ஓடிடி-யில் படம் பார்க்க ரூ. 199 கட்டணமா..? தயாரிப்பாளர் தனஞ்செயன் எதிர்ப்பு

ka pae ranasingamவிஜய்சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள க/பெ/ ரணசிங்கம் படம் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு உருவாகப்பட்டுள்ளது.

ஜீ ப்ளக்ஸ் (zee plex) என்ற ஓடிடி நிறுவனம் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இதனை அக்டோபர் 2ஆம் தேதி ஆன்லைனில் பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

திரையரங்குகளைப் போலவே காட்சிக்குக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையில் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை பார்க்க ரூ.199 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் ஜீ ப்ளக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இப்படத்தை பார்க்க ரூ.199 கட்டணம் வசூலிப்பது மிக அதிகமானது என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்… “ஓடிடி தளத்தில் எந்த ஒரு படத்தையும் நேரடியாகப் பார்க்க ரூ.199 கட்டணம் வசூலிப்பது மிக அதிகமானது. மாதம் சந்தா தொகை கட்டியதன் மூலம் இலவசமாக படம் பார்க்கவே நமது பார்வையாளர்கள் தயாராகியுள்ளனர்.

கட்டணம் நிர்ணயிக்கப்பட்டால் முக்கியமான படத்துக்கு மட்டுமே கட்டணம் செலுத்துவார்கள். இந்த புதிய கட்டண முறை எப்படி வரவேற்பைப் பெறப்போகிறது என பார்க்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில் பதிலளிக்கையில்…

தியேட்டரில் 4 பேர் சென்று படம் பார்க்க டிக்கெட் விலை, பார்க்கிங் கட்டணம், ஸ்நாக்ஸ் என அனைத்துக்கும் சேர்த்து ரூ.2000 செலவாவதை விட ரூ.199 கட்டணம் செலுத்துவது சரிதான் எனவும் தெரிவித்துள்ளார் தனஞ்செயன்.

#OTT premiere charges of Rs.199/- is too expensive for any film. Our audience are prepared for only free content through subscription. The moment payment comes, they will watch only if it’s an exciting & unavoidable film. Let’s see how this new pricing strategy works for a film

Kollywood Producer G Dhananjayan about OTT price rate for Vijay Sethupathi film

Overall Rating : Not available

Latest Post