‘தல தலதான்…’ அஜித் பற்றி குஷ்பூ இப்படி கூற காரணம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது.

சினிமா நட்சத்திரங்களும் இதனை புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல அரசியல்வாதியும் நடிகையுமான குஷ்பு தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

‘நான் தான் அப்பவே சொன்னனே, தல தல தான் என்று’ என டுவிட் செய்துள்ளார்.

Hmmmm…naan appave sonnen..Thala na Thala dhaan..my George Clooney is now my Hugh Jackman. .watte transformation..loving it..

— khushbusundar (@khushsundar)

மோகன்லால்-விஷால் இணையும் படத்தில் பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் விஷாலுக்கு நல்ல மார்கெட் உள்ளது.

ஆனால் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ஒரு நேரடி மலையாள படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ள இப்படத்தை உன்னிகிருஷ்ணன் இயக்குகிறார்.

‘லிங்கா’ தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இதில் நாயகியாக ஹன்சிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

சி3 ரிலீசுக்குள் ஸ்டூடியோ கீரின் நிறுவனத்தின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சி3 படத்தை ஸ்டூடியோ கிரின் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவதால் ரிலீஸ் மற்றும் புரொமோசன்களில் இப்படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், தங்களது நிறுவனத்தின் அடுத்த படைப்பான ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.

சந்தோஷ் ஜெயகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, மொட்டை ராஜேந்திரன்பாலா சரவணன், ஆர்கே சுரேஷ், சதீஷ், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பாலமுரளி பாபு இசையமைத்துள்ளார்.

மேலும் இந்நிறுவனம் சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தையும் தயாரித்து வருவது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

சிவகார்த்திகேயனை தொடர்ந்து, கமல் படத்தலைப்பில் சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைகாலமாக டாப் நடிகர்களின் ஹிட் படங்களின் தலைப்பை தேர்ந்தெடுத்து தங்கள் படங்களுக்கு வைத்து வருகின்றனர் இளைய கலைஞர்கள்.

ரஜினியின் பல படங்களின் தலைப்பை இதுபோன்று பயன்படுத்தியுள்ளனர்.

அதுபோல் கமலின் காக்கி சட்டை படத்தலைப்பை சிவகார்த்திகேயன் பயன்படுத்திக்கொண்டார்.

இந்நிலையில் சைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி, சிபிராஜ் நடிக்கவுள்ள ஒரு படத்திற்கும் கமல் படத்தலைப்பை வைக்கவிருக்கிறார்களாம்.

இதில் வரலட்சுமி மற்றும் சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இதன் பர்ஸ்ட் லுக்கை நாளை பிப்ரவரி 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Sibiraj and Pradeep Krishnamoorthy next project connect with Kamal movie title

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விஷாலை சேர்க்க கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி தாணு தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் சில நாட்களுக்குள் முன்பு விஷாலை சங்கத்தில் இருந்து நீக்கியது.

இதனையடுத்து தன்னை உறுப்பினராக மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் விஷால்.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நாளைக்குள் நடிகர் விஷாலை உறுப்பினராக மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு சேர்த்து கொள்ளவில்லை என்றால் உயர்நீதிமன்றமே உத்தரவை பிறப்பிக்கும் என்றும் கூறியுள்ளது.

High Court orders Producer council to join Vishal

சாய்பல்லவி விலகல்; விக்ரமுக்கு ஜோடியானார் தமன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த ‘வாலு’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் விஜய் சந்தர்.

இதில் நாயகியாக நடிக்க சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார் என்பதை பார்த்தோம்.

ஆனால் அவரின் கால்ஷீட் குளறுபடிகள் செய்யவே இப்படத்திலிருந்து விலகிவிட்டாராம்.

தற்போது ஆவருக்கு தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, எஸ் எஸ் தமன் இசையமைக்க உள்ளார்.

இம்மாத பிப்ரவரியில் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

கௌதம் மேனன் இயக்கிவரும் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் இந்தப்படம் என இரண்டு படத்திலும் ஒரே நேரத்தில் நடிக்கவிருக்கிறாராம் விக்ரம்.

Vikram Tamannah teams up for Vijay Chandar project

More Articles
Follows