கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ‘குதிரை வால்’

கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ‘குதிரை வால்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குதிரை வால்2018-ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார், இயக்குநர் பா. ரஞ்சித். அப்படம் அவ்வருடத்தின் சிறந்தப் படமாக கொண்டாடப்பட்டு விருதுகளைக் குவித்தது.

அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தையும் தயாரித்தார். அப்படமும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், கடந்த ஆண்டு தனது நீலம் புரடொக்‌ஷன் மூலம், மேலும் 5 படங்களை தயாரிப்பதாக அறிவித்தார்.

அதில், ஒன்றுதான் ’குதிரைவால்’. இப்படத்தை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்க, கலையரசன் – அஞ்சலி பாட்டில் நடித்துள்ளனர்.

இப்படத்தின், டீசர் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அறிவியல் புனைக்கதையில் அரசியல் வசனங்களும் இடம்பெற்று கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதியிலிருந்து 19 ஆம் தேதிவரை திருவனந்தபுரத்தில் கேரள அரசின் கலாசார விவகாரங்கள் துறையால் நடத்தப்படும் ’கேரள சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பிரிவில் திரையிட தேர்வாகியிருக்கிறது.

Kuthiraival selected for Kerala film festival

அரசியலுக்கு நல்ல மனிதர் தேவையில்லை..; ரஜினிக்கு விஜய் & அஜித் பட இயக்குனர் கடிதம்..!

அரசியலுக்கு நல்ல மனிதர் தேவையில்லை..; ரஜினிக்கு விஜய் & அஜித் பட இயக்குனர் கடிதம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director perarasuவிஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி…. அஜித் நடித்த திருப்பதி ஆகிய படங்களை இயக்கியவர் பேரரசு.

இந்த நிலையில் நடிகர் ரஜினிக்கு இயக்குனர் பேரரசு கடிதம் எழுதியுள்ளார்.

நீங்கள்
அரசியலுக்கு
வரவேண்டும்
என்று ஆசைப்பட்டோம்!
இன்று
அந்த ஆசையை
ஆலோசிக்கிறோம்!

நீங்கள்
ஆன்மீக அரசியல்
என்கிறீர்கள்!
தமிழ்நாட்டில்
அரசியல் அஸ்திவாரமே
இறை இழிவுதான்!

எளிமையான
நேர்மையான
அரசியல்
காமராஜரோடு
சமாதியாகிவிட்டது!

எம்ஜிஆர் என்ன நல்லாட்சியா கொடுத்தார்.?.; ரஜினி கமலை அடிக்கிற அடியில விஜய் உள்ளிட்ட எந்த நடிகருக்கும் அரசியல் ஆசை வராது.. – சீமான்

நீங்கள்
தமிழக விசுவாசத்தில்
சேவை செய்ய
ஆசைப்படுகிறீர்கள்
இங்கு
தமிழ்மொழி வேஷந்தான்
போற்றப்படுகிறது!

நீங்கள்
யார்மனதும் புண்படாமல்
பேசுபவர்!
ஆனால் இங்கே
விமர்சனம்
என்ற பெயரில்
உங்கள் மனசு
குத்திக் கிழிக்கிப்படுகிறது!

நல்லவர்கள்
அரசியலுக்கு வரவேண்டும்
என்று நினைத்தோம்!

அரசியலுக்கு வந்து
நல்லவர் அசிங்கப்படக்கூடாது
என்று
இன்று நினைக்கிறோம்!

ஒருசில கட்சிக்கு
சில கட்சிகளே
எதிர்ப்பாய் இருக்கும்,
இங்கு உங்களுக்கு
ஒட்டுமொத்த கட்சிகளும்
எதிரியாக கிளம்பிவிட்டது!
இதுவே
நீங்கள் அரசியலில்
வெற்றியடைந்ததற்கு அடையாளம்!

கட்சி ஆரம்பிக்காமலே
கோடானகோடி தமிழர்கள்
உங்களை
தலைவராக ஏற்று
‘தலைவா’ என்று
அழைக்கப்பட்டீர்
அதுவே எங்களுக்குப் போதும்!

இப்பொழுது
இங்கு
நல்ல அரசியல்வாதிதான் தேவை!
நல்ல மனிதரல்ல!

நீங்கள்
மனிதனை மனிதனாக மதிக்கும்
நல்ல மனிதர்!

ரசிகர்களின்
விருப்பத்தைவிட,
சிலரின் ஆசையைவிட
உங்களின் நிம்மதியும்,
உடல்நலமும் முக்கியம்!

அரசியல்
ஒரு சூழ்ச்சி சுழல்
இறங்குவதற்கு முன்
சிந்தியுங்கள்!
இயக்குனர் *பேரரசு*

Vijay and Ajith films hit director requests Rajinikanth

தமிழக முதல்வருடன் தளபதி சந்திப்பு..; விஜய் போடும் பக்கா ‘மாஸ்டர்’ ப்ளான்.!

தமிழக முதல்வருடன் தளபதி சந்திப்பு..; விஜய் போடும் பக்கா ‘மாஸ்டர்’ ப்ளான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

edappadi palanisamy vijayவிஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

லோகேஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவிருந்த மாஸ்டர் பட ரிலீஸ் கொரோனா ஊரடங்கால் காரணமாக தள்ளி கொண்டே போனது.

எனவே படத்தை 2021 பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளார் நடிகர் விஜய்.

அது வேற வாய்.. இது நாற வாய்.. ச்..ச்..சீமானை கண்டித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர்

இந்த சந்திப்பில் தியேட்டர்களில் தற்போது 50 சதவீதமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதை, 100 சதவீதமாக மாற்ற கோரிக்கை வைத்துள்ளாராம்.

இவர்களுடன் அமைச்சர் வேலுமணியும் உடன் இருந்துள்ளார்.

எனவே இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Vijay meeting with TN cm Edappadi Palanisamy

அடேங்கப்பா.. அரசு சேவைகள் அனைத்திலும் ஊழல்..; லஞ்சப் பட்டியலை வெளியிட்டார் கமல்

அடேங்கப்பா.. அரசு சேவைகள் அனைத்திலும் ஊழல்..; லஞ்சப் பட்டியலை வெளியிட்டார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanஅரசு அலுவலங்களில் பணம் கொடுத்தால் எதையும் சாதித்து விடலாம் என்பதே தற்போது வழக்கமாகி விட்டது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் சகஜமாகிவிட்டது. எனவே அரசியல்வாதிகள் போட்ட முதலீட்டை எடுப்பதிலேயே குறியாக உள்ளனர்.

அரசு அலுவலகத்தில் கேட்கவே வேண்டாம்.

பிறப்பு சான்றிதழ், ஓட்டுனர் உரிமை, மனைப் பட்டா தொடங்கி இறப்பு சான்றிதழ் வரை ஊழலில் ஊறிப்போயுள்ளது.

இந்த நிலையில் அரசின் ஒவ்வொரு சேவைக்கும் எவ்வளவு பணம் லஞ்சமாக பெறப்படுகிறது என்பதை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வெளியிட்டுள்ளார்.

அவரின் பதிவில்…

பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்களுக்கும், சேவைகளுக்கும் தமிழகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் லஞ்சப் பட்டியல் இது. மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? #நான்_கேட்பேன் https://t.co/hJLpQ1XG9s

MNM leader KamalHaasan releases a bribe card

Kamal Haasan

IMG_20201228_124555

‘பிக்பாஸ்’ வீட்டில் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி..; அனிதா அவுட் ஆனார்

‘பிக்பாஸ்’ வீட்டில் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி..; அனிதா அவுட் ஆனார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anitha evicted from Bigg Boss home and Bhoomi special showவிஜய் டிவியில் கமல்ஹாசன் வழங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.

தற்போது 80 நாட்களை கடந்துவிட்டது. கடந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் மீதமிருந்தவர்களில் ஷிவானி, கேப்ரியலா முதலில் காப்பாற்றப்பட்டனர்.

இதன் பின்னர் ஆஜித், அனிதா வெளியேற இருந்தனர். இறுதியில் அனிதா அவுட் ஆனார்.

அனிதா போட்டியில் இருந்து வெளியேறுவதாக கமல் அறிவித்தார்.

பிக்பாஸ் வீட்டில் கதறியழுத ‘கன்னுக்குட்டி’..; ஓவர் ப்லீஃங்கில் அனிதா கணவர்

இன்றைய நிகழ்ச்சியில் பூமி பட ஹீரோ ஜெயம் ரவி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

அதற்கான புரொமோஷன் நிகழ்ச்சியாக ரவி பங்கேற்றார். இத்துடன் பூமி பட டிரைலரும் திரையிடப்பட்டது.

அப்போது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி பார்ப்பீர்களா? என கமல் கேட்டார்.

அப்போது நீங்கள் எதை செய்தாலும் நான் பார்ப்பேன். ஏனென்றால் நான் வெறித்தனமான பக்தன் என கமலை பார்த்து சொன்னார் ஜெயம் ரவி.

Anitha evicted from Bigg Boss home and Bhoomi special show

ஓய்வு தேவை… மன அழுத்தம் கூடாது..; டிஸ்சார்ஜ் ஆனார் ரஜினிகாந்த்

ஓய்வு தேவை… மன அழுத்தம் கூடாது..; டிஸ்சார்ஜ் ஆனார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini discharged from hospital Doctors advised for complete restஇரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

அவரது உடல் நிலை நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்துள்ளதால் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில்.. ‘தீவிரமான உயர் ரத்த அழுத்தம் மற்றும் முழுச்சோர்வின் காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிரமான கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அவரின் ரத்த அழுத்தம் தற்போது சீராக உள்ளது. உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

தவறை ஒப்புக் கொள்ளும் சிறந்த ஆளுமை ரஜினிகாந்த்..; தனஞ்செயன் பாராட்டு

ரஜினிக்கு மருத்துவர்கள் வழங்கியுள்ள அறிவுரைகள் இதோ…

1. ஒரு வாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

2. மனஅழுத்தம் கூடாது. அதை தவிர்க்க வேண்டும்.

3. கொரோனா பாதிப்பு ஏற்படும் சூழல்களை தவிர்க்க வேண்டும்

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Rajini discharged from hospital Doctors advised for complete rest

More Articles
Follows