வெப் சீரிஸ் தயாரிப்பாளராகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளம் வயதிலேயே தேசிய விருதை வென்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் தற்போது தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக் காயிதம்’ ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரி பாட்டா’ மற்றும் ‘மிஸ் இந்தியா’, ‘ரங் தே’ ஆகிய படங்களில் நடிக்கிறார்.

இந்த நிலையில் இவர் ஒரு வெப் சீரிசை தயாரித்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் இது வெறும் வதந்தி என தெரிய வந்துள்ளது.

கீர்த்தியின் அப்பா சுரேஷே ஒரு பிரபல தயாரிப்பாளர் தான்.

ஆனால் கீர்த்தியின் கவனம் முழுவதும் தற்போது நடிப்பில் இருப்பதால் தயாரிப்பில் கவனம் செலுத்த விரும்பவில்லையாம்.

வெடிப்பது செய்தியாகவும் நிவாரணம் உதவியாகவும் கடக்கிறது..; கடலூர் வெடி விபத்தில் 9 பேர் மரணம் குறித்து கமல் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே குருங்குடி என்ற பகுதியில் நாட்டு வெடி தயார் செய்யும் தொழிற்சாலை உள்ளது.

இன்று (செப். 4) காலை குருங்குடி ஐயங்குளம் அருகே உள்ள காந்திமதி என்பவருக்குச் சொந்தமான நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீபாவளிப் பண்டிகையையொட்டி நாட்டு வெடி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, வெடி மருந்தை இடிக்கும்போது திடீரென வெடி மருந்து வெடித்துள்ளத. இதில் தொழிற்சாலை வெடித்துச் சிதறியது.

இந்த வெடி விபத்தில் தொழிற்சாலை உரிமையாளர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடையின் உரிமையாளர் காந்திமதி (58), அதே ஊரைச் சேர்ந்த மலர்க்கொடி (65), லதா (40), சித்ரா (45), ராசாத்தி (48) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்தில் உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த ருக்மணி (38), ரத்னாயாள் (60), தேன்மொழி (35), அனிதா (26) ஆகிய 4 பேரும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களும் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வெடி விபத்து அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து நடிகரும் மநீம தலைவருமான கமல் தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்…

மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து.9 உயிர்பலிகள்,குருங்குடி கிராமத்தில்.வருடந்தோறும் வெடிப்பது செய்தியாகவும்,இறப்புகள் இழப்பிற்கான அரசு நிவாரண உதவியாகவும் கடக்கிறது.தொழிலாளர்களின் குடும்பங்கள் கதியற்று நிற்கின்ற அவலம் தீர,அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே தீர்வு

இவ்வாறு பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

துணிச்சலாக பாம்பை பிடித்து அடிக்காமல் விட்ட நடிகை கீர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தியும் நடிகையாக உள்ளார்.

தும்பா என்ற தமிழ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தற்போது ஹெலன் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குநர் கோகுல் இயக்கத்தில் இப்படம் உருவாகுகிறது.

அப்பா – மகள் உறவை மையப்படுத்தி இந்த படம் உருவாகுகிறது.

இதில் கீர்த்தி உடன் அவரது தந்தை அருண் பாண்டியனும் நடிக்கிறார்.

கொரோனா ஊரடங்கால் சினிமா சூட்டிங்குகள் நிறுத்தப்பட்டு இருந்தமையால் சொந்த ஊருக்குச் சென்ற கீர்த்தி விவசாய பணிகளை செய்து வருகிறார்.

அந்த வீடியோக்களை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தனது வீட்டுக்குள் வந்த பாம்பை தனி ஒரு ஆளாக துணிச்சலாக பிடித்துள்ளார் கீர்த்தி.

அதை கொல்லாமல் (அடிக்காமல்) வெளியே கொண்டு விட்டுள்ளார்.

அதை வீடியோவாக தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் கீர்த்தி.

டாப்ஸி-விஜய் சேதுபதி-யோகிபாபுவை இயக்கும் நடிகர் சுந்தரராஜனின் மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான சுந்தர்ராஜனின் மகன் தீபக்.

இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தீபக் தற்போது இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தில் டாப்ஸி கதையின் நாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் யோகி பாபு மற்றும் ஜெகபதிபாபு நடிக்கின்றனர்.

ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இதன் சூட்டிங் ஓரிரு தினங்களாக ஜெய்ப்பூரில் தொடங்கி நடைபெறுகிறது.

ஜெயம் ரவியுடன் ஜனகனமன படத்திலும் டாப்சி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் பார்ப்பதுதான் மக்களின் வேலையா.? கடுப்பேத்திய கமல் புரோமோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் சீசன் 1, சீசன் 2, சீசன் 3 ஆகியவரை ஒவ்வொரு ஆண்டும் மக்களின் பிரதான பொழுதுபோக்காக மாறிவிட்டது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் இந்த 3 சீசன்களை நடிகர் கமல்ஹாசனை தவிர வேறு எவருமே சிறப்பாக தொகுத்து வழங்க முடியாது என்றளவுக்கு சிறப்பாக கையாண்டு வருகிறார்.

இந்தாண்டு ஒளிப்பரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியையும் அவரே தொகுத்து வழங்கவுள்ளார்.

மே, ஜீன் மாதங்களில் ஒளிப்பரப்பாக வேண்டிய இந்த நிகழ்ச்சி கொரோன ஊரடங்கால் சூட்டிங்குகள் நிறுத்தப்பட்டது.

விரைவில் இதற்காக சூட்டிங் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இதற்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டது.

அதில் கமல் பேசும்போது.. நாமே தீர்வாவோம். இத்தனை நாட்கள் வீட்டில் முடங்கி கிடந்தோம். இனி நம் வேலையை பார்ப்போம் என்கிறார்.

இறுதியாக விரைவில் ஒளிப்பரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியை பாருங்கள் என்கிறார்.

கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி தவித்த மக்கள் தற்போது தான் அரசு கொடுத்துள்ள தளர்வினால் வெளியே வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் வேலையை பாருங்கள் என்று கூறிவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை பாருங்கள் என கமல் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? என்கின்றனர் மக்கள்.

ஒரு சிறந்த கலைஞனாகவும் அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கும் மக்கள் இப்படி பேசலாமா? எனவும் கேட்கின்றனர்.

கல்யாண மண்டபமாகிறது AVM கார்டன்..; கடைசி யோக(ம்) பாபுக்கு கிடைச்சுது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

60 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்திய சினிமாவுக்கே கலங்கரை விளக்கமாக சென்னையே இருந்தது.

சென்னையில் மட்டும் ஏவிஎம், விஜய வாஹினி, ஜெமினி, கற்பகம், சத்யா உள்ளிட்ட 20க்கும் மேற்ப்பட்ட ஸ்டூடியோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

தெலுங்கு கன்னடம் மலையாள சினிமா படப்பிடிப்புகள் சென்னையை விட்டு அவரவர் மாநிலத்திற்கு சென்ற போது ஒவ்வொரு ஸ்டியோக்களாக மூடப்பட்டன.

மேலும் சிலர் அவுட் டோர் சூட்டிங்குக்காக வெளிநாடுகள் பறப்பதால் இருக்கிற ஸ்டூடியோக்களும் வேலை இல்லாமல் போனது.

பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்ட போதும் ஏவிஎம் ஸ்டூடியோ மட்டும் சினிமாவுக்காக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.

அங்கும் மெல்ல மெல்ல அவ்வப்போது மாற்றங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.

ஸ்டூடியோவுக்குள் அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனை உருவானது.

அண்மையில் கொரோனா ஊரடங்கால் ஏவிஎம் ரஜேஸ்வரி தியேட்டரும் மூடப்பட்டுள்ளது.

அங்கும் வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் ஏவிஎம் கார்டன் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெறுவது குறைந்து வருகிறது. மேலும் டப்பிங் பணிகளும் குறைந்துள்ளன.

இதனையடுத்து ஏவிஎம் கார்டனை திருமண மண்டபமாக மாற்ற முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த கார்டனில் நடிகர் யோகிபாபு நடித்த மண்டேலா என்ற படத்தின் படப்பிடிப்பு தான் கடைசியாக நடைபெற்றதாம்.

More Articles
Follows