் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்யப்போவதாக கூறப்படுகிறது.
அதில் பங்கு பெறும் பெண்களும் ஆர்யாவை கவர பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நடைபெறும் சூட்டிங்கில் கலந்து கொள்ள ஆர்யா சென்றிருந்தார்.
கும்பகோணம் கல்லூரி சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அவர் தங்கியிருந்தார்
இதுபற்றி தகவல் அறிந்த கும்பகோணம் துர்கா மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் அந்த ஓட்டலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்யா பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், தமிழக கலாசாரத்தை சீரழிப்பதாகவும் இருப்பதால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த பெண்கள் போராட்டத்தின் போது வலியுறுத்தினர்.
Ladies association oppose for Aryas Enga Veetu Maappillai show