வீட்டு உபயோக பொருட்கள் கடை மதியம் வரை.. டாஸ்மாக் கடை மாலை வரை.; வடிவேலு பாணியில் ஸ்டாலினை கிண்டலடித்த குஷ்பூ

வீட்டு உபயோக பொருட்கள் கடை மதியம் வரை.. டாஸ்மாக் கடை மாலை வரை.; வடிவேலு பாணியில் ஸ்டாலினை கிண்டலடித்த குஷ்பூ

கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மே மாதத்தில் திறக்கப்படும் என அப்போதைய அதிமுக அரசு அறிவித்தது.

இதற்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெலிவித்தனர்

திமுக தலைமையிலான எதிர்கட்சியினர் ஒரு படி மேலே சென்று ஆங்காங்கே கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கையில் பதாகை ஏந்தி மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்றைய உத்தரவில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

11 மாவட்டங்களில் மெக்கானிக் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி.

செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம்.

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி.

ஆனால் மக்களின் வாழ்வை கெடுக்கும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதியளித்தார்.

இதனை கண்டிக்கும் வகையில்..

#tasmac is far more important than everything else. Wow!! What a thought!! உங்களுக்கு வந்தா அது இரத்தம் எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னி??pls answer us மாண்புமிகு முதல் அமைச்சர் thiru @mkstalin அவர்கள்..

என வடிவேலு டயலாக்கில் ஸ்டாலினை கிண்டலடித்துள்ளார் குஷ்பூ.

முக ஸ்டாலின் என்ன பதில் சொல்வாரோ..?

Khushboo slams TN CM Stalin for opening Tasmac shops in lockdown

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *