ஆதியுடன் இணைந்து பட்டைய கிளப்பும் ‘படையப்பா’ டைரக்டர்

KS Ravikumar plays comedy villain in Naan Sirithal moovieஅவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி வழங்கும் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி கதாநாயகனாக நடிக்கும், ‘நான் சிரித்தால்’ .

படத்தின் தலைப்பு போலவே இது ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம். ஆனால், எந்த நகைச்சுவையும் திணிக்கப்பட்டதாக இருக்காது. கதையோடு ஒன்றிய நகைச்சுவையாக இருக்கும்.

குடும்பத்துடன் பார்த்து ரசித்துவிட்டு, போகும்போதும் நகைச்சுவையைக் கொண்டு செல்லலாம். இரண்டு மணி நேரம் சிரித்தோம் என்பதைத் தாண்டி, மன நிறைவு தரும் வகையில் நகைச்சுவையோடு ஒரு நல்ல கருத்தையும் கூறியிருக்கிறோம்.

சென்னை மற்றும் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்.

ஹிப்பாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன், கே.ஸ். ரவிகுமார், முனீஸ்காந்த், ‘படவா’ கோபி, ரவி மரியா, பாண்டியராஜன், ஷாரா, ‘எரும சாணி’ விஜய், இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் ஒரு திடுக்கிடும் வகையில் இருக்கும்.

கே.எஸ்.ரவிகுமார் சார் வில்லனாக நடித்திருக்கிறார். வழக்கமாக வரும் வில்லனாக இல்லாமல் அனைவரும் ரசிக்கும்படியான வில்லனாகவும், சிரிக்கும் படியாகவும் இருப்பார். அவரும், கதாநாயகனும் சந்திக்கின்ற காட்சிகளில் நகைச்சுவை கலந்த ஒரு த்ரில் இருக்கும்.

இப்படத்தின் சிறப்பம்சம் சவாலான விஷயம் கதாநாயகன் சிரிக்கின்ற காட்சிகள் தான்.

ஏனென்றால், அவர் நிறைய இடங்களில் சிரித்துக்கொண்டே இருப்பார். அப்படி அவர் சிரிக்கும் போது காட்சிக்கு தகுந்தவாறு பார்வையாளர்களுக்கு சிரிப்பும், நகைச்சுவையும், பயமும், பரிதாபமும் ஏற்பட வேண்டும். இதற்கு கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தால் மட்டுமே இதை செய்ய முடியும்.

இதுவரை ‘ஹிப்ஹாப்’ ஆதி நடித்த இரண்டு படங்களிலேயே இந்தப் படத்தில்தான் கடின முயற்சி எடுத்து நடித்திருக்கிறார்.

இரண்டு படங்களிலும் அவர் அவராகவே நடித்திருப்பார். இந்தப் படத்தில்தான் வேறு ஒரு நபராக தன்னை மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார்.

பிப்ரவரி 14 ல் “நான் சிரித்தால்” வெளியீடு.

KS Ravikumar plays comedy villain in Naan Sirithal moovie

Overall Rating : Not available

Latest Post