கொடி-காஷ்மோரா வசூல் எவ்வளவு? யார் முன்னிலை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளி விருந்தாக தனுஷின் கொடி மற்றும் கார்த்தி நடித்த காஷ்மோரா படங்கள் ரிலீஸ் ஆனது.

இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர்.

இவை இரண்டும் தமிழ்நாட்டில் தனித் தனியே சுமார் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது.

மேலும் இரண்டு படங்களும் தெலுங்கிலும் வெளியானது.

தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக கொடி படம் சுமார் 5 கோடி ரூபாய் வரையிலும், காஷ்மோரா படம் 6 கோடி ரூபாய் வரையிலும் வசூலித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கொடி முன்னிலையிலும் மற்றவைகளில் காஷ்மோரா முன்னிலை வகிக்கிறதாம்.

‘பைரவா’ படத்தில் விஜய் பாடியது என்ன பாட்டு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படம் பைரவா.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தில் விஜய் ஒரு பாடலை பாடவிருக்கிறார் என்பதை முன்பே தெரிவித்திருந்தோம் அல்லவா.

தற்போது அவர் எந்த மாதிரியான பாடலை பாடியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர் ஒரு ரொமான்ஸ் டூயட் பாடலை பாடியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இப்பாடல்கள் நவம்பரில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

அமெரிக்கா டூ சென்னை; ரஜினியின் தீபாவளி கொண்டாட்டம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு ஷங்கர் இயக்கும் 2.ஓ சூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வந்தார்.

ஆயுத பூஜை விழாவையும் இதன் படப்பிடிப்பில் கொண்டாடினார்.

அதன்பின்னர் திடீரென அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

அவர் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் தீபாவளியை அமெரிக்காவில் கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் 12 நாட்களுக்கு பிறகு இன்று (அக். 29 தீபாவளி) சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தப்படியே வந்தார்.

மேலும், ரஜினி வருகையை அறிந்ததும், அவரது ரசிகர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர்.

எனவே, அவர்களை பார்த்தும் கையசைத்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

‘நேற்று டிஆர்; இன்று சிம்பு..’ டபுள் குஷியில் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எவரும் எதிர்பாராத வகையில் கேவி ஆனந்த் இயக்கத்தில் கவண் படத்தில் டி.ராஜேந்தருடன் இணைந்து நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் புரியாத புதிர்.

இப்படத்திற்கு முதலில் மெல்லிசை என பெயரிட்டு இருந்தனர்.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள இப்படத்தில் காயத்ரி, ராம்திலக், சோனியா தீப்தி, அர்ஜீனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் ட்ரைலரை நாளை (அக். 30) காலை 10 மணிக்கு சிம்பு வெளியிடவிருக்கிறாராம்.

‘தம்பி டேய் கலக்கீட்ட…’ கார்த்தியை பாராட்டிய சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளி விருந்தாக நேற்று கார்த்தி நடித்த காஷ்மோரா படம் வெளியானது.

கோகுல் இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பெரும்பாலும் பாசிட்டிவ்வான விமர்சனங்களே இப்படத்திற்கு வந்துள்ளன.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த கார்த்தியின் அண்ணன் சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“பருத்திவீரன் பார்த்து, கார்த்தியை கட்டிபிடித்து பாராட்டினேன்.

ஆனால் இன்று காஷ்மோராவை பார்த்ததும், சில அடிகள் தள்ளி நிற்கிறேன்.

தம்பி டேய் கலக்கீட்ட. இப்படி நான் எதிர்பார்க்கலை.

நீ என்னை முழுவதும் ஆச்சர்யமடைய வைத்துவிட்டாய்.

கோகுல் மற்றும் படக்குழுவினர் அனைவரும் தமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு என் வாழ்த்துக்கள்.” என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர்-தனுஷ் படங்களுடன் கனெக்ஷன் ஆன சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை தொடர்ந்து மணிகண்டன் இயக்கும் படத்தில் முதன்முறையாக போலீஸாக நடிக்கிறாராம் சந்தானம்.

இப்படத்திற்கு ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என பெயரிட்டுள்ளனர்.

இது எம்ஜி.ஆரின் நல்ல நேரம் படத்தில் இடம்பெற்ற பாடலின் வரிகள் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இதில் நாயகியாக தனுஷின் அனேகன் படத்தில் நடித்த அமைரா நாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் ரோபோ சங்கர், ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இப்படத்தை வாசன் பிரதர்ஸ், சிவஸ்ரீ பிக்சர்ஸ் மற்றும் வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கவிருக்கிறார்கள்.

More Articles
Follows