தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
பிரபல நடிகையான இவர் தற்போது அரசியலில் கலக்கி வருகிறார்.
முதலில் தி.மு.க வில் இணைந்தார். பின்னர் 2016-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.
காங்கிரஸில் இணைந்த அவருக்கு அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
இதனிடையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் தீவிரமாக எதிர்த்த போதிலும் அதற்கு குஷ்பூ ஆதரவு தெரிவித்திருந்தார்.
எனவே விரைவில் குஷ்பூ பாஜகவில் இணையப் போகிறார் என தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னை நான் விடுவித்து கொள்கிறேன் எனவும் குஷ்பு அறிக்கை விடுத்துள்ளார்.
அதில்… அரசியல் களத்துடன் தொடர்பில்லாதவர்கள், கட்சிக்காக உழைக்க நினைக்கும் தன்னைப் போன்றவர்களிடம் அதிகாரம் செலுத்துகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியாகாந்திக்கு நடிகை குஷ்பு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Khushboo quits congress, likely to join BJP
