அமெரிக்கா ரிட்டர்ன் பெண்ணை காதலித்து மணக்கும் கும்கி அஸ்வின்

Kumki Ashwin and Vidyasree to get married on 24th June 2020ஆர்யா, சந்தானம் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் மொட்ட ராஜேந்திரனின் மகனாக நடித்திருந்தார் அஸ்வின் ராஜா.

அதன்பின் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும் கும்கி படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.

இதில் பிரபலமாக இவரை கும்கி அஸ்வின் என்றே அழைக்க தொடங்கினர் ரசிகர்கள்.

இவர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் வி சுவாமிநாதன் என்ற தயாரிப்பாளரின் மகன் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கலாம்.

இந்த நிலையில் வருகிற ஜீன் 24ஆம் தேதி அஸ்வினுக்கு திருமணம் நடக்கவுள்ளதாம்.

தன்னை 4 வருடமாக காதலிக்கும் வித்யா ஸ்ரீ என்ற பெண்ணை தான் மணக்கவுள்ளார்.

வித்யா ஸ்ரீ சென்னை கேகே நகரை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள்.

அவர் அமெரிக்காவில் எம்எஸ் படிப்பை முடித்துள்ளார்.

கொரோனா விதிமுறைகள் படி இந்த திருமணம் மிக எளிமையாக நடக்கவுள்ளதாம்.

Kumki Ashwin and Vidyasree to get married on 24th June 2020

Overall Rating : Not available

Latest Post