‘அதுல இல்லாமலே பேச வைச்சவரு சுந்தர்.சி’ – குஷ்பு பெருமிதம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என அனைத்திலும் வெற்றி வாகை சூடி வருபவர் சுந்தர் சி.

தற்போது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ரூ.100 கோடி பட்ஜெட்டில் படம் இயக்கவிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் #SundarC என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்ட் ஆனது.

இதுகுறித்து இவரின் மனைவியும் நடிகையுமான குஷ்பூ, தன் ட்விட்டரில் பக்கத்தில் கூறியதாவது….

“எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் இல்லாமலே தன் பணி மூலம் தன்னை பற்றி பேசவைத்தவர் சுந்தர் சி. நான் பெருமை கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

முதலில் விஜய்சேதுபதி… அப்புறம்தான் டி.ஆர் வருகிறார்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் டி.ராஜேந்தர் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்துடன் இணைந்து சுபா மற்றும் கபிலன் வைரமுத்து எழுதுகின்றனர்.

இந்த வித்தியாசமான கூட்டணி அறிவிக்கப்பட்ட உடனே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க, அபிநந்தன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜூலை 11ஆம் தேதி இதன் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொள்கிறார்.

சில நாட்களுக்கு பின்னர்தான் டி.ராஜேந்தர் இதில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

விஜய் ரசிகர்களை பெருமைப்படுத்திய தெறி டீசர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது.

இப்படத்தின் டீசர் மார்ச் 20ஆம் தேதி வெளியானது.

வெளியான 10 மணி நேரத்திற்குள் 10 லட்சம் பார்வையாளர் எண்ணிக்கையை இது பெற்றது.

மேலும் 1 லட்சம் ஹிட்ஸ்களையும் அள்ளியது. இது யூடியுப்பில் சாதனையாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது 1 கோடி பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.

விஜய் நடித்த படங்களிலேயே அதிக யுடியூப் பார்வைகளைப் பெற்ற டிரைலராக இது பார்க்கப்படுகிறது.

எனவே விஜய் ரசிகர்கள் இது தங்களுக்கு கிடைத்த பெருமை என தெரிவித்து வருகின்றனர்.

கேன்சர் ரசிகைகளுக்கு கூந்தலை தானம் செய்த சார்மி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்புவுக்கு ஜோடியாக ‘காதல் அழிவதில்லை’ படத்தில் அறிமுகமானவர் சார்மி.

இதனைத் தொடர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் நடித்து வந்தார்.

தெலுங்கு ரசிகர்களுக்கு இவரது தாராள மயம் அத்துப்படி.

இந்நிலையில், தனது அழகான கூந்தலை வெட்டி அதை இரண்டு கேன்சர் நோயாளிகளுக்கு தானமாக வழங்கியுள்ளார்.

அந்த இருவரும் சார்மியின் தீவிர ரசிகைகளாம். அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சார்மியை சந்தித்துள்ளனர்.

அப்போது சார்மியின் கூந்தலை பார்த்து வியந்து போனார்களாம்.

இதனால் அவர்களுக்காக தனது கூந்தலை கட் செய்து விக்காக தயாரித்து அன்பளிப்பாகக் கொடுத்து விட்டாராம்.

இவரின் இந்த வித்தியாசமான விக் தானம்தான் தற்போது தெலுங்குப் பட ஹாட்டான செய்தி.

வட இந்தியாவிலும் மாஸ் காட்டும் கபாலி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் படமாக இருந்தாலும், உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் கபாலி.
முதன்முறையாக ஒரு தமிழ் படம் மலாய் மொழியில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வடஇந்திய வெளியீட்டு (இந்தி) உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.

வட இந்தியாவில் மட்டும் 1,000 தியேட்டர்களில் இப்படத்தை திரையிட இருக்கிறார்களாம்.

கபாலி இந்திப் படத் தொலைக்காட்சி உரிமம் ஸ்டார் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி எங்க விஜய்யை பத்தி ஒரு பயலும் அப்படி சொல்ல முடியாது.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் சினிமாவில் நடிக்க வந்து 30 ஆண்டுகளை கடந்து விட்டாலும் தற்போது தான் 60 படங்களை தொட்டு இருக்கிறார்.

இவர் 60 படங்களை கவர்ந்தாலும் இவரின் தோற்றம் எல்லாம் படத்திலும் ஒன்றுதான்.

தன் கெட்டப்பையும் உடல் அமைப்பையும் கொஞ்சம் கூட மாற்றிக் கொள்ளவே மாட்டார் என்ற குற்றச்சாட்டு வெகுநாட்களாக நீடித்து வருகிறது.

இதனிடையில் தெறி படத்தில் சிறிய மாற்றத்துடன் கிகை அலங்காரம் செய்துக் கொண்டார். மேலும் நரைத்த தாடியுடன் தோன்றினார்.

இந்நிலையில், தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 60 படத்திற்காக 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த விஜய் ரசிகர்கள், இனி ஒரு பயலும் விஜய் தன் உடல் அமைப்பை மாற்றி கொள்ளவில்லை என கூறமுடியாது என தெரிவித்துள்ளனர்.

More Articles
Follows