ஆடியோ விவகாரம்.: பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார் குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த டிவி சூட்டிங் கிட்டதட்ட 70 நாட்களுக்கு பிறகு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக சூட்டிங் ஸ்பாட் படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் சின்னத்திரை சங்கத்தின் செயலாளரான நடிகை குஷ்புவின் ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை உண்டாக்கியது என்பதை பார்த்தோம்.

அதில்.. “ப்ரஸ்காரர்கள் எங்கிருந்தாவது வந்துவிடுவார்கள். போட்டோ, வீடியோ எடுத்துக் கிழிப்பதற்கு என்று எங்கியிருந்தாவது வருவான். உட்கார்ந்து கொண்டிருப்பான்.

கோவிட் (கொரோனா) தவிர்த்து ப்ரஸ்காரனுக்கு வேறு எந்தவொரு செய்தியுமே கிடையாது. நம்மைப் பற்றி ஏதாவது போடுவதற்குக் காத்துக் கொண்டிருப்பார்கள்.” இவ்வாறு ஒருமையில் மீடியாக்களை பற்றி பேசியிருந்தார் குஷ்பு.

இந்த ஆடியோ பத்திரிகையாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் குஷ்பூ கூறியிருப்பதாவது:

“நான் ஊடகங்களைப் பற்றிப் பேசியதாக ஒரு வாய்ஸ் மெசேஜ் சுற்றி வருகிறது. அது எடிட் செய்யப்பட்டது. அது எங்கள் தயாரிப்பாளர் குழுவிலிருந்து சென்றிருக்கிறது.

எங்களுக்கு மத்தியில் இப்படி மலிவாக யோசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்.

ஊடகங்களை அவமதிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அப்படி பேசவில்லை. அது நண்பர்களிடம் நாம் பேசும் முறைதான்.

ஊடகங்கள் மீதான என் மதிப்பு அனைவருக்கும் தெரியும்… பத்திரிகையாளர்கள் (சிலர்) அதற்கு சாட்சி.

திரைத்துறையில் இந்த 34 வருடங்களில் ஒரு முறை கூட நான் அவர்களிடமோ, அவர்களைப் பற்றியோ நான் மரியாதைக் குறைவாகப் பேசுவதை அவர்கள் பார்த்திருக்கவோ, கேட்டிருக்கவோ மாட்டார்கள்.

அந்த வாய்ஸ் மெசேஜ் அரைகுறையாக உள்ளது. ஆனால் உங்களில் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

என தெரிவித்துள்ளார் குஷ்பூ.

மேலும்…. துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் யாருக்காக பணிபுரிகிறீர்களோ அவர்கள்தான் உங்களை முதுகில் குத்த முயல்கிறார்கள்.

எந்தத் தயாரிப்பாளர் இதைச் செய்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஆனால், யாரென்று நான் சொல்ல மாட்டேன். எனது அமைதியும், மன்னிப்புமே அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை. செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன.

இவ்வாறு குஷ்பூ பதிவிட்டுள்ளார்.

Khushboo apologizes for her Audio voice about Journalists

BREAKING கொரோனா பாதிப்பு.. திமுக MLA அன்பழகன் மரணம்; பிறந்தநாள் அன்றே மறைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன்.

திமுகவின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளராகவும், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர்.

61 வயதான இவர் தியாகராயநகரில் வசித்து வருகிறார்.

ஜுன் 2ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஒரு வாரமாக வெண்டிலேட்டர் உதவியுடனே சுவாசித்து வந்தார்.

அன்பழகனின் உடல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விசாரித்தார். மேலும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் விசாரித்துச் சென்றார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரும் அன்பழகனின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 8.05 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இன்று ஜெ.அன்பழகனின் பிறந்தநாளும் கூட.

அன்பழகனின் நிலை குறித்து அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாலையிலேயே மருத்துவமனைக்கு சென்றார்.

அன்பழகன் உயிர்பிரியும் நேரம் அவர் மருத்துவமனையில்தான் இருந்தார்.

அங்கு அவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஸ்டாலின் வீடு திரும்பினார்.

கொரோனா பாதிப்பால் அன்பழகன் உயிரிழந்துள்ளதால் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடலை அடக்கம் செய்யவுள்ளனர்.

கண்ணம்மாபேட்டை சுடுக்காட்டில் நல்லடக்கம் நடைபெறவுள்ளது.

இதனிடையில் அன்பழகனின் குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் என்ற படத்தை தயாரித்துள்ளார் அன்பழகன்.

Corona case DMK MLA J Anbazhagan passed away on his birthday

முருகதாஸ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாகும் ‘பிரேமம்’ நாயகி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கொரோனா பிரச்சினைக்கு பிறகு ரிலீசாகும் என தெரிகிறது.

இதனையடுத்து உருவாகவுள்ள தளபதி 65 படத்தின் தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன.

விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மடோனா செபாஸ்டியன் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மலையாளத்தில் பிளாக் பஸ்டர் ஹிட்டான பிரேமம் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமானவர் மடோனா.

தமிழில் காதலும் கடந்து போகும், ஜூங்கா, வானம் கொட்டட்டும், பவர் பாண்டி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

Madonna Sebastian roped in for Thalapathy 65

அசத்தும் ‘அசுரன்’ தனுஷ்.; சீனாவுக்கு கொண்டு போகும் தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரமாண்டமான தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் தனுஷ் நடித்த படம் அசுரன்.

தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருந்தார்.

வெற்றிமாறன் இயக்கிய இந்த படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி, கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தனுஷ் நடித்த படங்களிலேயே ரூ. 100 கோடி வசூலித்த முதல் படம் இதான்.

தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அதில் வெங்கடேஷ், பிரியாமணி நடிக்கின்றனர். அண்மையில் இப்பட போஸ்டர் இணையத்தில் வெளியானது.

இதனையடுத்து சிவராஜ் குமார் தயாரிப்பில் கன்னட மொழியிலும் அசுரன் படத்தை தயாரிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் அசுரன் சீனா மொழியில் டப் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

Dhanushs Asuran movie China language dubbing updates

பிரஸ்காரன் கிழிப்பான்.. குஷ்பூவின் திமிர் பேச்சு.; ஆடியோ ரூபத்தில் ஆப்பு.! (Audio)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோ.. ஹீரோயின்கள்… இவர்கள் பிரபலமாக ஒரே காரணம் மீடியா தான்.

இவர்களில் ஒரு சிலர் புகழின் உச்சத்திற்கு சென்றுவிட்டால் மீடியாவை மதிப்பது இல்லை. அந்த வரிசையில் நடிகை குஷ்பூவும் தற்போது தன்னை இணைத்து கொண்டுள்ளார் எனலாம்.

அவர் தன் திரையுலக சம்பந்தபட்ட ஒரு குரூப்பில் ஆடியோ வெளியிட அதுவே தற்போது அவருக்கு ஆபத்து (ஆப்பு) ஆக அமைந்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று அதிகமுள்ளதால் சில தளர்வுகள் மற்றும் விதிமுறைகளுடன் டிவி சூட்டிங் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

டிவி சீரியல் ஷூட்டிங் நடத்துபவர்களுக்கு குஷ்பு ஒரு ஆடியோ அனுப்பி உள்ளார். அதில் தேவை இல்லாமல் பத்திரிகையாளர்களை ஒருமையில் அவன் இவன் என விமர்சித்துள்ளார்.

இந்த ஆடியோ லீக்கான நிலையில் ஒட்டுமொத்த மீடியாக்களின் கோபத்திற்கும் ஆளாகியிருக்கிறார் நடிகை குஷ்பு.

மேலும் குஷ்பூ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வந்துள்ளன.

Actress Khushboo scolding Media Audio leaked

 

BREAKING கொரோனா அடி அசுர அடி..; ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு..– ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகையே அச்சுறுத்தும் கொடிய வைரசாக கொரோனா உருவெடுத்துள்ளது.

இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி வருகிறது.

கிட்டதட்ட 6 மாதங்களாக உலக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த கொரோனா விழிப்புணர்வு பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு.. என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும்… ரசிகர்கள் தங்கள் குடும்பத்தினரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து பாதுகாப்பதே அடிப்படை கடம…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வரும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு

Rajini statement about Corona awareness and prevention

அந்த அறிக்கை…

More Articles
Follows