வீர மரணமடைந்த பழனியின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்

வீர மரணமடைந்த பழனியின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kotapadi Rajesh announces Rs 5 Lakhs to Indian Soldier Pazhanis familyஉலகமே எதிர்பாரா தருணத்தில் இந்தியா – சீனா ராணுவ வீரர்களிடையே மோதல் வெடித்தது.

இந்த மோதலில் துப்பாக்கிகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும், கற்கள், இரும்பு ராடுகள் போன்றவற்றை பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி கற்கள் இரும்பு ராடுகளை கொண்டு வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தத கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான படை மீது சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இந்திய படையும் கற்களை கொண்டு எதிர்தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி, மற்றொரு வீரர் குண்டன் குமார் ஓஜா ஆகியோர் உயிரிழந்தனர்.

அதன்பின்னர் படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்த 17 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டது. ஆக பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் தமிழ் பட தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் வீரமரணமடைந்த பழனியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த நிறுவனம் நயன்தாரா நடித்த ஐரா, சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ, தற்போது நடித்துவரும் டாக்டர், அயலான் மற்றும் விஜய்சேதுபதியின் க.பெ/ரணசிங்கம் உள்ளிட்ட படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Kotapadi Rajesh announces Rs 5 Lakhs to Indian Soldier Pazhanis family

நண்பர்களை இழந்து நிற்கிறேன்.; கொரானாவை விரட்டுவோம்… சிம்பு உருக்கம்

நண்பர்களை இழந்து நிற்கிறேன்.; கொரானாவை விரட்டுவோம்… சிம்பு உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbus Condolence message for his 3 Cinema Industry friends உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், அன்பின் பொதுமக்களுக்கும் உங்கள் சிலம்பரசன் TR -இன் வணக்கங்கள்.

மிகுந்த துயரமான நாட்களாக இந்த சில நாட்கள் கடந்து போகின்றன… டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகிய மூவருமே எனது அன்பிற்குரிய நண்பர்கள். இவர்களது இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது.

சினிமாவிற்கான இழப்பாகப் பார்க்கிறேன். எனது நண்பர்களை இழந்துவிட்ட பேரிழப்பாகப் பார்க்கிறேன். இவர்களின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்.

இழப்பால் துயருறும் மூவரின் குடும்பத்திற்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஆறுதலும் அவர்களைத் தேற்றிவிடாது என்பதறிவேன். எனது கண்ணீரும் இதயமும் உங்களின் இந்த நிலையை மீட்டெடுக்க வேண்டிக் கொண்டே இருக்கும்.

இதேபோல் கொரானா காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸின் சத்தம். இறப்பின் கதறல்.

கொரானாவின் பாதிப்பில் மரணமடைந்த குடும்பத்திற்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தில் பேச்சுரா இசைப்புயலின் வேண்டுகோள் போல, அவரின் ரசிகர்களின் அபிமானத்தின்படி திரையரங்கில் வெளியாகி பெரு வெற்றி பெற வேண்டும். இறப்பு ஒரு கலைஞனின் வெற்றியை நிறுத்திவிடாது என்பதை உலகறியச் செய்ய திரையரங்கில் வெளியாகட்டும். எனது வேண்டுகோளும் ஆசையும் அதுவே.

இந்த நோயைக் கண்டு யாரும் திக்குற வேண்டாம். பேனிக்(Panic) ஆவதுதான் மிகப்பெரிய நோய்.

தைரியமாக எதிர்கொள்ளுங்கள். சுனாமி, காஜா புயல், என எத்தனையோ இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு வெற்றி கண்டோம்.

நிறைய பேரின் வீடுகள் ஆசை ஆசையாய் வாங்கிய கார்கள் நீரில் மூழ்கிப் போயின. மீண்டெழுந்தோம். திரும்ப நிமிர்ந்து உட்கார்ந்தோம்.

இந்தக் கொரானா நம்மை நமக்கு உதவிக்கொள்ள வழிவகுக்காமல் வீட்டில் முடக்கிப் போட்டுள்ளது.

நேரடியாக உதவி செய்ய முடியாது. ஆனால் ஒருவருக்கொருவர் தைரியம் சொல்லுங்கள்.

கிளவுஸ் முகக் கவசம் அணிந்து சமூகத்தில் பரவியுள்ள இந்தக் கொரானாவை இல்லாத நிலையை உருவாக்குவோம்.

மனதளவில் தளர்ந்துபோய்விட வேண்டாம். எதற்கும் தற்கொலை தீர்வாகாது. எந்த நிலையிலிருந்தும் நாம் எழுந்து நின்று விடலாம். வெற்றி பெற்றுவிடலாம் என்பதை உங்கள் மனதிலிருந்து நீக்கிவிடாதீர்கள்.

மனபலம் கொண்டு கொரானாவை விரட்டுவோம். (இம்யூன் பவரை) நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்வது முக்கியம். நாம் நம்மை இழந்துவிடக் கூடாது என்றால் தைரியம் கொள்வது மட்டுமே தீர்வு. எல்லோருக்கும் எல்லோரும் இருக்கிறோம் என்பதைச் சொல்லி சொல்லி மனக் குழப்பத்திலிருந்து வெளியிலெடுப்போம். அதுவே நாம் இப்போது செய்ய வேண்டிய முக்கியமான வேலை.

செய்வோம். இந்த இடரைத் தாண்டி நிலைபெற்று வெல்வோம்.

உங்களுடன் எப்போதும் தோள் நிற்கும்
உங்கள்
சிலம்பரசன் TR

Simbus Condolence message for his 3 Cinema Industry friends

SPINOFF ஜானரில் ஒரு தமிழ்ப்படம்..; சதீஷ் & கோகுல் இணையும் ‘கொரோனா குமார்’

SPINOFF ஜானரில் ஒரு தமிழ்ப்படம்..; சதீஷ் & கோகுல் இணையும் ‘கொரோனா குமார்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gokuls next titled Corona Kumar Produced by Sathish இன்று நம் தொலைபேசியில் யாருக்கு அழைத்தாலும் முதலில் வரும் எதிர்க்குரல் கொரோனா வைரஸ் பற்றியதுதான்.

நம்மில் பலர் இந்த காலகட்டத்தில் தான் ஒருவருக்கொருவர் தரும் அன்பும், ஆதரவும் நமக்கும் நம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சமூகத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்பதை உணரதொடங்கியுள்ளோம்.

நம் பலருடைய வாழ்க்கையில் இந்த கொரோனா வைரஸ் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விசயங்களை மையப்படுத்தி நகைச்சுவை ததும்ப, இயக்குநர் கோகுல் அவர்கள் புதிய படமொன்றை இயக்கவுள்ளார். தனது படத்துக்கு “கொரோனா குமார்” என்று பெயரிட்டுள்ளார்.

“ குமுதா ஹேப்பி அண்ணாச்சி” “மச்சி லவ் மேட்டர் பீல் ஆய்டாப்ள “ போன்ற காமெடி ட்ரெண்டிங் வசனங்கள் மூலம் இளைஞர்களை பரவசப்படுத்தி, வசன காமெடி மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கியவர் கோகுல்.

அடுத்ததாக அதே பாணியில் முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே பின்னணியாகக் கொண்டு கொரொனோவால் அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து இந்த படம் உருவாக உள்ளது.

கோகுல் அவர்கள் இதற்க்கு முன்னதாக ‘ரெளத்திரம்’, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’ ஆகிய படங்களையும் இயக்கியவர் என்பது நினைவுக் கூறத்தக்கது.

தற்போது மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஹெலன் ‘ தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார். கோகுலின் அடுத்தப் படமாக ‘கொரோனா குமார்’ திரைப்படம் உருவாகவுள்ளது.

’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் உள்ள சில முக்கிய கதாபாத்திரங்களை வைத்து ஒரு விஷயம் செய்ய முடிவெடுக்கும் போது, லாக் டவுன் அறிவித்துவிடுகிறார்கள்.

அதன் பின் நடக்கும் சுவாரசியங்கள், காமெடியாக சொல்லவுள்ளோம். இந்தப் படம் நல்லதொரு சமூக கருத்துள்ளதாகவும் இருக்கும் என்கிறார் இயக்குனர். இந்தக் காலகட்டத்தில் நாம் எங்கு சென்றாலும் சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது, தனிமைப்படுதுதல் என்று இனம்புரியாத பயத்தை உணர்கிறோம்.

கொரோனா வைரஸ் என்பது ஒரு தொற்று தான். ஆனால், அந்த கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமியால் நமது மக்களுக்குள்ளேயே சில தவறான புரிந்துணர்வும் வரத் தொடங்கிவிட்டது.

அந்த கிருமித் தொற்றுக்காக நம்முடைய மனிதத்தை எங்கும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது. இந்த மாதிரியான சம்பவங்களை எல்லாம் வைத்துத் தான் முழுக்க காமெடியாக, சமூகக் கருத்துடன் ‘கொரோனா குமார்’ உருவாகிறது.

இந்த திரைப்படம் ஹாலிவுட் அளவில் புகழ்பெற்ற SPINOFF ஜானரில் உருவாகும் முதல் தமிழ் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த படமும் ஊரடங்கு மற்றும் தனிமை காலங்களில் நடைபெறுகிறது. விரைவில் படக்குழு பற்றிய தகவல்கள் அறிவிக்கப்படும்.

ஊரடங்கு விலக்கப்பட்டதும் அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி உடனடியாக படப்பிடிப்பு தொடங்கவுள்ளது படக்குழு. பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைந்திருக்கும் இந்தப் படத்தை சினிமாவாலா பிக்சர்ஸ் K.சதீஷ் தயாரிக்கவுள்ளார்.

இதில் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்ற விவரத்தை விரைவில் அறிவிக்கவுள்ளார்கள். மனநெருக்கடி நிறைந்த இந்த காலகட்டத்தில் இந்த திரைப்படம் அதை போக்கும் விதமான தரமான நகைச்சுவை படமாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது.

Gokuls next titled Corona Kumar Produced by Sathish

பீட்டர் பாலுடன் ‘பிக்பாஸ்’ புகழ் வனிதாவின் 3வது திருமணம்

பீட்டர் பாலுடன் ‘பிக்பாஸ்’ புகழ் வனிதாவின் 3வது திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Vanitha Vijayakumar is getting married for 3rd timeதிரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் வனிதா.

தன் முதல் படத்திலேயே நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என சில மொழி படங்களில் நடித்தாலும் பெரிதாக வாய்ப்பு இல்லை.
பின்னர் நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து 2000 ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர்.

பிறகு இருவரும் விவாகரத்து பெற்றனர். சில வருடங்கள் கழித்து வனிதா 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். பின்னர் 2017ஆம் ஆண்டு இவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆனது.

தற்போது வனிதா தனது மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

அப்போது தான் நடன இயக்குனரும் நடிகருமான ராபர்ட் வனிதாவின் வாழ்வில் வந்தார். இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தனர்.

வனிதாவின் பெயரை ராபர்ட் அவரது கையில் பச்சை குத்திக் கொண்டிருந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சுமத்தி விட்டு பிரிந்தனர்.

இதனிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிக பிரபலமானார். தற்போது யூடியூப் பக்கம் ஒன்றைத் தொடங்கி, தனது சமையல் வீடியோக்களைப் பதிவேற்றி வருகிறார்.

தற்போது பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் வனிதா.
ஜூன் 27-ம் தேதி மாலை 4 மணியளவில் திருமணம் நடைபெறவுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் இந்தத் திருமணம் வீட்டிலேயே நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தன் 3வது திருமணம் பற்றி வனிதா கூறியதாவது…

வாழ்க்கையில் அனைவருக்கும் ஒரு ஒரு சூழல் கடந்து இருக்கும். எனக்கு என் வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அனைத்திலிருந்தும் மீண்டு வந்து கொண்டு இருக்கிறேன்.

ஆனால் அதே நேரத்தில் உண்மையான ஒரு அன்பு ஒரு கட்டத்தில் கிடைக்கும் வாய்ப்பும் கிடைக்கும். அப்படி எனக்கு கிடைத்த ஒரு உண்மையான அன்பு பீட்டர் பால்.

40 வயதை நெருங்கும் நான் இந்த மூன்றாவது திருமணத்தின் முடிவை நிறைய யோசித்து தான் எடுத்து இருக்கிறேன்.

இந்த முறை இந்த முடிவானது நான் மட்டுமே எடுக்காமல் எனது குழந்தைகளிடமும் கலந்து ஆலோசித்துவிட்டு தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.

எனது குழந்தைகளிடம் வருங்கால கணவர் இந்த திருமணம் குறித்து பேசியிருக்கிறார். இந்த திருமணம் அவர்களுடைய சம்மதத்துடனும் நடைபெற இருக்கிறது.

பீட்டர் பால் தமிழ் சினிமாவில் ஒரு இண்டிபெண்டன்ட் பிலிம் மேக்கராக இருக்கிறார். இந்த ஊரடங்கு காலத்தில் நிறைய யோசிப்பதற்கு நேரத்தை எடுத்துக் கொண்ட பிறகு தான் இந்த திருமண முடிவை எடுத்திருக்கிறாராம் வனிதா விஜயகுமார்.

Actress Vanitha Vijayakumar is getting married for 3rd time

அமைதியை விரும்புகிறோம்; ஆனால் உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண் போகாது… மோடி எச்சரிக்கை

அமைதியை விரும்புகிறோம்; ஆனால் உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண் போகாது… மோடி எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Modis reaction towards 20 soldiers killed in India China clash கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பொருளாதார மீட்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி 15 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட 15 மாநில முதல்வர்கள் (வீடியோ காலில்) கலந்துக் கொண்டனர்.

நேற்று 21 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் என்பதை பார்த்தோம்.

இந்த ஆலோசனைக்கு முன்னர் இந்தியா சீனா மோதலில் (லடாக் எல்லை) வீரமரணடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது…

இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றும், ஆனால் இந்தியாவுக்கு எதிராக எந்த நாடாவது அத்துமீறினால் தக்க பதிலடி கொடுப்போம்.

தங்கள் உரிமைகளில் சமரசம் செய்துகொள்ள முடியாது. நேரம் வரும்போது தங்கள் சக்தி மற்றும் வலிமையை காட்டுவோம் என பேசினார் மோடி.

மேலும் எல்லையில் உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண்போகாது. அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என நாட்டு மக்களுக்கு பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

Modis reaction towards 20 soldiers killed in India China clash

BOLLYWOOD POISON சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக சல்மான் கரண் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு

BOLLYWOOD POISON சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக சல்மான் கரண் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sushant Singh suicide Case filed against 8 people includes Salman Khan Karan Joharகிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தோனியாகவே வாழ்ந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

இவர் சில தினங்களுக்கு முன் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டார்.

அவரது மரணம் பாலிவுட் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் வாரிசு அரசியல், அதிகார துஷ்பிரயோகம் இவையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மேலும் சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாவிற்கு வருபவர்களை பிரபலங்களின் வாரிசுகள் நடத்தும் விதம் என பல்வேறு பிரச்சினைகளை தற்போது கிளப்பியுள்ளது.

இதனையடுத்து வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் மாநிலம் முஷாபர்பூர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் பிரபல நடிகர் சல்மான் கான், கரண் ஜோஹர், சஞ்சய் லீலா பண்சாலி, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேர் மீது சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

சல்மான் கான் உள்ளிட்டோர் கொடுத்த அழுத்தம் காரணமாக சுமார் 7 படங்களில் இருந்து சுஷாந்த் சிங் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பட வாய்ப்பு இல்லாமல் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

எனவே சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் மீது சட்டப்பிரிவு 306, 109 உள்ளிட்ட 4 பிரிவுகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா தெரிவித்துள்ளார்.

இதனிடையில் சினிமா வாய்ப்புகள் வரவிடாமல் தனது திரைப்பயணத்தை நாசமாக்கியது சல்மான் கான் தான் என தபாங் பட இயக்குநர் அபினவ் சிங் காஷ்யப் குற்றம் சாட்டியிருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Sushant Singh suicide Case filed against 8 people includes Salman Khan Karan Johar

More Articles
Follows