மீண்டும் கிருஷ்ணா-பிந்துமாதவி இணைய கழுகு-2 இன்று ஆரம்பம்

மீண்டும் கிருஷ்ணா-பிந்துமாதவி இணைய கழுகு-2 இன்று ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Krishna and Bindu Madhavi again romance for Kazhugu2 Shoot begins todayசத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவி இணைந்து நடித்த படம் கழுகு.

யுவன் இசையமைத்திருந்த இப்படத்தில் கருணாஸ், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

சேகர் மதுபாலா இணைந்து தயாரித்த இந்த படம் கடந்த 2012ல் ரிலீஸானது.

தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு அதே கூட்டணி அப்படத்தின் 2ஆம் பாகத்தில் இணைந்துள்ளது.

கிருஷ்ணா, பிந்து மாதவி நடிக்க சத்யசிவா இயக்க, யுவன் இசையமைக்கிறார்.

இதன் 2ஆம் பாகத்தை திருப்பூர் பிஏ. கணேசன் தயாரிக்கிறார். இதன் சூட்டிங் இன்று முதல் ஆரம்பமாகிறது.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை விநியோகஸ்தர் சிங்காரவேலன் இப்போதே வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Krishna and Bindu Madhavi again romance for Kazhugu2 Shoot begins today

kazhugu

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு-வெங்கட் பிரபு புதிய கூட்டணி

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு-வெங்கட் பிரபு புதிய கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu Venkat Prabu teams up for Suresh Kamatchis new projectமணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து முடித்துவிட்டார் சிம்பு.

இதனையடுத்து திடீரென நான்கு படங்களை அறிவித்தார்.

தற்போது அதில் முதல் பட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். இது மங்காத்தாவே அல்லது பில்லாவே இல்லை. புதிய கதை என அவர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தை கங்காரு படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இவர் தற்போது ஸ்ரீபிரியங்கா நடிப்பில் மிக மிக அவசரம் என்ற படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

Simbu Venkat Prabu teams up for Suresh Kamatchis new project

பைரவா புரொடியூசருடன் இணையும் சிம்பு & கார்த்திக் நரேன்.?

பைரவா புரொடியூசருடன் இணையும் சிம்பு & கார்த்திக் நரேன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

strகடந்த சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன், வெங்கட் பிரபு சிம்புவை சந்தித்துள்ளனர்.

இவர்கள் கூட்டனியில் புதிய படம் உருவாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் துருவங்கள் 16 படத்தின் இயக்குநரான கார்த்திக் நரேனும் சிம்புவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் கார்த்திக் நரேன் சிம்புவிடம் கதை விவாதித்ததாக கூறப்படுகிறது.

இப்படத்தை பைரவா பட நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் போலீஸில் சிக்கிய ஜெய்.; கண்டித்து வீடியோ எடுத்து அனுப்பிய காவலர்கள்

மீண்டும் போலீஸில் சிக்கிய ஜெய்.; கண்டித்து வீடியோ எடுத்து அனுப்பிய காவலர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jaiநேற்று இரவு வேப்பேரி அருகே கார் ஒன்று அதிக இரைச்சலுடன் சென்றதை தொடர்ந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார், அந்த காரை வழிமறித்து நிறுத்தினர்.

அப்போது காரினுள் இருந்த நடிகர் ஜெய்யை கண்ட போலீசார், இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய நடிகர்களே இவ்வாறு விதிகளை மீறலாமா என அவரிடம் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து தனது தவறை ஒப்புக் கொண்ட ஜெய் இனி இப்படி செய்ய மாட்டேன் என போலீசாரிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நடிகர் ஜெய்யை வைத்துக் கொண்டே பள்ளிகள், மருத்துவமனைகளுக்குத் தொந்தரவாகவும், சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பாட்டில் சைலன்ஸரைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுரை வழங்கும் வீடியோவை போக்குவரத்து போலீசார் எடுத்தனர்.

பொதுவாக அதிக இரைச்சல் கொண்ட சைலன்சரை பயன்படுத்துவோரை காவல்துறையினர் பிடித்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவும் செய்வர்.

ஆனால் நடிகர் ஜெய் மீது இவ்வாறான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முன்னதாக கடந்த 2017 ஆண்டு செப்டம்பர் மாதம் மது போதையில் வாகனம் ஓட்டிய ஜெய் அடையாறு மேம்பாலத்தின் கீழே உள்ள சாலை தடுப்பில் மோதி விபத்தில் சிக்கினார்.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஜெய்க்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ஆஜரான ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை 6 மாத காலத்திற்கு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் இருந்தால் ஜெயலலிதா உடன் நடிச்சிருப்பேன்…- துரைமுருகன்

சினிமாவில் இருந்தால் ஜெயலலிதா உடன் நடிச்சிருப்பேன்…- துரைமுருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayalalitha and durai muruganகிராமிய கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை கோரிய
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்
துரைமுருகன் கிராமிய பாடல்களையும் பாடிக் காட்டினார்.

அப்போது அழகாக பாடும் நீங்கள் நாடகங்களில் நடித்து உண்டா என்ற சபாநாயகரின் கேள்விக்கு சிறு வயதில் நாடகங்களில் நடித்துள்ளதாக துரைமுருகன் தெரிவித்தார்.

ஷேக்ஸ்பியர் குறிப்பிட்டது போல் உலகமே நாடகமேடை என்றும் இங்கு அனைவரும் நடித்துக் கொண்டு இருக்கிறோம் என்றும் கூறிய துரைமுருகன், சபாநாயகரான நீங்களும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,அவையில் துரைமுருகன் நவரசங்கள் வெளிப்படும் விதமாக பேசுவதாக ஜெயலலிதா பாராட்டியதைக் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த துரைமுருகன் சினிமா துறைக்கு போயிருந்தால் ஜெயலலிதாவோடு நடிக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றார்.

இதை கேட்ட தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மேஜையை தட்டிசிரித்தனர்.

அதர்வா-நயன்தாரா கலந்துக் கொள்ளாத *இமைக்கா நொடிகள்* இசை விழா

அதர்வா-நயன்தாரா கலந்துக் கொள்ளாத *இமைக்கா நொடிகள்* இசை விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atharva and nayantharaடிமாண்டி காலனி’ படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’.

‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா என முக்கிய நட்சத்திரங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இந்த படத்தில் நயன்தாரா சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார்.

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப் குரூரமாக தொடர் கொலைகளை செய்யும் ‘ருத்ரா’ என்ற சைக்கோவாக நடிக்கிறார்.

அதர்வா மருத்துவ கல்லூரி மாணவராக நடிக்கிறார்.

இந்த படத்தின் கதையில் ட்விஸ்டை ஏற்படுத்தும் ஒரு கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதியும், நயன்தாராவும் கணவன், மனைவியாக நடித்துள்ளனர்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் 15 நிமிடங்கள் இடம்பெறுகிறது!

More Articles
Follows