ரஜினிகாந்தின் ‘மன்னன்’ பட ஹீரோயின்கள் பாஜக.-வில் இணைந்தனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி. வாசு இயக்கிய ‘மன்னன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக விஜயசாந்தி & குஷ்பூ நடித்திருந்தனர்.

தற்போது விஜயசாந்தி & குஷ்பூ அரசியலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

விரைவில் ரஜினியும் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார்.

அண்மையில் காங். இருந்து விலகி பாஜக.வில் இணைந்தார் குஷ்பூ.

இவரை தொடர்ந்து விஜய்சாந்தியும் இணையவுள்ளார்.

தமிழ் & தெலுங்கில் ஆக்ஷ்ன் ஹீரோயினாக நடித்தவர் விஜயசாந்தி.

அதன்பின்னர் ‘தல்லி தெலங்கானா’ என்னும் தனிக்கட்சியை தொடங்கினார்.

பின்னர் கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.

இதற்கு அடுத்து பாஜகவிலிருந்து விலகி தெலங்கானா ராஷ்டிர சமிதியில் இணைந்தார்.

அங்கிருந்தும்விலகினார்.

அதன்பின் காங். கட்சியின் பிரச்சார குழு தலைவராக செயல்பட்டார் விஜயசாந்தி.

இந்தநிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார் விஜயசாந்தி.

இந்தநிலையில் பாஜக.வில் இணைய டெல்லி சென்றுள்ளார். அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்கவுள்ளார்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் விஜயசாந்தி சந்திக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

Khushboo and Vijayasanthi joined in BJP

எந்த தொகுதியில் ரஜினி போட்டி..? தேர்தல் பிரசாரத்துக்கு செல்வேன்… – ரஜினி அண்ணன் சத்யநாராயணா பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார் ரஜினிகாந்த்.

எனவே பெங்களூரில் உள்ள தனது அண்ணன் சத்யநாராயணா வீட்டுக்கு சென்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினார்.

இதனையறிந்த ரஜினி ரசிகர்கள் சத்யநாராயணா வீட்டு வாசல் முன்பு திரண்டனர்.

இதனால் வெளியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு கைகளை உயர்த்தி Flying Kiss கொடுத்தார்.

ரஜினி சென்னை சென்ற பின்னர் அவரது சகோதரர் சத்ய நாராயணா ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது…

“ரஜினிக்கு எங்கள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்.

இரவு 8 மணிக்கு வந்தார். காலை 5 மணிக்கு கிளம்பி விட்டார். 12 மணிக்கு சென்னை சேர்ந்துவிட்டதாக போனில் பேசி தெரிவித்தார்.

இங்கு கர்நாடக அரசியலில் ரஜினிகாந்தின் பங்களிப்பு இருக்காது. அவரது கவனம் தமிழக அரசியலில் மட்டும்தான் இருக்கும்.

அவர் தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்து நாங்கள் பேசவில்லை.

டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பார். நான் தேர்தல் பிரசாரத்துக்கு கண்டிப்பாக செல்வேன்” என்றார்.

Rajinikanth brother Sathya Narayanan about Rajini’s political entry

தமிழருவி மணியனை ஏன் சேர்த்து கொண்டோம் என ரஜினி வருத்தம்..; தி.முக ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட, 3 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது… ரஜினி கட்சி பற்றியும்.. திமுக, அதிமுகவுடன் ரஜினி கூட்டணி அமைக்க மாட்டார் என தமிழருவிமணியன் கூறியது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு பதிலளிக்கும் போது…

“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.

ரஜினி கட்சி அறிக்கை வெளியாகட்டும். பிறகு அது பற்றி பேசலாம்.

‘தமிழருவி மணியனை ஏன் சேர்த்து கொண்டோம்? என ரஜினி வருத்தப்பட்டதாக தனக்கு தகவல் வந்திருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

ரஜினி கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth upset for Tamilaruvi Manian posting says MK Stalin

அம்மா நிச்சயதார்த்த புடவையை 32 வருடத்திற்கு பிறகு நலங்குக்கு கட்டிய ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக் உடன் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் நடித்தவர் நிஹாரிகா கொனிடேலா.

இவர் சிரஞ்சீவியின் தம்பி நடிகர் நாகபாபுவின் மகள் .

நிஹாரிகா & காதலர் சைதன்யா ஜொன்னலகட்டா ஆகியோரது நதிருமண நிச்சயதார்த்தம் ஆகஸ்டில் நடைபெற்றது.

இவர்களது திருமணம் நாளை மறுநாள் டிசம்பர் 9-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற உள்ளது.

திருமணத்துக்கு முன் நலங்கு நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.

அதில் 32 வருடங்களுக்கு முன்னர் தனது அம்மா நிச்சயதார்த்தத்துக்கு அணிந்த பட்டுப்புடவையை நிஹாரிகா அணிந்துள்ளார்.

அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மணப்பெண்ணின் தந்தை நடிகர் நாகபாபு கூறுகையில்.

எனது மனைவி அழகாக இருக்கிறார்.. மகள் நிஹாரிகா தேவதையாக இருக்கிறார்.

நடிகர் சிரஞ்சீவி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

Niharika Konidela wears her mom’s engagement saree for a pre-wedding function

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் ‘மக்கள் செல்வன்’ படத்தில் இணைந்த சம்யுக்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் ‘துக்ளக் தர்பார்’.

இவர்களுடன் பார்த்திபன், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திலிருந்து அதிதிராவ் விலகியதால் அவருக்கு பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம் ஆனார்.

இப்படத்துக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுத 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

96 பட புகழ் கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.

வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரித்து வருகிறது.

அரசியலை மையப்படுத்தி இப்படத்தை உருவாகி வருகின்றனர்.

இந்நிலையில் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா இணைந்துள்ளார்.

Bigg Boss Samyuktha is on board for Vijay Sethupathi’s tughlaq durbar

அறத்தின் பக்கம் நிற்பவனை சங்கி & பி டீம் என கூறுவதா..? கல்வியிலும் கறைவேட்டிகள் மூக்கை நுழைப்பது ஏன்.? கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ 280 கோடி முறைகேடு் ஊழல் புகார் எழுந்தது.

எனவே தமிழக அரசு நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.

சூரப்பாவின் செயல்பாடுகளை அ.தி.மு.கவுடன் இணைந்து தி.மு.கவும் விமர்சனம் செய்து வருகின்றது.

இந்த நிலையில், சூரப்பாவுக்கு ஆதரவாக கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டார்.

அதில்… ‘எவனோ எழுதிய மொட்டைக் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணை குழு அமைத்துள்ளனர்.

அண்ணாப் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்களையும், அண்ணாப் பல்கலைக்கழக வாகனங்களையும் பயன்படுத்தியவர்களையும் விசாரித்து விட்டீர்களா?

உயர் கல்வித்துறை அமைச்சர் 60 லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டுதான் பணி நியமனம் செய்கிறார் என்று ஜூனியர் விகடனில் செய்தி வந்ததே விசாரித்துவிட்டீர்களா?

தேர்வு தேர்ச்சி ஆகியவை கல்வியாளர்கள் கடமை. கறைவேட்டிகள் இங்கேயும் மூக்கை நுழைப்பது ஏன்?

இதுவரை காசு கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள், தற்போது மதிப்பெண் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சி செய்கிறீர்களா?

சூரப்பாவின் அரசியல் நிலைப்பாடுகள் மீது மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்.

ஆனால், ஒருவர் நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால் கமல்ஹாசன் நான் சும்மா இருக்க மாட்டேன்.

நேர்மையாளர்களின் கூடாரமான மக்கள் நீதி மய்யமும் சும்மா இருக்காது.

சூரப்பா இன்னொரு நம்பிநாராயணனா?’ என்று கடுமையாக பேசியிருந்தார் கமல்

சூரப்பாவும் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இதனால் கமல் மீது அரசியல்வாதிகளின் கண்டனம் எழுந்தது. கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

அவர், சங்கி, பா.ஜ.கவின் பிடீமாக செயல்படுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன.

இதனையடுத்து தன் ட்விட்டரில் தன் கருத்தை தெரிவித்துள்ளார் கமல்.

அதில்… “அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது.

வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை.

திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?

தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம்.

ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்.

MNM leader Kamal Haasan clarifies his political stand over Soorappa issue

More Articles
Follows